பட்டிமன்றம்20- பெண்சுதந்திரம்

பழைய பட்டிமன்ற இழையில் வேறு விஷயங்களும் புகுந்துவிட்டதால் அதே தலைப்பிலான பட்டிமன்றம் இந்த இழையில் தொடரப்படப் போகின்றது. தோழிகள் தங்கள் வாதங்களை எடுத்து வைத்து பட்டிமன்றதை சுவாரசியமாக்க கேட்டுக் கொள்கிறேன்.

"இன்றைய காலக்கட்டத்திற்கு, பெண் உரிமை மற்றும் சுதந்திரம் என்பது அவரவரின் இடச்சூழலை பொருத்து இருக்கிறது.. ஆனால் பொதுவாக அது வளர்ந்து வருகிறதா? இல்லை பெயரளவில் மட்டும் உள்ளதா?"

வாதங்களை அள்ளி வீசுங்கள். நான் வந்து அள்ளிக்கறேன்


கடமை அழைப்பதால் தற்சமயம் வாதத்தை ஒத்தி வைக்கிறேன்!
நன்றி! வணக்கம்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


கடமை அழைப்பதால் தற்சமயம் வாதத்தை ஒத்தி வைக்கிறேன்!
நன்றி! வணக்கம்!
எங்களணி நண்பர்களே போட்டு தாக்குங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

பெண் சுதந்திரம் உயர்ந்துள்ளது, ஆனாலும் பெண்கள் வேலைக்கு செல்வது குடும்ப சூழ்நிலைக்காக தான், வேலைக்கு செல்லும் இடங்களில் பெண்களை சில ஆண்கள் தவறாக பார்க்கிறார்கள். அதை பார்க்கும் போது பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதா என்று சந்தேகம் வருகிறது. குடும்ப சூழ்நிலைக்காக இதை யெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

அன்புடன்
பவித்ரா

ஆம் என் அணியினர் சொல்வது போல் கணவர் அனுமதி கிடைத்தாலும் பலர் தனித்து ஏதும் செய்வதில்லை. என்னையே எடுத்துக்கங்க, சிரியாவில் தனியாக சில முறை போனது உண்டு, என்னவர் தனியா எல்லாம் செய்ய பழக சொல்வார், ஆனா நானோ எனக்கு ஒரு செருப்பு வாங்க கூட அவரை வர சொல்வேன். இது சுதந்திரம் இல்லாமல் இல்லை, அவருடன் போக ஒரு விருப்பம். அவ்வளவு தான். அதை ஏற்று அவர் என்னுடன் வருவதே அவர் என் விருப்பத்துக்கு விட்டு குடுப்பதை காட்டும்.

நான் வேலை பார்த்த சமயத்தில் எல்லா இடங்களுக்கு தனியே போவது தான் வழக்கம். முதன் முதலாக ஆந்திரா போறேன், கேரளா போறேன் என்று என்னுடன் எவரும் துணைக்கு வந்ததும் இல்லை, அனுமதி மறுத்ததும் இல்லை. இது என் பெற்றோர் எனக்கு குடுத்த சுதந்திரம் இல்லையா??? பக்கத்து தெருவுக்கு அண்ணனை துணைக்கு கூட்டிட்டு போன என் அம்மாவை விட எனக்கு உரிமையும், சுதந்திரமும் வளரவில்லையா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே!

நிறுவனத்துல அல்லது ஒரு தொழிற்கூடத்துல ஆணுக்கு சமமா பெண்ணும் வேலை செய்யிரது மட்டும் சுதந்திரம் கிடையாது. அந்த ஆண் வாங்கும் சம்பளமும், கூலியும் பெண்ணுக்கும் சமமா கிடைத்தால் தானே சுதந்திரம் வளர்ந்துள்ளது எனலாம.

சொத்து பிரிப்பது தந்தையின் சொத்தில் தான் மகளுக்கும், மகனுக்கும் சரிசமம். இங்கே எத்தனை மனைவிமார்கள் கணவன் சொத்தில் சரிசமமாக இருக்கு. கணவன் சம்பாதிப்பது கணவன் பெயரில் சொத்து, விருப்பப்பட்டால் தான் மனைவிக்கு இல்லையேல் முழுவதும் வாரிசுகளுக்கு மட்டும்தானே!

நடுத்தர வர்க்க பெண்கள் படிக்கும் பள்ளியில் தொடங்கி,கல்லூரி,அலுவலகம் என்று படிபடியாக முன்னேருவது பெண்சுதந்திரம் வளர்ந்ததினால் தான் என்பதல்ல எனதருமை எதிர்கட்சி உறுப்பினர்களே. அங்கே உண்மையில் வளர்ந்த்தது சகிப்புத் தன்மைதான்.

அன்றே வாத்தியாரின் பார்வை சரியில்லை என்று சுதந்திரமாக தந்தையிடமும்,அவ்வளவு ஏன் தலைமை ஆசிரியரிடம் எல்லாராலும் சொல்லமுடிந்ததா?

கல்லூரியில் நடக்கும் கேலி கிண்டல்கள் தொந்தரவுகள் தந்தையிடம் எல்லாராலும் சொல்லமுடியுமா?

மேலதிகாரியின் கீழ்த்தரமான பார்வைகளும் பேச்சுக்களையும் கணவனிடம்தான் சொல்ல முடியுமா?

பள்ளி மாணவி சொல்லியிருந்தால் என்ன ஆகும் இனி நீ பள்ளிக்குப் போகாதே....கல்லூரிக்குப் போகாதே......... அலுவலகத்திற்கு போகாதே...... என்பதுதானே இருக்கும்.

மாறாக பிரச்சனைகளைத் தீர்த்து நமது சுதந்திரத்தை நிலை நாட்டியிருப்பார்களா!

எனவே பெண்கள் முன்னேறுகிறார்கள் என்பது சகிப்புத்தன்மை என்ற விதை பெண்கள் மத்தியில் வேர்விட்டு விருச்சமாய் வளர்ந்ததினால் தானே அன்றி சுதந்திரம் வளர்ந்ததினால் அல்ல!
நன்றி
வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வருவேன்.

இந்த வாய்ப்பு கூட குழந்தை தூங்கியதால்தான் கிடைத்தது. கணவரிடம் விட்டு விட்டு அறுசுவையில் உறையாட இன்னும் என் சுதந்திரம் வளரவில்லை மற்ற தோழிகளுக்கும் அப்படிதான் என்று நினைக்கிறேன்.....

அச்சச்சோ அடி கிடைக்கப்போகுன்னு நினைக்கிறேன் விடு ஜூட்.....

Don't Worry Be Happy.

ரொம்ப நல்ல தலைப்பு. நானும் என்னுடைய ஆதங்கத்தைச் சொல்லிக்கிட்டு போய்டுறேன். பெண் சுதந்திரம் வளரவில்லைன்னு வாதாட வந்திருக்கிறேன். முதலில் மன்றத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

//முன்பெல்லாம் பெண்களை மாலை 6 மணிக்கு மேல் வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.ஆனால் இப்போது இரவில் பணி செய்கிறார்கள்// இப்பவும் வேலைக்கு மட்டும் போகலாம். ஆண் அனுமதியுடன். Escort சகிதமாக.

//அந்த காலத்தில் இப்படி நாம் பேசுவது போல் நம் தாயாரோ, பாட்டியோ பேசி இருக்க முடியுமா// அந்த காலத்துல தெருவிலயும் திண்ணையிலயும் உக்காந்து பேசினாங்க. இன்னைக்கு கம்ப்யூட்டர் முன்னால உக்கார்ந்து பேசுறீங்க. சுதந்திரத்தில என்ன மாற்றம் இங்க?

//கல்பனா சாவ்லா,சுனிதா வில்லியம்ஸ் இவர்கள் பெண் சுதந்திரத்திற்கு நல்ல உதாரணம்.// உதாரணத்துக்கு கூட வெளிநாட்டில் வாழறவங்க அல்லது வாழ்ந்தவங்களத்தான் கூப்பிட வேண்டியிருக்கு

//ஏன் என்னையே உம். ஆக எடுத்து கொள்ளுங்கள்.......// இது வாதத்துக்கு சரிப்படாது. நானும் இப்படி சொல்ல முடியும். "உதாரணமா என்னையே எடுத்துகோங்க. எங்க வீட்டுல எங்க அம்மாவுக்கு என்ன சுதந்திரம் இருந்ததோ அது தான் எனக்கும் இருக்கு". எங்கையும் வளரல.

//இப்ப சில பெண்களின் கணவன்மர்கள் வெளிநாடுகளில் வேலை செய்துக் கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் தங்கள் மணைவியை அங்கு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலை. அப்போது இங்கு இருக்கும் பெண் தன் தேவைகளையும் பார்த்துக் கொண்டு தன் குடும்பதார்களின் தேவைகளை பூர்த்தி செய்துக் கொண்டு பிள்ளைகளையும் கவனித்துக் கொண்டு ஒரு முழு குடும்ப தலைவியாக தன்னை வெளிப்படித்திக் கொள்கிறார்கள்// "இப்ப" இல்லங்க இது காலம் காலமா நடந்துகிட்டு இருக்கு. என்னமோ புதுசா ஆம்பிளைங்க எல்லாம் வெளிநாடு போறதா சொல்றீங்க.

//ஏங்க உலக அழகி பிரபஞ்ச அழகி உள்ளுர் அழகி என்று பெண்கள் உலகம் முழுவதும் கலக்குறாங்கலே சுதந்திரம் இல்லாமையா?? // அழகிப் போட்டிய நடத்துவது ஆண்களும் வியாபார நிறுவனங்களும். அவர்களுக்காக ஏற்படுத்திக் கொண்டது. பெண்களை ஒரு போகப் பொருளாகப் பார்க்கும் இடம் அது. அதப்போய் பெண் சுதந்திரத்துக்கு சொல்றீங்களே!!!

//ஆனா நம்ம காலத்தில் நம்ம எடுக்கும் எந்த ஒரு முடிவும் சரியானதத்தான் இருக்கும்னு அவரவர் கணவரே உற்சாகப்படுத்துறாங்க. // இதெல்லாம் சும்மா சில குடும்பங்களில் நடப்பது. இது அந்தக் காலத்திலும் இருந்தது. எங்க பாட்டிதான் எல்லாத்தையும் பாத்துகிட்டாங்க. தாத்தா எல்லா பொறுப்பையும் பாட்டிகிட்ட தான் கொடுத்திருந்தாரு.
வேலைக்கு போன்னும் போகாதேன்னும் "கட்டாயப் படுத்துறது" இந்த காலத்துல தான். இரண்டுமே பெண்களுக்கு சுதந்திரம் இல்லைங்கிறதைத்தான் சொல்லுது. அப்ப எப்படி போகாதேன்னு அடக்கி வச்சாங்களோ அப்படித்தான் இப்போ போன்னு அதிகாரம் பண்றாங்க. அப்போதும் இப்போதும் "முடிவாக" முடிவெடுப்பது ஆண் வர்க்கமே.
பெற்ற மகளிடமே தவறிழைப்பதும், கணவனே மனைவியை தவறான வழிக்கு கட்டாயப் படுத்துவதும் இந்த காலத்தில் தான். தினமும் பேப்பர் படிக்குரீங்களா? இல்லையா??

// 1.பலத் தொழில்களின் கடினமான உடல் உழைப்பு இல்லாத துறைக்கு பெண்களைதான் அமர்த்த நினைக்கிறார்கள். பெண் சுயமாக சிந்தித்து எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும் என அவள் தனது உரிமையை சரியான முறையில் உணர்த்தியதால தானே..
2.இன்று படித்து முடிக்கும் அனைத்து பெண்களும் படிப்புக்கு ஏற்றவாறு சம்பாதித்து 25 அல்லது 26 வயதிதான் திருமணம் செய்கிறார்கள்.இதெல்லாம் பெண் சுதந்திரத்தைதான் குறிப்பிடுகிறது.//

இந்த வேலை பாக்குறோம், சம்பாதிக்கிறோம், dress - அ போடுறோம் இதெல்லாம் சுதந்திரதினாலன்னு யார் சொல்லிக் கொடுத்தாங்கன்னு தெரியல. வீட்ட விட்டு வெளிய வந்திட்டா சுதந்திரம் கிடைச்சிடிசீன்னு அர்த்தமாங்க. நம்மளை ஆட்டிவைக்கிற remote - அ வேறு ஒருத்தர்கிட்ட (கணவர் அல்லது அப்பா) கொடுத்துகிட்டு வந்திட்டு எப்படிங்க சுதந்திரம்ன்னு பேச முடியுது.

வேலை - முன்பெல்லாம் வேலை என்பது பெரும்பாலும் உடல் உழைப்பு சம்பந்தப்பட்டது. ஆண்களுடன் பெண்கள் போட்டியிடுவது கடினமாக இருந்தது. வேலைக்கு சென்றாலும், ஆண்கள் அளவு வேலை செய்ய முடியாததால் சம்பளமும் குறைவு. எனவே வேலைக்கு செல்வதை தவிர்த்தோம். இப்போ அப்படி இல்லை. வேலை பெரும்பாலும் மூளை சம்பத்தப்பட்டது. இதில் ஆண்களை விட பெண்களுக்கே advantage -அதிகம். பெண்களின் மூளை, ஒரே நேரத்தில் பல விஷயங்களைப் பற்றி சிந்திக்கும் திறன் உள்ளது. அதனால் நாம் வேலைக்கு செல்ல ஆரம்பித்தோம். இது நாட்டின் வியாபாரம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம். இதுக்கும் பெண் சுதந்திரத்துக்கும் சம்பந்தமே இல்ல. நிறுவனங்களுக்கு பெண்களை வைத்து வேலை வாங்கினால் லாபம் எனப் பட்டது. வீட்டில் உள்ளவர்களுக்கு பெண்ணை வேலைக்கு அனுப்பினால் வீட்டின் பணப் புழக்கம் அதிகமாகும் எனப் பட்டது. அவர்கள் கூப்பிட்டார்கள். இவர்கள் "அனுப்பி வைக்கப் பட்டார்கள்". அல்லது பொருளாதாரச் சூழல் அவர்களை அனுப்பி வைத்தது. அதற்கு பெண் சுதந்திரம் எனப் பெயர் வைத்தார்கள். நம்மை ஏமாற்ற.

//3.பெண்கள் பிறரிடம்,குறிப்பாக ஆண்களிடம் நடந்துக் கொள்ளும் முறையை பொருத்து அவள் நல்லவிதமாகவே நடத்தப்படுவாள்.// அப்போ பாதிக்கப் பட்ட பெண்கள் எல்லாம் ஆண்களிடம் தவறாக நடந்து கொண்டார்கள்ன்னு சொல்றீங்களா??!!

வீட்டில் எனக்கு - வேலைக்குப் போக, வெளியில் போக, இண்டெர்னெட் பயன்படுத்த, எனக்கு தேவையானதை வாங்கிக் கொள்ள அனுமதி கொடுத்துள்ளனர் - ன்னு சொல்ரதெல்லாம் சுதந்திரம் அல்ல. "கொடுத்தது" ன்னு வந்திட்டாலே அங்க சுதந்திரம் இல்லன்னு தான் அர்த்தம். இதுதான் எதார்த்தம். அதை உணராமலே நாம அதுதான் சுதந்திரம்னு சொல்லிக்கிட்டு இருக்கிறோம்.

உடல் முழுவதும் நகையுடன் பெண் தனியாக எப்போது இரவில் சாலையில் நடந்து செல்ல முடிகிறதோ அப்பதான் நாம் சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம்ன்னு சொன்னாங்க. நகையோட வேண்டாம்க! சும்மா - அட ராத்திரியில வேண்டாம்க, பகல்ல - நடந்து போக முடியுதா? அந்தக் காலத்திலேர்ந்து இந்தக் காலம் வரைக்கும் இதுல ஏதாவது இம்மி அளவாவது மாற்றம் நடந்திருக்கா? இன்னும் சொல்லப் போன இப்பதான் ரொம்ப மோசமா இருக்கு.

எங்க ஊரில திருவிழா நடக்கும். அதுல பெண் police -ம் காவலுக்கு வந்திருப்பாங்க (பெண் சுதந்திரம், சம உரிமையை காமிக்கிறாங்களாம்). இதுல வேடிக்கை என்னன்னா, அந்த பெண் போலீஸ்-அ பாதுகாக்க ரெண்டு ஆண் போலீஸ் வந்திருப்பாங்க. எங்கங்க இருக்கு பெண் சுதந்திரம்!!??

ராதா ராணி, ஆமினா, மற்றும் ஜெயலெட்சுமி - நன்றாக வாதாடுகிறீர்கள். தொடர்ந்து கலக்குங்கள்.

மீண்டும் வருவேன்!

அன்புடன்,
இஷானி

//திருமணதிற்கு பிறகு பெண்கள் கணவனைதான் சார்ந்திருக்கவேண்டி இருப்பது என்பது..அவள் அவளிடம் கூட கணவனை விட்டு கொடுக்க மறுப்பதுதான். அவளால் எல்லாவித முடிவையும் எடுக்க முடியும் என்றாலும், அவளின் கணவனின் பதிலுக்கு எதிர்ப்பர்க்கிறாள் என்பதும் ஒருவித உரிமைதான்//

//கணவன் அனுமதி என்பது.. பெண்ணே விருப்பப்பட்டு அடங்கி போகும் விஷயம். அவளால் பொறுக்க முடியவில்லை எனில் அவள் விவாகரத்து வாங்கி கொள்ளும் உரிமை பெற்றுள்ளாள்..விவாகரத்து வாங்கி எத்தனை கஷ்டங்கள் சமூகத்தில் அடைய வெண்டி உள்ளது எனக் கூறமுடியாது. எல்லாம் அவளின் கையில் தான் உள்ளது.

சுதந்திரமாய் கணவன் நீ செல் .. என விட்டால அதே பெண் சிணுங்கி.. உங்களுக்கு பாசமே இல்லை.. என்னை தனியா விடுறீங்க.. என மூக்கை சிந்தி அழுவதும் உள்ளது. அங்கே பொஸஸிவ் என்பது வரும். அதனால் பெரும்பாலான பெண் அன்பு கணவனின் கண்காணிப்பில் வாழ விரும்புவாள்.//

அப்படீன்னு சொல்லி கணவரை ரப்பர் ஸ்டாம்புதான் பெண்கள்தான் எல்லாம்னு சொல்லிட்டாங்க :). ரொம்ப ஆடினா விவாகரத்து கூட பண்ணிடலாமாம். அடங்கிப் போவது கூட பெண்கள் விரும்பியே தவிர கட்டுப்படுத்தப்படுவதால் இல்லைன்னுட்டாங்க. இதை விட சுதந்திரம் வேணுமா?

எதிரணிக்கிட்ட பதில் இருக்கான்னு பார்ப்போம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க நிசாதியாகு. கொஞ்சம் முயற்சி பண்ணி தமிழில் சொன்னால் நல்லாயிருக்கும். விரிவான வாதங்களை எடுத்து வையுங்களேன். ஆவலுடன் இருக்கிறோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆமினா... ஆமினா இதோ பிடியுங்க ஆரஞ்சு ஜூஸ் மயங்கி விழுந்திடாதீங்க :)

யப்பா என்னா கோபம்? சுதந்திரம் எல்லாம் பெயரளவில்தான்னு குமுறிக் கொட்டிட்டீங்க.
//“நான் ப்ரண்ட்ஸோட சுத்திட்டு வரேன். அதுனால வரதுக்கு லேட் ஆகும்னு சொன்னா யாராவது ஒத்துக்குவாங்களா? வேலைக்கு போக மட்டும் தான் அனுமதி//

நியாயமான கேள்வி. யாராச்சும் பொண்ணுங்களை சும்மா ஊர்சுத்திட்டு வான்னு வெளிய அனுப்புவாங்களா?! ஆம்பளைப் புள்ளைகளுக்குத்தான் எந்த தொந்தரவும் இல்லை எப்ப வேணும்னாலும் ஊர்சுத்தலாம். அந்த உரிமை நமக்கு இருக்கா?

//அந்த பொண்ணு தனியா இருக்கும் போது எவ்வளவு தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவாள் என்று உங்களுக்கு தெரியுமா? “நீ அங்கே தனியா கஷ்ட்டப்பட்டுட்டு இருக்க, ஆனா உன் பொண்டாட்டி இங்க...... என்று ஒரு வார்த்தை அவன் அம்மாக்களிடமிருந்தோ,நண்பர்களிடமிருந்தோ ஆண்களுக்கு விழுந்தாள் போதும். அதன் பிறகு பெண்களின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் இருக்கா?//

மிக மிக நியாயமான கேள்வி.

யாருப்பா அங்க எதிரணியிலா இந்த கேல்விக்கு உங்ககிட்ட பதில் இருக்கா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்று நள்ளிரவு ஒரு பெண் பயமின்றி செல்லமுடிகிறதோ அன்றுதான் நாம் முழு சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம்.-இது நம் தேச தந்தை காந்தி சொன்னது.அப்படியானால் இன்னும் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றுதானே அர்த்தம்?

ஒரு பெண் வயதுக்கு வந்த பிறகு எந்த பெற்றோரும்"இனி நீ என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள்!உன் விருப்பம்தான்.எங்கு சென்று படித்தாலும் பரவாயில்லை.உனக்கு முழு சுதந்திரம் நாங்கள் கொடுத்துவிட்டோம்."என்று சொல்வதில்லை.என்ன படிக்கலாம் என்பதில் வேண்டுமானால் பெண்களுக்கு சுதந்திரம் இருக்கலாம்.ஆனால் அதை எங்கே படிக்க வேண்டும்?எப்படி படிக்க வேண்டும்(தங்கி படிப்பதா இல்லையா?)என்ற தீர்மானிக்கும்சுதந்திரம் பெற்றோரிடம்தான் உள்ளது.பெண்களுக்கு இல்லை.

நான் சவால் விடுகிறேன்!..எந்த ஒரு பொது இடத்திலும்(பஸ் ஸ்டான்ட்,மார்கட்,தியேட்டர்)இடத்திலும் 10 பெண்கள் உள்ள இடத்தில் ஒரு ஆண் போய்,எந்தவித மன சங்கடமும் இன்றி வந்து விடுவான்.அதே போல் 10 ஆண்கள் உள்ள இடத்தில் ஒரு பெண் போய்,மனக்கசப்பின்றி வர முடியுமா?
பிறக்கெப்படி அது வளருகிறது என்று சொல்லமுடியும்?

பெண்கள் அடுப்பு பூதம்,உடன் கட்டை ஏறுதல் இதுபோன்ற அடிமைதனத்திலுருந்து விடபட்டார்களேயொழிய முழு சுதந்திரம் இன்னும் பெற வில்லை.

எந்த குடும்பத்திலாவது கணவனோட அனுமதியின்றி மனைவி ஏதும் வாங்க முடியுமா?அப்படியே வாங்கினாலும் குடும்பத்தில் கொலைதான் விழும்!(நான் கொலைனு சொன்னது வாக்குவாதைத்தைதான்)அங்கேயும் அவர்களுக்கு சுதந்திரம் இல்லை.

பெண்கள் மூன்று பேருக்கு கண்டிப்பாக கட்டுபட்டே தீர வேண்டும்
முதலாவது பெற்றோருக்கு,இரண்டாவது கணவனுக்கு,மூன்றாவது மாமியாருக்கு.இதை யாரும் மறுக்கவே முடியாது.அதுதான் உண்மை.அவ்வாறு கட்டுபட்டு வாழும்போது சில சுதந்திரங்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.ஏன் சில வீட்டில் மாமியாரின் விருப்பமின்றி மருமகள் ஒரு குழம்புகூட வைக்கமுடியாது நடுவர் அவர்களே!பெண்களிடத்திலேயே பெண்களுக்கு சுதந்திரம் இல்லை.பிறகு மற்றவரிடத்தில் எப்படி எதிபார்ப்பது?இதுவா பெண்கள் சுதந்திரம்?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்