பட்டிமன்றம்20- பெண்சுதந்திரம்

பழைய பட்டிமன்ற இழையில் வேறு விஷயங்களும் புகுந்துவிட்டதால் அதே தலைப்பிலான பட்டிமன்றம் இந்த இழையில் தொடரப்படப் போகின்றது. தோழிகள் தங்கள் வாதங்களை எடுத்து வைத்து பட்டிமன்றதை சுவாரசியமாக்க கேட்டுக் கொள்கிறேன்.

"இன்றைய காலக்கட்டத்திற்கு, பெண் உரிமை மற்றும் சுதந்திரம் என்பது அவரவரின் இடச்சூழலை பொருத்து இருக்கிறது.. ஆனால் பொதுவாக அது வளர்ந்து வருகிறதா? இல்லை பெயரளவில் மட்டும் உள்ளதா?"

வாதங்களை அள்ளி வீசுங்கள். நான் வந்து அள்ளிக்கறேன்

வாங்க இளவரசி!
//மறுபடியும் இந்த சீட்டில நீங்க சுதந்திரமா உட்கார்ந்திருப்பதை பார்க்க மகிழ்ச்சி எனக்கு….!
இந்த சுதந்திரத்தை உங்களுக்கு கொடுத்தது உங்கள் கணவன் மற்றும் அறுசுவை இயக்குனர் தானே……//

ஆஹா நம்ம தலையிலயே கை வச்சுட்டாங்களே!

//உடைகள் விஷயத்தில் ..வளர்ந்திருக்கிறது..!!!
“அன்றைய பெண்கள் சேலையை தவிர வேறெதுவும் அணிந்ததில்லை..இன்று சுடிதார்,ஜீன்ஸ்பேண்ட்ஸ்,நைட்டி,மேக்ஸின்னு …உலகத்தின் அத்தனை நவநாகரீக உடைகளையும் உடுத்தவும் பெரும்பாலான ஆண்கள் அனுமதிக்கிறார்கள்….தானே……அப்படி அனுமதிக்காவிட்டாலும் அரித்தெடுத்தாவது பெண்கள் பெற்று கொள்கிறார்கள்தானே..!”//

ஹி ஹி அன்னிக்கு காந்திஜி அஹிம்சை வழியில் சாதிச்சதை நாம் (நச்)அரிப்பு வழியில் சாதிச்சுக்கிட்டு இருக்கோம்ங்கறீங்க :)

//எனக்கு தெரிந்து நிறைய ஆண்கள் மனைவி திட்டுவாள் என்று டீ,காபி குடிப்பதை கூட விட்டுவிட்டார்கள்…!ஆக என்ன உணவை வீட்டு ஆண்கள் சாப்பிடவேண்டும் என்பது மட்டுமல்ல என்ன உணவை சாப்பிடக்கூடாது என்பதுகூட பெண்கள்தான் முடிவு செய்கிறார்கள்…//

அடடா இப்போ ஆண்களுக்கு சுதந்திரம் இருக்கா இல்லியான்னு தனியே ஒரு பட்டிமன்றம் நடத்தணும் போல இருக்கே :)

//எங்கோ ஒரு அதியமான்,ஔவையார் நட்பு மட்டும்தான் உண்டு…மற்றபடி பெண்களின் நட்பு பெண்களோடே முடிந்து போனது..ஆனால்
இன்றைய பெண்களுக்கு பெண்களைபோலவே…ஆண்களோடு சகஜமாக சங்கோஜமின்றி நட்பு பாராட்ட முடியும்//

உண்மைதானே! இப்பல்லாம் இவர் என்னோடு படிப்பவர் வேலைசெய்பவர் என்று சுதந்திரமாக வீட்டிற்கு அழைத்து வர முடியுமே. இது சுதந்திரம் இல்லையா?

எதிரணி பாடு கஷ்டம்தான்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஒர 33%கிடைக்க மாட்டேங்குது. இதுல பெண்சுதந்திரமாவது ஒண்ணாவதுன்னு ஆமினா கேட்கறாங்க. பதில் இருக்கா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பெண்கள் படிக்கவைக்கப்படாததற்கு காரணம் வறுமை மட்டுமே காரணம்னு மோகனாரவி சொல்றாங்க. அதற்கும் பெண் சுதந்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். உண்மைதானே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க ஆனந்தி. உங்கள் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வனிதா எங்க ஆளைக் காணோமேன்னு நினைச்சேன். எந்த அணின்னு முடிவெடுக்கத்தான் தாமதமா?! சட்டசபையில் ஆண்களுக்கு நிகரா கூச்சல் போடும் சுதந்திரமே இருக்கும் போது இன்னும் சுதந்திரம் இல்லேன்னு சொல்றது நியாயமான்னு கேட்கறாங்க. பதில் சொல்லுங்கப்பா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க பவித்ரா. என்னதான் வேலைக்குப் போனாலும் ஆண்களின் தப்பான பார்வைகளினால் வேதனைப்பட வேண்டியுள்ளது அப்புறம் எப்படி சுதந்திரம் உள்ளதுன்னு சொல்ல முடியும்னு கேட்கறாங்க. எதிரணி என்ன பதில் சொல்றாங்கன்னு பார்ப்போம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஜெயலெக்ஷ்மி அழகா வாதாடியிருக்கீங்க.
//நிறுவனத்துல அல்லது ஒரு தொழிற்கூடத்துல ஆணுக்கு சமமா பெண்ணும் வேலை செய்யிரது மட்டும் சுதந்திரம் கிடையாது. அந்த ஆண் வாங்கும் சம்பளமும், கூலியும் பெண்ணுக்கும் சமமா கிடைத்தால் தானே சுதந்திரம் வளர்ந்துள்ளது எனலாம//

செய்யும் வேலைக்கான கூலியிலேயே வித்தியாசம் இருக்கும் போது எங்கே பெண்சுதந்திரம்னு கேட்கறாங்க. நியாயமான கேள்வி.

//எனவே பெண்கள் முன்னேறுகிறார்கள் என்பது சகிப்புத்தன்மை என்ற விதை பெண்கள் மத்தியில் வேர்விட்டு விருச்சமாய் வளர்ந்ததினால் தானே அன்றி சுதந்திரம் வளர்ந்ததினால் அல்ல!// அப்படீன்னு ஆணித்தரமா சொல்லிட்டாங்க. எதிரணியினர் இதுக்கு என்ன சொல்வீங்க இதுக்கு என்ன சொல்வீங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹையா இஷானி வந்துட்டாங்க.

//நம்மளை ஆட்டிவைக்கிற remote - அ வேறு ஒருத்தர்கிட்ட (கணவர் அல்லது அப்பா) கொடுத்துகிட்டு வந்திட்டு எப்படிங்க சுதந்திரம்ன்னு பேச முடியுது//

சுருக்கமா பெண்கள் ரிமோட்டால் இயக்கப்படும் பொம்மைன்னு சொல்லிட்டாங்க. எதிரணி என்ன சொல்லப்போறாங்கன்னு பார்ப்போம்

//கொடுத்தது" ன்னு வந்திட்டாலே அங்க சுதந்திரம் இல்லன்னு தான் அர்த்தம். இதுதான் எதார்த்தம். அதை உணராமலே நாம அதுதான் சுதந்திரம்னு சொல்லிக்கிட்டு இருக்கிறோம்.//

அதானே மற்றவங்க கொடுத்துதான் கிடைக்குதுன்னா அது சுதந்திரமா?!
அய்யோ நடுவரை குழப்பிட்டாங்களே ஒண்ணுமே புரியலியே ....

//எங்க ஊரில திருவிழா நடக்கும். அதுல பெண் police -ம் காவலுக்கு வந்திருப்பாங்க (பெண் சுதந்திரம், சம உரிமையை காமிக்கிறாங்களாம்). இதுல வேடிக்கை என்னன்னா, அந்த பெண் போலீஸ்-அ பாதுகாக்க ரெண்டு ஆண் போலீஸ் வந்திருப்பாங்க. எங்கங்க இருக்கு பெண் சுதந்திரம்!!??//

ஹி ஹி...

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க சகோ ஷேக். உங்களைக் காணோமேன்னு நினைச்சேன்.

//நான் சவால் விடுகிறேன்!..எந்த ஒரு பொது இடத்திலும்(பஸ் ஸ்டான்ட்,மார்கட்,தியேட்டர்)இடத்திலும் 10 பெண்கள் உள்ள இடத்தில் ஒரு ஆண் போய்,எந்தவித மன சங்கடமும் இன்றி வந்து விடுவான்.அதே போல் 10 ஆண்கள் உள்ள இடத்தில் ஒரு பெண் போய்,மனக்கசப்பின்றி வர முடியுமா?
பிறக்கெப்படி அது வளருகிறது என்று சொல்லமுடியும்//

கஷ்டம்தான்.

//பெண்கள் மூன்று பேருக்கு கண்டிப்பாக கட்டுபட்டே தீர வேண்டும்
முதலாவது பெற்றோருக்கு,இரண்டாவது கணவனுக்கு,மூன்றாவது மாமியாருக்கு.இதை யாரும் மறுக்கவே முடியாது.அதுதான் உண்மை.அவ்வாறு கட்டுபட்டு வாழும்போது சில சுதந்திரங்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.ஏன் சில வீட்டில் மாமியாரின் விருப்பமின்றி மருமகள் ஒரு குழம்புகூட வைக்கமுடியாது நடுவர் அவர்களே!பெண்களிடத்திலேயே பெண்களுக்கு சுதந்திரம் இல்லை.பிறகு மற்றவரிடத்தில் எப்படி எதிபார்ப்பது?இதுவா பெண்கள் சுதந்திரம்?//

எப்பவும் யாருக்காவது கட்டுப்பட்டே இருப்பது சுதந்திரம்னு சொன்னா நியாயமா எதிரணியினரே! அய்யோ இதை நான் கேட்கலீங்க உங்க எதிரணிதான் கேட்கறாங்க பதில் சொல்லுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!


நடுவர் அவர்களே,
நம் பட்டியின் தலைப்பு என்ன?

”பெண் சுதந்திரம் வளர்ந்து வருகிறதா? இல்லை பெயரளவில் மட்டும் உள்ளதா?"

அன்று ஆணுக்கு சமமாக பெண் வீட்டை விட்டு வெளியில் வந்து பேச கூட அனுமதிக்க பட வில்லை.இன்று அப்படியா?”வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்” எனும் மகா கவி பாரதியின் சொல்லுக்கேற்ப புதுமை பெண்களாய் நாம் வலம் வந்து கொண்டு இருக்கிறோமே? இது எதிரணியினர் மறந்ததேனோ?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்