பட்டிமன்றம்20- பெண்சுதந்திரம்

பழைய பட்டிமன்ற இழையில் வேறு விஷயங்களும் புகுந்துவிட்டதால் அதே தலைப்பிலான பட்டிமன்றம் இந்த இழையில் தொடரப்படப் போகின்றது. தோழிகள் தங்கள் வாதங்களை எடுத்து வைத்து பட்டிமன்றதை சுவாரசியமாக்க கேட்டுக் கொள்கிறேன்.

"இன்றைய காலக்கட்டத்திற்கு, பெண் உரிமை மற்றும் சுதந்திரம் என்பது அவரவரின் இடச்சூழலை பொருத்து இருக்கிறது.. ஆனால் பொதுவாக அது வளர்ந்து வருகிறதா? இல்லை பெயரளவில் மட்டும் உள்ளதா?"

வாதங்களை அள்ளி வீசுங்கள். நான் வந்து அள்ளிக்கறேன்

வீட்டிலே பூட்டி வைப்பதை பற்றி நாங்கள் பேச வில்லை.பூட்டிய வீட்டிலிருந்து எங்கு சென்றாலும் உங்களுக்கு (பெண்களுக்கு)சுதந்திரம் இருக்கிறதா என்பதுதான் வாதம்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்


நடுவர் அவர்களே,
முழு சுதந்திரம் இன்னும் பெற்றோமா இல்லையா என்பது அல்ல கேள்வி.இந்தியா வல்லரசு நாடாகவில்லை வளர்ந்து வருகிறது ஆனால் ஒரு நாள் வல்லரசாகி விடும் என்பது போல் நாம் வளர்ந்து வருகிறோம். நிச்சயம் முழு சுதந்திரம் நமக்கு கிடைத்துவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை.
வாதத்திற்கு மருந்துண்டு.எதிரணியினரின் பிடிவாதத்திற்கு மருந்தேது?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


நடுவர் அவர்களே,
நம் பட்டியின் தலைப்பு என்ன?

”பெண் சுதந்திரம் வளர்ந்து வருகிறதா? இல்லை பெயரளவில் மட்டும் உள்ளதா?"

அன்று ஆணுக்கு சமமாக பெண் வீட்டை விட்டு வெளியில் வந்து பேச கூட அனுமதிக்க பட வில்லை.இன்று அப்படியா?”வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்” எனும் மகா கவி பாரதியின் சொல்லுக்கேற்ப புதுமை பெண்களாய் நாம் வலம் வந்து கொண்டு இருக்கிறோமே? இது எதிரணியினர் மறந்ததேனோ?
முழு சுதந்திரம் இன்னும் பெற்றோமா இல்லையா என்பது அல்ல கேள்வி.இந்தியா வல்லரசு நாடாகவில்லை வளர்ந்து வருகிறது ஆனால் ஒரு நாள் வல்லரசாகி விடும் என்பது போல் நாம் வளர்ந்து வருகிறோம். நிச்சயம் முழு சுதந்திரம் நமக்கு கிடைத்துவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை.
வாதத்திற்கு மருந்துண்டு.எதிரணியினரின் பிடிவாதத்திற்கு மருந்தேது?
நண்பரும் வாதாட வந்தது மகிழ்ச்சி.
//நான் சவால் விடுகிறேன்!..எந்த ஒரு பொது இடத்திலும்(பஸ் ஸ்டான்ட்,மார்கட்,தியேட்டர்)இடத்திலும் 10 பெண்கள் உள்ள இடத்தில் ஒரு ஆண் போய்,எந்தவித மன சங்கடமும் இன்றி வந்து விடுவான்.அதே போல் 10 ஆண்கள் உள்ள இடத்தில் ஒரு பெண் போய்,மனக்கசப்பின்றி வர முடியுமா?//

இதற்கு காரணம் பெரியார் சொன்னது போல் எங்களுக்கு கருப்பை இருப்பதுதான் தோழரே!

(என்னையும் குஷ்பூவை நினைத்தது போல் நினைக்க மாட்டீர்கள் நம்புகிறேன்.)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


நடுவர் அவர்களே!

ஓரளவு படித்த, எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுகிற, குடும்பப் பின்னணியில் இருந்து வரும் பெண்கள் – தங்களுடைய பொருளாதார பலம், கல்வியறிவு, திறமை இவற்றுக்குத் தகுந்தாற்போல உள்ள வேலைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.

டாக்டர், இஞ்சினீயர், பாங்க் வேலை, கல்லூரி ஆசிரியை என்று படிப்புக்கும், உழைப்புக்கும் ஏற்ற கௌரவமான பொசிஷன் கிடைக்கிறது அவர்களுக்கு.
(நன்றி சீதாலஷ்மி மேடம்)

யோசியுங்கள் எதிரணியினரே?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


கடமை அழைப்பதால் தற்சமயம் வாதத்தை ஒத்தி வைக்கிறேன்!
நன்றி! வணக்கம்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

//இதற்கு காரணம் பெரியார் சொன்னது போல் எங்களுக்கு கருப்பை இருப்பதுதான் தோழரே!//
பெண்களுக்கு கற்பு இருப்பது போல் தான் ஆண்களுக்கும். அத வச்சே நீங்க பிரிக்கிறீங்கன்னா எப்படி சுதந்திரம் கிடைத்ததுன்னு வாதாடுறீங்க.எல்லா விதத்திலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் தலை எடுக்கும் போது தான் அந்த சுதந்திரம் வளர்ந்துள்ளது என நம்பலாம். அப்படி தான் இல்லையே!அந்த ஒரு வார்த்தைய வச்சே ஆண்களுக்கு கீழ் தான் பெண்கள் என சொல்லாமல் சொல்லி விட்டீர்களே தோழி

//வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்” எனும் மகா கவி பாரதியின் சொல்லுக்கேற்ப புதுமை பெண்களாய் நாம் வலம் வந்து கொண்டு இருக்கிறோமே? இது எதிரணியினர் மறந்ததேனோ//
வீட்டை விட்டு வெளியே வருவது மட்டும் சுதந்திரம் இல்லை.ஒரு பெண் எந்த ஒரு உதவியும் பிறரை எதிற்பார்க்காமல் தற்சார்புடன் வலம் வந்தால் தான் அது சுதந்திரம் என்பதை நீங்கள் மறந்ததேனோ?

//முழு சுதந்திரம் இன்னும் பெற்றோமா இல்லையா என்பது அல்ல கேள்வி.இந்தியா வல்லரசு நாடாகவில்லை வளர்ந்து வருகிறது ஆனால் ஒரு நாள் வல்லரசாகி விடும் என்பது போல் நாம் வளர்ந்து வருகிறோம். நிச்சயம் முழு சுதந்திரம் நமக்கு கிடைத்துவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை//
அப்ப ஒத்துக்குறீங்களா? இன்னும் பெயரளவில் தான் இருக்கு. இன்னும் வளர காலம் எடுக்கும்னு!
அதை தான் நாங்களும் சொல்றோம். இன்னும் பெயரளவில் தான் இருக்கிறது. வளர கால தேவை.நிச்சயம் கிடத்துவிடும் என்றால் கிடக்கவில்லை என்று தானே அர்த்தம்.

//வாதத்திற்கு மருந்துண்டு.எதிரணியினரின் பிடிவாதத்திற்கு மருந்தேது?//
வாதத்திற்கு மருந்துண்டு. இந்த எதிரணியினரின் வீண் வாதத்திற்க்கு மருந்தேது.

//கணவன் அனுமதி என்பது.. பெண்ணே விருப்பப்பட்டு அடங்கி போகும் விஷயம்//
அந்த பொண்ணூ அப்படியெல்லாம் அடங்கி போவது போல் நடிக்கவில்லை என்றால் ப்ரச்சனை. எந்த ஒரு ஆணும் தன்னை தனித்து பெண் வாழ விரும்புவதில்லை. நீங்க விருப்பப்பட்டு அடங்கி போகலன்னா கண்டிப்பா அந்த ஆணின் சந்தேக பார்வைக்கு இரையாவீர்கள்.
இதுக்கு பேரு அன்பு கணவரின் கண்காணிப்பில் வாழ விரும்புவதில்லை.அவரால் நம் வாழ்க்கை வீணாய் போய்விடுமோ என்ற ஒரு வித பயம்.
நானும் தான் எங்க பட்டிக்காட்டுல இருந்து டெல்லிக்கு என் மகனோடு போனேன். ஒரு முறை செய்யலாம். இருமுறை செய்யலாம். இனி அவரே இல்லாம நான் போக ஆரம்பிச்சா எனக்கு அவர் கொடுக்கும் பட்டம் வேறு. ஒரு வேளை அங்கு தங்க கூடிய சூழ்நிலை வந்தால் அவர் என்னை பார்க்கும் பார்வை வேறு. இந்த கொடுமைலாம் தேவையான்னு தான் பெண்களெல்லாம் கணவரின் கண்காணிப்புலையே இருக்க விரும்புகிறார்கள்.

//தமிழக அரசு நமக்கு எந்த அளவு சுதந்திரம் கொடுத்துள்ளது என்பதற்கு “மகளிர்
சுய உதவி குழுவே” சாட்சி.//
கொடுத்துற்காங்க. நாம்மாகவே உருவாக்கல. மேலிடத்திலிருந்து பணம் பெற அனுமதி கொடுத்தால் தான் அந்த மகளிர் குழு செயல்படும். இல்லையென்றால் போனி தான். நம்மை இயக்கி கொண்டிருக்கும் ஒரு விசை இருக்கும் போது அந்தசுதந்திரம் கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன?
இது அலங்கரிக்கப்பட்ட ஆடு பலி கொடுப்பதுபோல் இல்லையா.

//அன்று ஆண் முன் உட்கார கூட அனுமதி இல்லாத பெண்கள் இன்று சட்டசபை போய் ஆணுக்கு நிகரா சத்தம் போடுறாங்க//
நான் இருக்கும் இடத்தில் இருக்கும் ஆட்சியும் பெண் ஆட்சி தான். நான் பெறுமையாக தான் நினைத்தேன். அந்த பெண்ணை ஆட்டி வைப்பதும் ஒரு ஆண் தான் . இதில் எங்கு சுதந்திரத்தை வளர்த்துள்ளார்கள். மதுரையை ஒரு காலத்தில ஆண்ட ராணிமங்கம்மாவும் பெண் தான். இப்போது அங்காங்கே ஆட்சி செய்வதும் பெண் தான்.இதில் பெருசாக சொல்ல என்ன இருக்கிறது? இந்த இரண்டு காலத்துக்கும் என்ன வித்தியாசம்?
அப்போதும் கண்ணகி பாண்டிய மன்னனுக்கு நிகராக தான் வாதாடினாள். ஜான்சி ராணியும் பெண் தான்.அப்பவே அன்னியர்களை எதிர்த்து போரிட்டாங்க.இப்போதும் அதே நிலை தான். எங்கோ ஒருவர் இருவர் சத்தம் போடுவதால் சுதந்திரம் வளர்ந்தது என்பது உங்களுக்கு யார் சொன்னது.

//குடியரசு தலைவர்கல் ஆணாக இருந்தாலும் அவர் நிலையும் அது தான்//
அந்த குடியரசு தலைவர் ஆண் பொம்மையா இருந்தா என்ன ? பெண் பொம்மையா இருந்தா என்ன?
ரண்டு பொம்மைகளுக்கும் சாவி வேறொருவர் கையில் இருக்கும் போது அதை ஏன் உதாரணமாக சொல்றீங்க?

ஆகவே நடுவர் அவர்களே!!!
பெண் சுதந்திரம் என்பது இன்னும் பெயரளவில் தான் இருக்கிறது.
என் சார்பில் வாதாடும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எதிரணியினர் நிச்சயம் ஒருநாள் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று சொல்வதை பார்த்தால் பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டு போச்சுன்னு சொல்ற மாதிரி இருக்கு..என்னதான் பெரிய கெளரவமான பதவியிலோ,வேலையிலோ ஒரு பெண் இருந்தாலும் ஒரு ஆணுக்கு பெண் அடிமைதான் என்ற கருத்து புராணகாலங்களில் இருந்து இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிற்து.சும்மா வேலைக்கு செல்வதாலும் தனியாக வெளியிலோ, வெளிநாட்டிற்கோ செல்வதாலும் சுதந்திரம் கிடைத்து விட்டதாக கூற முடியாது. நாட்டாமை! நீங்களும் பெண்தான் நல்லா யோசிச்சு பாருங்க. தீர்ப்பை எங்கள் அணிக்கே சொல்லிருவீங்க..

radharani

//தமிழக அரசு நமக்கு எந்த அளவு சுதந்திரம் கொடுத்துள்ளது என்பதற்கு “மகளிர்
சுய உதவி குழுவே” சாட்சி//
//பெண்களுக்கு நல்ல பல திட்டங்களை அரசு செயல் படுத்துகிறது// நீங்க எதை மனதில் வைத்து இதைச் சொன்னீங்கன்னு தெரியல. அரசு எப்படி தமிழ் வளர்ப்பதாகச் சொல்லி board ல உள்ளத மட்டும் தப்பு தப்பா தமிழ்லையும் English லையும் மாத்தி மாத்தி எழுதிகிட்டு இருக்கோ அது மாதிரிதான் பெண் சுதந்திரம்னு சொல்லும் உங்க அரசு திட்டங்களும். இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா தமிழும் வளராது நம்ம (பெண்கள்) சுதந்திரமும் வளராது.

//நம் நட்டை”ஏழை நாடு” என யார் சொன்னார்கள்?// இது இந்த தலைப்புக்கு சம்பந்தமே இல்லாதது. இருந்தாலும் இந்த கருத்தையும் எங்கிருந்து எடுத்தீங்கன்னு தெரியல. நம்ம நாடு வளமானது -ன்னு சொல்றது நம்ம நாட்டிலுள்ள இயற்கை வளங்களைச் சொல்லும்போது சொல்வாங்க. நாட்டு மக்கள் ஏழைங்கதான். நேற்று வெளிவந்த UK based study ஒண்ணு சொல்றத கேளுங்க - இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் மட்டுமே "அதிக ஏழைகள் உள்ள 26 ஆப்பிரிக்க நாடுகளில்" உள்ள ஏழைகளின் எண்ணிக்கையை விட அதிகம். நீங்க என்னடான்னா ஏழை நாடு இல்லன்னு சொல்றீங்க.

//பெண் பிள்ளையை படிக்க வைக்காதது பெற்றோரின் ஏழ்மையும், அறியாமையையும் சார்ந்த விஷயம்.// ஒரு தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள்; மகள் மகனைவிட நன்றாகப் படிப்பவள். பெற்றோரால் ஒருவரை மட்டுமே படிக்கவைக்க முடியும் என்றால் - அன்றும் இன்றும் (என்றும்) மகன் தான் பள்ளி செல்வான். மகள் இடம் சமையலறைதான். இதில் அக்காலம் தொட்டு இக்காலம் வரை எந்த மாற்றமும் ஏற்படவில்லையே ஏன்?

//எனில் பெண்களை அவர்களின் விருப்பபடி வேலைக்கு வெளியூர்களுக்கும், பக்கத்தில் உள்ள கம்பெனிகளுக்கோ அனுப்பி வைக்கிறார்கள்.// 'அங்காடித்தெரு' படம் பார்த்திருபீங்கன்னு நினைக்கிறேன். குறிப்பாக இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைஞ்சதுக்கு எனக்கு தெரிஞ்சு ரெண்டு காரணம் தான் இருக்க முடியும் (i) அந்த நிகழ்வுகள் உண்மைக்கு மிக நெருங்கி இருக்கலாம் அல்லது (ii) அதுமாதிரி நடந்தால் நல்லாத்தான் இருக்கும் என்ற பொதுவான வக்கிர புத்தி அறியாமலே மக்களிடம் பரவிக் கிடக்கலாம். இது இரண்டில் எது உண்மைன்னாலும் அது பெண் சுதந்திரம் சுத்தமாக இல்லை என்பதைத் தான் காட்டுகிறது.

நான் திரும்பத திரும்ப சொல்வது இதுதான். வீட்டவிட்டு வெளிய வாரங்க, வேலைக்கு போறாங்க, சுடிதார் போடுறாங்க இதெல்லாம் சுதந்திரத்திற்கு தேவையானதுதான் (necessity) ஆனால் போதுமானதல்ல (not sufficient).
எவ்வளவு சுதந்திரமாக நம்மால் வெளியில் நடமாட முடிகிறது, வேலைக்கு போக முடிகிறது, அதைச் செய்ய யாருடைய அனுமதி எல்லாம் தேவைப்படுகிறது என்பதைப் பொறுத்தது. ஏனென்றால் பெண்கள் வேலைக்குப் போவது சுதந்திரத்தால் வந்ததல்ல, பொருளாதார நெருக்கடியால் நிர்பந்திக்கப்பட்டது. ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. அந்த விதிவிலக்குகள் இன்றுபோல் அன்றும் இருந்தது. மற்றபடி அன்றிலிருந்து இன்றுவரை சுதந்திரத்தில் எந்த மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை.

//எனக்கு தெரிந்து நிறைய ஆண்கள் மனைவி திட்டுவாள் என்று டீ,காபி குடிப்பதை கூட விட்டுவிட்டார்கள்…!ஆக என்ன உணவை வீட்டு ஆண்கள் சாப்பிடவேண்டும் என்பது மட்டுமல்ல என்ன உணவை சாப்பிடக்கூடாது என்பதுகூட பெண்கள்தான் முடிவு செய்கிறார்கள்…// உண்மைதான். இது ஒன்றை மட்டும்தான் நம்ம இஷ்டத்துக்கு நடத்திகிட்டு இருக்கோம். அதுக்கு காரணம் நமக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம் அல்ல. இதுக்குப் போய் இவகிட்டவெல்லாம் எதுக்கு திட்டு வாங்கிகிட்டு. டீ, காபி எது கொடுத்தாலும் அது வெந்நீ போலத்தான் இருக்கும் இதுக்கு எதுக்கு ஒரு சண்டைன்னு விட்டுடுராங்கன்னு நினைக்கிறேன்.

//வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்” எனும் மகா கவி பாரதியின் சொல்லுக்கேற்ப புதுமை பெண்களாய் நாம் வலம் வந்து கொண்டு இருக்கிறோமே?// நெனைப்புதான் பொழப்ப கெடுத்துச்சாம். "பூட்டி" ங்குறதுக்கு நம்ம அப்படியே அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி அர்த்தம் எடுத்ததால்தான் இப்போ பிரச்சனையே. வீட்ட விட்டு வெளியே வந்திட்டா சுதந்திரம் வந்திடுச்சின்னு சொல்லிடுறீங்க. அவ்வளவு பெரிய கவி (நீங்க இல்ல கவிசிவா) பூட்டு போட்டு பூட்டுறதையா சொல்லி இருப்பார். எல்லா விதமான அடிமைத்தனத்தையும் சேர்த்துதான் சொல்லி இருப்பார். அது இன்னும் மாறலியே!!!
இப்போ யாரோ சொன்னது - வேலைக்கு சென்று வரும் ஒவ்வொரு பெண்ணும் வீடு வந்து உடை மாற்றி உதறும் போது அதிலிருந்து ஆயிரக்கணக்கில் காமக் கண்கள் சிதறி ஓடும் - ன்னு சொன்னார். இதெல்லாம் நமக்குப் பெரிசா தெரியிறது இல்ல. எல்லாம் பழகிப் போச்சு. இதெல்லாம் எதார்தம்ன்னு ஆகிப்போச்சு.

//கடமை அழைப்பதால் தற்சமயம் வாதத்தை ஒத்தி வைக்கிறேன்!// யாருங்க அந்த "கடமை". அடிக்கடி வந்து கூப்பிட்டுட்டு போயிடுறாரு.

தேவைப்பட்டால் மீண்டும் வருவேன்.

நாட்டாமை, நீங்களாவது சுதந்திரமா எங்க அணி பக்கம் தீர்ப்பு சொல்லுங்க.
(நம்புங்க. தீர்ப்பு எங்க பக்கம் இல்லைன்னா அதுக்காக உங்களுக்கும் சுதந்திரம் இல்லன்னு சொல்ல மாட்டோம் - குழப்புறேனா? எல்லாரும் இங்க குழப்பிகிட்டு தானே இருக்கிறோம். அப்புறம் என்ன மட்டும் ஏன் இப்படி முறைக்குறீங்க :-)

அன்புடன்,
இஷானி

ஒரு பெண் 10 ஆண்கள் இருக்கும் இடத்திற்கு சென்ரு வர முடியுமா?
முடியாது. அது பெண்மையின் பண்பு, வெட்கம், அடக்கமே தவிர அதில் இல்லை தேவையில்லை சுத்ந்திரம்.
அன்றைய காலத்தில் பெண்கள் மணமகனை மணமேடையில் கூட பார்த்ததில்லை ஆனால் இன்று முதலில் பார்த்து பேசி குணம்,மனம் தெரிந்து,புரிந்து பிரகு தான் திருமனத்திற்கே சம்மதம் தெரிவிக்கிரார்கள். இது சுதந்திரம் இல்லையா? எந்த ஊருக்கும், ஏன் வெளிநாட்டிர்க்கும் கூட தனியே சென்று வருகின்ரனர்.அன்ரைய காலத்தில் பெண்கள் வீட்டின் தலைவி கூட கிடையாது ஆண்கள் தான் அனைத்தும் இன்று நாட்டின் முதல் தலைவியே பெண் தானெ.


நடுவர் அவர்களே,
//எத்தன பொண்ணூங்கள அவங்க அப்பா அம்மா படிக்க வைக்கிறாங்கன்னு நெனைக்கிறீங்க//
அன்பு ஆமினா,
இப்போ படிக்காத பெண்களை பார்ப்பதே அரிதாக இருக்கிற்து.
//இந்த ஏழை நாட்டில் எத்தனை பெண்களுக்கு அவள் படிக்க விரும்பியும் திருமணத்துக்கு அவர்கள் பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள் என்று தெரியுமா உங்களுக்கு?//
நம் நட்டை”ஏழை நாடு” என உங்களுக்கு யார் சொன்னார்கள்?
//இந்த அருசுவை தளத்திலேயே எத்தனை பெண்கள் அவர்களின் முழுவிவரங்களும், உண்மை பெயரும் கொடுக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா//
இன்னும் முதல் உறுப்பினர் admin அவர்களெ தனது முழு விவரங்க்ளை தர தயங்கும் போது மற்றவர்கள் தயங்குவதில் என்ன தவறு?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்