பட்டிமன்றம்20- பெண்சுதந்திரம்

பழைய பட்டிமன்ற இழையில் வேறு விஷயங்களும் புகுந்துவிட்டதால் அதே தலைப்பிலான பட்டிமன்றம் இந்த இழையில் தொடரப்படப் போகின்றது. தோழிகள் தங்கள் வாதங்களை எடுத்து வைத்து பட்டிமன்றதை சுவாரசியமாக்க கேட்டுக் கொள்கிறேன்.

"இன்றைய காலக்கட்டத்திற்கு, பெண் உரிமை மற்றும் சுதந்திரம் என்பது அவரவரின் இடச்சூழலை பொருத்து இருக்கிறது.. ஆனால் பொதுவாக அது வளர்ந்து வருகிறதா? இல்லை பெயரளவில் மட்டும் உள்ளதா?"

வாதங்களை அள்ளி வீசுங்கள். நான் வந்து அள்ளிக்கறேன்

நடுவர் அவர்களே!
பெண் அடிமை பேசும் இத்திருநாட்டில் மண் அடிமை பேசுவது முயற்கொம்பே!

அப்படினு சொல்லிதான் சுதந்திரப் போராட்டத்தில் வெறும் ஆண்களால் மட்டும் வெற்றிக் கொள்ள முடியாது என்று பெண்களை துணைக்கு அழைத்த்து.அப்போது பெண்கள் எங்களுடைய பண்பு அச்சம், மடம்,நாணம்,பயிர்ப்பு இவை எல்லாம் என்ன ஆகும் என்று வீட்டில் அடங்கி ஒதுங்கி போகவில்லையே வீரு கொண்டு எழுந்தனரே!
உயிரின் மேலான கற்புக்கு பங்கம் வந்தபோதும் தாய்மண்ணுக்காக இன்னுயிர் துறந்தனரே!
திரண்ட தோள்களும் வலுவான கரங்களும் ஆண்மகனுக்கு சொந்தம் அவர்களாலேயே வாள் எடுத்து வீசீ எதிரிப் படையுடன் போராட முடியும் என்றால் வீரத்திருமகள் ஜான்சிராணி அவர்களுக்கு என்ன மெல்லிய தோள்களும் பிஞ்சுக் கரங்களுமா இருந்த்தது! கடின வேலைகள் ஆண்களுக்கும் எளிய வேலைகள் பெண்களுக்கும் என்று கூறுவது இதிலிருந்தே முரண்பாடாகவில்லையா?
நம் சங்ககால தமிழ் பெண்கள் தாய்நாட்டைக் காக்க போருக்குப் புறப்படும் அன்புக் கணவராகட்டும்,இதற்கு பிறகு வாரிசு இல்லை என்று தெரிந்தும் தன் கடைசி மகனையும் வீரத்திலகமிட்டு வெற்றிக்கு வாழ்த்தி போருக்கு அனுப்பினாலே தவிர அழுது ஆர்ப்பாட்டம் செய்து பயந்து நடுங்கவில்லை. போரில் முதுகில் காயம் பட்டு கிடந்த அன்பு மகனையும் அய்யகோ! என்று மடியில் எடுத்து வைத்து புலம்பவில்லை. வீரனுக்கு அழகு, மார்பில் வேல் பாய்ந்து இறப்பதே என்று மகனுக்கு விடைகொடுக்கவில்லையா?
மனதிடம் இல்லாதவர்கள் பெண்களா?

ஆண்சிங்கத்துக்கும்,குட்டிகளுக்கும் சேர்த்து வேடையாடி கொடுப்பதுதான் பெண்சிங்கம். தன்முட்டையய் அடைகாக்குவதுதான் ஆண்பறவையின் வழக்கம்.அவர்களுக்கு இரையாடுவதுதான் பென்பறவைக்கு வழக்கம்.இவ்வழக்கம் மனிதர்களில் மட்டும் மாறுபட்டது ஏன்? யார் காரணம் யோசியுங்கள் தோழிகளே!
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு பெண்கள் இயல்பிலேயே பெற்றவர்களா? ஆண்மகன் தன்னை பார்த்துக்கொள்ள பெண்களை இவ்வாறு உருவாக்கினர் என்பதுதானே உண்மை. ஒர் அறிவு பெற்ற உயிர் கூட தன்னை தற்காத்துக்கொள்ள போராடும் பொழுது ஆறறிவு பெற்ற நாம் நமக்கு முற்றிலும் உதவாத பண்புகளை அணிகளன்களாக பூட்டிக்கொள்வது எவ்வளவு வெட்கக் கேடானது! ஒருவருடம் விடாது பயிற்சி எடுத்துப்பாருங்கள் நடுவரே உங்களுக்கும் திரண்ட தோழ்கள் அமையும்.நடுவர் அவர்களே நீங்கள் வேண்டுமானால் மல்லேஸ்வரியை உதவிக்கு அழைத்துக்கொள்ளுங்களேன்!

மழை,வெள்ளம்,பூகம்பம் போன்றவை ஏற்படும் முன்னே பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் மட்டும் தெரிந்து பாதுகாப்பான இடங்களுக்கு பெயர்ந்து தன்னைக் காத்துக்கொள்கின்றதே!இந்த அறிவு மனிதனுக்கும் மட்டும் இல்லையா? இருந்தது நடுவர் அவர்களே, பயன் படுத்தாமல் விட்டதினாலேயே இந்த அறிவு நம்மை விட்டு விலகி விட்டது. மயிர்கூட்ச்செறிவது இதனுடையா எச்சம் தான் என்பதை மறுக்கமுடியுமா?
உபயோகிக்காமல் விட்டுவிட்டால் துருப்பிடித்து பிறகு பயன் இல்லாமல் போய்விடும்,பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகிவிடும் என்றென்னி தானே நம்மை இவ்வாறு இப்பயனற்ற பண்புகளினால் ஆட்படுத்தி வைத்திருக்கின்றனர். நாமும் நம் அடையாளதைத் தொலைத்தல்லவா இருக்கிறோம். ஆண்மகனுக்கு அடங்கி இருப்பதும், அவனுக்கு அழகாக தோன்றுவதும் பெண்களின் இயல்பு என்பது இயற்கைக்கு புறம்பானது அல்லவா?
யோசியுங்கள் நடுவர் அவர்களே! பெண்மயிலைக் கவர ஆண்மயில்தான் தோகைவிரித்து ஆடுகின்றது....
இப்படி இயற்கையில் இல்லாத அதிசயமாக
இருப்பதே பெண்களின் சுதந்திரமா?
தன் நாட்டு சுதந்திரத்துக்காகப் போராடிய பெண்களின் தையிரியம்
தன்னைச் சுற்றும் காமக் கண்களை எதிர்க்கும் துணிவை எங்கே தொலைத்தனர்?
ஆயிரக் கணக்கில் கொன்று குவித்த ஜான்சிராணியின் வம்சம் அல்லவா நாம்
இப்போதோ பஸ்ஸில் பின்பிருந்து துளைக்கும் ஒருகரத்தினை
இருகரங்களினால் பிடித்து ஒடைக்க முடியாமல்
எதிர்க்க முடியாமல் மனதினுள் வெம்பி கூசிக்குறுகி-இதில்
எங்கே தொலைந்துபோனது நமது சுதந்திரம்.

தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்துவிடுவோம்!
உணவுக்கே முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நம் உணர்வுகளுக்கு என்று முக்கியத்துவம் கொடுப்பார்கள்?

பெண்களே உண்மையான சுதந்திரத்தை கற்பனையினாலும் ஒருமுறை நினைத்துப்பாரிர் அதை ஏழேலு ஜென்மத்திற்கும் மறக்கமுடியாது.

இதை நன்கு தெரிந்த என் அணியினருக்கு என் வாழ்த்துகள்.
நன்றி.

Don't Worry Be Happy.

நடுவர் அவர்களே...

இளவரசி உங்களின் வாதம் அருமை..

இப்போது தான் எதிர் அணியினர் கொஞ்சம் கொஞ்சமாக எங்களின் வாதத்தை பற்றி புரிந்துள்ளனர்.. ;-)

//அப்படினு சொல்லிதான் சுதந்திரப் போராட்டத்தில் வெறும் ஆண்களால் மட்டும் வெற்றிக் கொள்ள முடியாது என்று பெண்களை துணைக்கு அழைத்த்து.அப்போது பெண்கள் எங்களுடைய பண்பு அச்சம், மடம்,நாணம்,பயிர்ப்பு இவை எல்லாம் என்ன ஆகும் என்று வீட்டில் அடங்கி ஒதுங்கி போகவில்லையே வீரு கொண்டு எழுந்தனரே!//

ஆமாம். வீறு கொண்டு எழுந்தனர்.. அன்றே பெண்கள் தங்களின் உரிமை மற்றும் சுதந்திரத்தை பற்றி புரிந்து கொண்டனர். அந்த காலத்திலேயே அரசியல், போர் மற்றும் பல துறையில் நமக்கு இருக்கும் உரிமையை கண்டு இருந்துருக்கின்றனர். இதில் இருந்தே தெரியவில்லையா பெண் சுதந்திரம் வளர்ந்துள்ளது என....

அந்த காலம் என்பதால் வரலாற்றில் வந்துள்ளது ஏன் இந்த நாட்டில் பெண் பிரிவிற்கான இராணுவம் இல்லையா.. இந்த காலத்திலும் அரசியல், பத்திரிக்கை என அனைத்து துறையில் வளரவில்லையா.. இல்லை தன் மகனை மற்றும் மகளை எல்லையில் நிறுத்தி வைத்துருப்பதும் ஒரு தாய் தானே.. இதற்கு சங்க காலம் போக வேண்டியதே இல்லை. போனாலும் அங்கும் பெண் உரிமை வளர்ந்துள்ளது என் ஆணித்தரமாக தெரிகிறது..

//ஆண்சிங்கத்துக்கும்,குட்டிகளுக்கும் சேர்த்து வேடையாடி கொடுப்பதுதான் பெண்சிங்கம். தன்முட்டையய் அடைகாக்குவதுதான் ஆண்பறவையின் வழக்கம்.அவர்களுக்கு இரையாடுவதுதான் பென்பறவைக்கு வழக்கம்.இவ்வழக்கம் மனிதர்களில் மட்டும் மாறுபட்டது ஏன்? யார் காரணம் யோசியுங்கள் தோழிகளே!//

ஆமாம்.. எங்கள் அணியினருக்கு உதவி செய்கிற எதிர் அணியினருக்கு நன்றி..

ஆமாம், பறவை, விலங்கு என அனைத்து இனத்திலும் பெண் இனம் உயர்ந்தது. அதை தானே நாங்களும் கூறுகின்றோம்...

யார் காரணம்????????????. வளர்ந்து வரும் பெண் உரிமை மற்றும் சுதந்திரத்தை வளரவே இல்லை என தவறாக நினைத்து கொண்டு இருப்பவர்களே காரணம். ஒவ்வொரு நூற்றாண்டிலும் பெண் வளர்ச்சியில் பல மாறுதல் வந்து கொண்டு இருப்பதை புரியாதவர்களே காரணம்.

//அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு பெண்கள் இயல்பிலேயே பெற்றவர்களா? ஆண்மகன் தன்னை பார்த்துக்கொள்ள பெண்களை இவ்வாறு உருவாக்கினர் என்பதுதானே உண்மை. ஒர் அறிவு பெற்ற உயிர் கூட தன்னை தற்காத்துக்கொள்ள போராடும் பொழுது ஆறறிவு பெற்ற நாம் நமக்கு முற்றிலும் உதவாத பண்புகளை அணிகளன்களாக பூட்டிக்கொள்வது எவ்வளவு வெட்கக் கேடானது! ஒருவருடம் விடாது பயிற்சி எடுத்துப்பாருங்கள் நடுவரே உங்களுக்கும் திரண்ட தோழ்கள் அமையும்.நடுவர் அவர்களே நீங்கள் வேண்டுமானால் மல்லேஸ்வரியை உதவிக்கு அழைத்துக்கொள்ளுங்களேன்//

ஒரு பெண் தன் கையில் ஒரு அறிவாள் இருந்தால் தன்னை சுற்றி பத்து கயவன் இருந்தாலும் அதில் ஒருவனையாவது கொல்ல போராடுவாள். அவளாலும் வெட்ட முடியும்.. இது அவளுக்குரிய தைரியமே.. அதற்கு திரண்ட தோள் தேவை இல்லை.

இதற்கும் சுதந்திரதிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. முறையாக பயன்படுதுவது தான் சுதந்திரம்..முறையற்று அல்ல.. எல்லொருக்கும் சுதந்திரம் உள்ளது.. அதை எப்படி விவேகமாக கையாளுகிறோம் என்பது தான் கேள்வி.. ஆம் என்னால் முடியும், என மல்லேஸ்வரியே நினைத்து தேவை இல்லாத பிரச்சனையை தலையில் தூக்கி போட்டு.. என் தோள்கள் திரண்ட தோள்கள் அதனால் முயன்று பார்த்தேன் என கடைசியில் கூறி என்ன பயன். உரிமை சுதந்திரம் என்பது தன்னால் பிறக்கும், பிறரால் தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் காரியத்தை சாதிப்பது.

அப்படி எதிர்பாராத விதமாய் ஒரு பிரச்சனை வந்தால் இன்றைய பெண் துணிச்சலாய் எதிர்ப்பாள் என்று தான் நாங்களும் கூறிகிறோம். அதற்காக தேவை இல்லாத பிரச்சனையை வர வைத்து தான் சுதந்திரத்தை காட்ட வேண்டும் என இல்லை.நமக்கு உரிமை சுதந்திரம் உள்ளது என நம்பினால் ஒழிய..

//மழை,வெள்ளம்,பூகம்பம் போன்றவை ஏற்படும் முன்னே பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் மட்டும் தெரிந்து பாதுகாப்பான இடங்களுக்கு பெயர்ந்து தன்னைக் காத்துக்கொள்கின்றதே!இந்த அறிவு மனிதனுக்கும் மட்டும் இல்லையா? இருந்தது நடுவர் அவர்களே, பயன் படுத்தாமல் விட்டதினாலேயே இந்த அறிவு நம்மை விட்டு விலகி விட்டது. மயிர்கூட்ச்செறிவது இதனுடையா எச்சம் தான் என்பதை மறுக்கமுடியுமா?//

அச்சம் மடம் நாணம்.. பொன்றவை எதற்கும் உதவாத பண்பா?
அதெல்லமும் நாகரீகம் வளர்ந்த பெண்கள் இன்றும் கடைபிடித்து அவர்களின் இரத்ததில் கலக்கி இருப்பதால் தான் குடும்பம் என்பது ஒரு கட்டுகோப்பில் உள்ளது. தாய் தன் மகளை வீரம், சுதந்திரம், உரிமை இவற்றை ஊட்டி வளர்த்தாலும் , கூடவே அச்சம் மடம் நாணம் போன்றவற்றையும் ஊட்டி வளர்ப்பாள். காரணம்.. அவள் வாழ்வில் அனைத்தையும் பொறுமையுடனும், அதே நேரத்தில் தவிர்க்க முடியாத துன்பம் எனில் அதையும் துணிவுடன் போக்க வேண்டும் என்பதால்.

//இப்படி இயற்கையில் இல்லாத அதிசயமாக
இருப்பதே பெண்களின் சுதந்திரமா?
தன் நாட்டு சுதந்திரத்துக்காகப் போராடிய பெண்களின் தையிரியம்
தன்னைச் சுற்றும் காமக் கண்களை எதிர்க்கும் துணிவை எங்கே தொலைத்தனர்?
ஆயிரக் கணக்கில் கொன்று குவித்த ஜான்சிராணியின் வம்சம் அல்லவா நாம்
இப்போதோ பஸ்ஸில் பின்பிருந்து துளைக்கும் ஒருகரத்தினை
இருகரங்களினால் பிடித்து ஒடைக்க முடியாமல்
எதிர்க்க முடியாமல் மனதினுள் வெம்பி கூசிக்குறுகி-இதில்
எங்கே தொலைந்துபோனது நமது சுதந்திரம்//

சுதந்திரம் வளர்ந்து இருக்கிறதா இல்லையா என்பதே கேள்வி.. அல்லாமல் சுதந்திரத்தை எவ்வாறு பயன்படுத்திகிறோம் என்பது அல்ல... இடம் பொருள் ஏவல் என்பதை பெண் மட்டும் இல்லை ..ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து நடக்க வேண்டும். விலங்கிற்கு அது தெரியாது.

கைகளை உடைக்க ரெடி ;-).. உடைத்தால் அது பெண் சமூகம் வளர்ந்திள்ளது எனக் கூறும் எங்களுக்கு பெருமையே... . வாழ்வில் உள்ள எதார்த்ததை புரிந்தும் வாழ வேண்டும்..

நடுவரே பெண் சுதந்திரம் வளர்ந்தே உள்ளது.. மீண்டும் வருவேன்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தாய் நாட்டு விடுதலைக்காக போராடிய பெண்குலத்தினர் இன்று வகுப்பரையிலும்,பஸ்ஸிலும்,அலுவலகத்திலும் போராடததுக் காரணம் அன்று இருந்த தையிரியம் இன்று மட்டும் காணாமல் போய் அங்கே நீங்கள் விளக்கம் கூறிய அச்சம்,மடம்,நாணம் எப்படி பெண்களிடம் திணிக்கப்பட்டது என்பதைத்தான் கூறியுள்ளேன்.

கையை உடைப்பது நாகரிகம் இல்லை என்றால் அதே இடத்தில் அமர்ந்து அஹிம்சை முறையில் போராடலாமே? எது அவர்களைத் தடுக்கிறது? தன்னுடைய சுத்ந்திரம் என்னவென்றே தெரியாமல் ஏதோ அனைத்துத் துரைகளிலும் நாங்கள் இருக்கிறோம் இருக்கிறோம் என்று கூவிக்கொண்டு இருப்பது வேதனை அளிக்கும் விசயம் அல்லவா?

சங்க காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை எல்லா துறைகளிலும் இருப்பது மட்டும் பெருமை இல்லை. ஒரு பெண் ஆணைச் சார்ந்து இருக்கும் அமைப்பு மாறும் வரை, மாற்றம் வரும்வரை அவளுடைய முழுமையான சுதந்திரம் வளராமல், கிடைக்காமல் தான் இருக்கும்.

ஆணின் வெற்றிக்குப் பின்னே ஒரு பெண் என்பது ஒரு ஆணுக்கு எப்படி பெருமையோ:
அதே போல் ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னே ஆண் என்பது வர வேண்டாமா?

ஒரு ஆண் தன் மனைவியைய் தனக்கு கட்டுப்பட்டவள் என்ற போக்கு மாற வேண்டாமா?

மேலும் நீங்கள் கூறியிருப்பது போல் அன்றிலிருந்து இன்று வரை எல்லாத்துறைகளிலும் இருப்பதே சுதந்திரம் வளர்ந்துள்ளது என்றால் இது வளர்ச்சி அல்லவே! அப்படியேதான் இருக்கிறது என்பதுதான் உண்மை.

சுதந்திரம் என்பது வளரவில்லை. பெயரளவில் மட்டுமே !

நன்றி.

Don't Worry Be Happy.

அம்மாடியோவ் பட்டி நல்லா பட்டையைக் கிளப்புது. ரெண்டு அணியினரும் விட்டேனா பார்னு சரிக்கு சரியா வாதாடறாங்கப்பா. நடுவருக்குத்தான் தலையை சுத்துது. ஆமினாவம் தேவிசுரேஷும் சொல்லியிருப்பதையெல்லாம் படிச்சுட்டு ஆமா இதுவும் சரிதானேன்னு அந்தப்பக்கம் சாய்ஞ்சா ரம்யாவும் மோகனாரவியும் பதிலடி கொடுத்து இதுவும் சரிதானேன்னு இந்தப்பக்கம் இழுக்கறாங்க.

வனியும் இளவரசியும் சொல்றதைக் கேட்டு ஆமால்ல நாம எப்படில்லாம் சுதந்திரமாய் இருக்கோம்னு நினைச்சு சந்தோஷப்பட்டா ரொம்பல்லாம் சந்தோஷப்படாதேன்னு ஜெயலெக்ஷ்மி சுதந்திரப்போராட்ட வரலாறெல்லாம் சொல்லி எப்படி இருந்த நாம எப்படி ஆயிட்டோம்னு கவலைப்பட வச்சுட்டாங்க :(

இஷானி வேற எப்படி தீர்ப்பு சொன்னாலும் நடுவருக்கு ஆப்புதான்னு சொல்லிட்டாங்க :(
வளர்மதியும் தவமணியும் அவங்கவங்க தரப்பை சொல்லி என்னை ஆட்டம் காண வச்சுட்டாங்க. அச்சம் மடம் நாணம் தெரியும் அந்த பயிர்ப்புன்னு ஒன்னு சொல்றாங்களே அதுக்கு என்ன அர்த்தமுங்க சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன் :)

அய்யோ அய்யோ கவி எப்படீ தீர்ப்பு சொல்லப்போறே?! இந்தவாரம் சிங்கப்பூர் போறேன்னு சொல்லி எஸ்கேப் ஆகவும் முடியாதே! இந்தவாரம் உனக்கு ஆப்புதான் மகளே. அனுபவி கவி அனுபவி.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அடடா இது யாரு அட்மின் அண்ணாவா? வாங்க வாங்க. வராதவுக வந்திருக்கீக. எந்தப்பக்கம்னு சொல்லிட்டு போயிருக்கலாம்ல. அண்ணிக்கிட்ட இருந்து பெர்மிஷன் கிடைக்கலியோ :). மீ..த எஸ்கேஏஏஏஏஏப்பூஊஊஊஊஊஊஊ

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!


எதிரணிகாரா இப்படியெல்லம் பேசராளே-ன்னு நேக்கு ரொம்ப வருத்தமாயிடுத்து.

”தூங்கறவால எழுப்பிடலாம். தூங்கறாமாறி நடிக்கரவால எழுப்ப முடியுமோ?”

ம்ம்ம்... இப்படி பேசரவாதான் நன்னா சுதந்தரத்த அனுபவச்சிண்டுருக்கா.

இப்படி சொன்னவா மோகனா மாமி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


எதிரணிகாராகிட்டே ஒரே ஒரு கேள்வி கேட்கலாம்னு வந்தேன்.பார்வதிக்கு தன் ஒடம்புலேயே பாதிய கொடுத்துட்டார் சிவ பெருமான் இத விட பொம்மனாட்டிக்கு என்ன வேணும் சொல்லுங்கோ.ஒங்க கிட்ட ஒரு ரகசியம் சொல்றேன் காத கொண்டங்கோ சோனியா காந்தி சொல்லறதான் மன்மோகன் கேக்கறாராம்.இத கேட்டாலே தெரியலியா சுதந்த்ரம் வள்ந்திருக்குன்னு.யோசிச்சு பாருங்கோ.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மோகனா மேடம் ரகசியம் கேட்டுச்சு. அதான் ஊரறிந்த ரகசியமாச்சே!. தொடருங்க தொடருங்க வாதத்தை.

எனக்கு இப்பவே நடுவர் பதவியை ராஜினாமா பண்ணிட்டு ஏதாவது ஒரு அணி பக்கம் சாய்ஞ்சிடலாம்னு தோணுது. ரெண்டு அணியில் ஒரு அணியினர் அவர்களுக்கு சாதகமான மிக முக்கியமான பாயிண்டை கெட்டியா பிடிக்காம விட்டுட்டு வாதாடறீங்களே! கொஞ்சம் யோசிங்க ஞாபகத்துக்கு வந்திடும். இல்லேன்னா தீர்ப்பு எழுதும் போதுதான் சொல்வேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!


அச்சச்சோ, அப்படியெல்லாம் சொல்லப்படாது.ம்ம்ம்....இருங்கோ, கொஞ்சம் யோசிக்கறேன்.அட.... ஆமா நம்ம நடுவரே சுதந்தர பொண்ணா இருக்கேளே!அப்ப எங்க அணி ஜெயிச்சாச்சு.

ஹிப்,ஹிப் ஹூரெ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

எங்க அணி எனக்கே பேச வாய்ப்பு குடுக்காம வாதாடிகிட்டிருக்காங்க!!! எல்லாத்தையும் அவங்களே பேசிட்டா நான் என்ன பேச!!! :( இதுல நடுவர் ராஜினாமாவா??? விடுவோமாக்கும்??!!! எங்க மக்கள் கஷ்டப்பட்டு வாதாடுறாங்க!!! தீர்ப்பை சொல்லும் வரை அங்குட்டு இங்குட்டு வேடிக்க பாக்கபுடாது!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்