கனவு பள்ளிக்கூடம்

ஒரு நல்ல பள்ளிக்கூடம் எப்படி இருக்க வேண்டும்...இது ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை...இதை நான் ரொம்பவே அனுபவித்துருக்கிறேன்...என் பையன் இப்போது ஏழாம் வகுப்பு படிக்கிறான்...மதுரையில் படித்து கொண்டிருக்கும்போதே என் கணவருக்கு பெங்களூர் மாற்றலாக அங்கே நிறைய விஷயங்களில் சிரமப்பட்டேன்...அதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
1.என் மகன் இங்கே matric board இல் படித்து கொண்டு இருந்தான்..பெங்களூர் இல் சேர்க்கும்போது முதலில் என்ன போர்டு போன வகுப்பில் படித்தான் என்று தான் கேட்டார்கள்..cbse,icse board கு முன்னுரிமை தருகிறார்கள்...
2.bangalore இல் எனக்கு பிடிச்ச ஒரு விஷயம் தமிழகத்திலும் அதை நடைமுறை படுத்துகிரார்கலானு தெரியவில்லை...பொதுவாய் எல்லா பள்ளிகளிலும் library periods உண்டு..அந்த period இல் பள்ளி நூலகத்தில் புத்தகம் எடுத்து படிக்கலாம்..பின்னர் வீட்டுக்கு கொண்டு வந்து படிக்கலாம்...இது தான் நடைமுறையில் இருக்கிறது...பட் பெங்களூர் இல் என் மகன் படித்த பள்ளியில் தேர்வு அட்டவணையில் நூலக பரிட்சையும் (லைப்ரரி எக்ஸாம்) உண்டு...அந்த வருடத்தில் அவன் எத்தனை புத்தகம் படித்தானோ அதை பற்றி அவன் narrate பண்ணலாம்..அந்த கதையின் முடிவினை(climax) அவனுக்கு பிடித்தமாதிரி மாற்றி கொள்ளலாம்...இதற்கும் தனியாக மதிப்பெண் உண்டு...இது அவர்களின் படிப்பதன் ஆர்வத்தை கட்டாயபடுத்தியது ...க்ரியடிவிட்டி பண்பும் வளர தூண்டு கோலாய் அமைந்தது..
இது மாதிரி நம் ஊரில் செயல்படுத்திகிறார்களானு தெரியவில்லை...அப்படி இருந்தால் கூறுங்கள்...

3. மீண்டும் என் கணவருக்கு தமிழகத்தில் பணிமாறுதல்..வேறு பள்ளியில் சேர்த்தோம் இங்கே..பொதுவாய் என் பையன் ரொம்பவே நன்றாய் படிப்பான்...பெங்களூர் பள்ளியில் படிக்கும்போது சுத்தமாய் கன்னடம் எழுத படிக்க தெரியாது...தமிழ் சங்கத்தின் உதவியுடன் நன்றாய் எழுத,படிக்க கற்றுகொண்டான்...அவன் தான் பெங்களூர் பள்ளியிலும் class first எப்பவும்...இந்த நிலையில் மீண்டும் தமிழகம்...புது வகுப்பில் சேர்ந்த ஒரு மாதத்தில் ஒரு விபத்தில் என் மகனுக்கு வலது கால் எலும்பு முறிந்து படுக்கையில்...3 மாசம்...அப்போது இடை தேர்வு நடந்து கொண்டிருந்தது..கடைசி பரீட்சைக்கு முதல் நாளில் தான் விபத்து...அதனால் கடைசி பரீட்சை எழுத முடியவில்லை...பையன் LKG இல் இருந்து proficiency award தொடர்ந்து வாங்கி வருகிறான்...பள்ளி போக முடியவில்லைன்னு அவளவு அழுவான்...வீட்லயே இருந்து படிச்சு காலாண்டு தேர்வு எழுத தூக்கி கொண்டுபோய் பள்ளியில் விட்டோம்...காலாண்டு தேர்வு விடுமுறையில் கால் நன்றாய் நடக்க வந்து விட்டது...3 மாசம் பள்ளிக்கு போகாமல் அவனாக படிச்சு பரீட்சை எழுதி அவன் தான் class first...இந்த நிலையில் பள்ளி நிர்வாகமும்...வகுப்பு ஆசிரியர்களும்...அவனை encourage பண்ண கை(shake hands) கொடுத்தல் கூட அவனுக்கு சந்தோஷமாய் இருந்த்ருக்கும் இல்லையா...எந்த encouragement பண்ணவில்லை...அவனை நாலு வார்த்தை பாராட்டி இருக்கும்போது...இது மற்றவர்களுக்கும் ஒரு படிப்பினையாய் இருக்கும் இல்லையா...இத்தனைக்கும் அந்த பள்ளி நகரத்தில் தலை சிறந்த பள்ளி...அப்புறம் proficiency nominee யில் என் பையன் முதலாவதாக இருந்தான்...ஆனால்...ஒரு பரீட்சை எழுத வில்லையென்று அதுவும் reject panni விட்டார்கள்..proficiency கு என்று விதிமுறைகள் இருந்தால் சரி...ஆனால்..இவன் முயற்சிக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவே இல்லை என்பது ஒரு அம்மாவாய் கொஞ்சம் வருத்தம் தான்...அதனால்...நான் விரும்பியது திறமைக்கு மனப்பூர்வமான அங்கீகாரம் குடுக்கும் பள்ளி...

4 .ஒரு 25 கேள்விகள் எழுதிபோட்டு இதை படிச்சுட்டு வாங்க நாளைக்கு தேர்வு னு சொல்ற பள்ளிகளை வெறுக்கிறேன்...தற்பொழுது என் மகனை வேறு பள்ளிக்கு மாற்றி விட்டேன்..இந்த விஷயத்தில் இந்த பள்ளி அழகான நடைமுறையை பின் பற்றுகிறது...ஒரு பாடத்தை ஆசிரியர் சொல்லி கொடுத்தபின்...கணினி மூலமாய் தக்க வரைபடங்கள் மூலம் இன்னும் தெளிவாய் விளக்குகிறார்கள்...அதன்பின்பு உடனே..உங்களுக்கு புரிஞ்சதை எல்லாமே ஒரு வெள்ளைத்தாளில் எழுதுங்கள் என்று சொல்கிறார்கள்..பின்னர் புதிர் கேள்விகள் கேட்டு பதில் வாங்குகிறார்கள்...அவர்களாகவே கேள்வி,பதில் எழுதி போடாமல்...உங்களால் எவளவு கேள்விகள் அந்த பாடத்தில் அமைக்க முடியுமோ...அதை எடுத்து வாருங்கள் என்று கூறுகிறார்கள்..அப்படி சொந்தமாய் ஒரு கேள்வி அமைக்கும்போது அவனால் அந்த நொடியிலேயே அதன் கேள்வி,பதில் மனப்பாடமாய் தெரிந்து விடுகிறது...கேள்வி சொந்தமாய் அமைக்கும் போது அவனுக்குள் ஒரு creativty யும் வந்து விடுகிறது..தனியாய் உட்கார்ந்து மொட்டை மனப்பாடம் செய்ய அவசியம் இல்லையா? அதிக கேள்விகள் தயார் பண்ணி கொண்டுவருபவர்களுக்கு clapses m உண்டு ...இது நன்றாய் இருப்பது போலே தோனுகிறது....இதுவும் ஒரு நல்லபள்ளியின் அம்சமாக உணர்கிறேன்...
...உங்கள் கருத்துக்கள் எனக்கு இன்னும் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள உதவும்...
இன்னும் என் சில கனவுகள்...தொடர்ந்து கூறுகிறேன்

பள்ளிக்கூடம்னு தலைப்பை பாத்தாலே சின்ன வயசுல வந்த பயம் இப்பவும் இருக்கத்தான் செய்கிறது, அதுனாலதான் இன்னும் இங்க யாரும் வரல போல :)
அன்புடன்
ஆஷிக்

நாங்க 5, 6 வருடங்களுக்கு முன்பு ஜபல்பூர்(m.p.) என்னுமிடத்தி இருந்தோம்.
பக்கத்துவீட்டில் ஒரு பையன் 11-ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான்.
அந்த நேரம் அந்தபையனின் அப்பாவுக்கு நாக்பூருக்கு ட்ரான்ஸ்பர் ஆயிடுத்து.
மத்யப்ரதேசத்தில் அபோ 11-வது s.s.c.போர்ட் எக்ஸாம். நாக்பூர் மஹாராஷ்ட்ரா
வில் வருகிரது. அங்கு 10-வதுதான் போர்ட் எக்ஸாம்.இப்போ பையனை கூட்டிண்டு
போனா படிப்பு ப்ராப்ளம் ஆகிடுமே. இன்னும் 6 மாதத்தில் எக்ஸாம் வந்து விடும்.
எங்க வீட்டில் 6மாதம் அந்த பையனை வச்சுண்டோம். ஆனா அவனுக்கு வீட்டு நினைவு வந்து, வந்து படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் அவஸ்தைப்பட்டான்.
11-வது பரீட்சை எழுதாமலேயே அந்த பையனை அவ அப்பா வந்து நாக்பூர்
கூட்டிண்டு போயிட்டார். அங்குள்ள படிப்பு முறைகள் தெரியாததால 11- வது
வகுப்பிலேயே அட்மிஷ்ன் வாங்கி பரீட்சையும் எழுதி 85% மார்க்கும் வாங்கி பாஸ்
பண்ணினான். அடுத்து12-வது வகுப்பில் சேரும் போது தான் பிரச்சனையே ஆரம்பம். 10-வதொட போர்ட் எக்ஸாம் அட்டெண்ட் பண்ணியிருந்தால்தான் 12-வது
போர்ட் எக்ஸாம் எழ்ய்த முடியும். இப்போ நீங்க உங்க பையனை திரும்பவும் 10
வதில் சேருங்க என்று சொல்லி விட்டார்கள் ஐயோ எப்படி இருந்திருக்கும்?
நல்லா படிக்கற குழந்தைகளை 11-வது பாஸ் பண்ணின பையனை திரும்ப
10-வது படிக்கனும்னா, ரொம்பவே அப்செட் ஆயிட்டான். வேர வழியே இல்லை
திரும்ப 10-வதில் சேர்ந்து படித்து பரீட்சை எழுதினான் 90% மார்க் வந்தது.
ஆனா மேற்கொண்டு படிக்க மாட்டென்னுட்டான்..

பள்ளிக்கூடம்னால் "உச்சா.. கக்கா" போய்டுவாங்கன்னு தான் "கனவு பள்ளிக்கூடம்னு" தலைப்பு கொடுத்தேன்..கனவு எல்லாருக்கும் வரும் அல்லவா...அதனால் கனவு பள்ளிக்கூடம்...நடக்க முடியாத விஷயங்களின் கோர்வை தானே கனவு..இல்லையா ஆஷிக்

Madurai Always Rocks...

இந்தியா பூராவும் போர்டு எக்ஸாம் ஒன்றாய் இருக்கும் என்று தான் நினைத்தேன்...ஆனால் மாநில வாரியாக கூட அரசு தேர்வில் இவ்வளவு குழப்பமா கோமு?? தற்பொழுது சமச்சீர் கல்வி நடைமுறை எத்தனையோ பெற்றோரை இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கிறது...தரமான கல்வி கிடைக்குமா என்று...மொத்தத்தில் குழந்தைகள் ரொம்பவே பாவம் இல்லையா??

Madurai Always Rocks...

cbse maRRum icse
கல்வி அமைப்பில் நம் நாட்டில் நான்கு சிலபஸ் உள்ளன ஸ்டேட் போர்ட், மெட்ரிக் போர்ட், சி பி ஸ் ஈ, ஐ சி ஸ் ஈ, இதில் ச்டேட் இருப்பதிலே தரம் கம்மி cbseமற்றும் icse சிலபஸ் படித்தால்தான் அகில இந்திய அளவிலான தேர்வு எழுதமுடியும். இந்த படிப்பு புரிந்து படிக்கும் படிப்பாகும். மனப்பாடத்துக்கு வேலை இல்லை . இந்தியாவை விட்டு வெளினாடுகளில் இந்த ஸிலபஸ்தான் அதிகம் இருக்கும். சமச்சீர் கல்வி மெட்ரிக் ப்ளஸ் cbse கலந்து வருகிரது. தமிழ் நாடைதவிர மற்ற மானிலத்தில் இந்த சிலபஸ்தான் .அதிகாம்உள்ளன . அவர்கள்தான்AIEEE JEE எழுதுகிரார்கல். தமிழ் நாட்டில் அந்த தேர்வு எழுதுபவர் கம்மி அதனைபற்றிய தெரிதலும் கம்மி

மேலும் சில பதிவுகள்