ஓட்ஸ் தோசை

தேதி: July 13, 2010

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (27 votes)

 

ஓட்ஸ் - 1 1/2 கப்
பாசி பருப்பு - 1 கப்
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை/மல்லி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
பச்சைமிளகாய் - 1 பொடியாக நறுக்கியது


 

முதலில் ஓட்ஸை வெறும் வணலியில் வாசம் வரும் வரை வறுக்கவும்.
அதே போல் பாசி பருப்பையும்,மிளகையும் சேர்த்து வறுத்து ஆறவைக்கவும்.
பின் இரண்டையும் தனித் தனியாக மிக்சியில் அரைக்கவும்.பருப்பை மட்டும் மிகவும் மாவாக இல்லாமல் சற்று குருணையாக அரைக்கவும்.
பின் மீதி உள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலந்து தண்ணீர் ஊற்றி தோசை மாவை விட கொஞ்சம் தண்ணியாக கரைக்கவும்.
பின் 15 நிமிடம் கழித்து தோசையாக சுடவும்.உடனடியாகவும் சுடலாம்.
சுவையான ஓட்ஸ் தோசை ரெடி.


இதில் மிளகுக்கு பதிலாக பச்சைமிளகாய் விழுதையும் சேர்த்து செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கீதா மேடம்,
ஓட்ஸ் தோசை புதுமையா இருக்கு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

very nice and healthy breakfast.

Thank you for this recipe..

sama super

ஓட்ஸ்தோசை நன்ன வந்தது. இதுபோல ஹெல்த் டிப்ஸென்றால்
உடனே செய்து பார்த்து விடுவேன். இதுபோல இன்னும் நிறைய
உபயோகமான குறிப்புகளைக்கொடுத்து வரவும்.

கீதா மேடம்

நேத்து நைட் இந்த தோசை தான் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி. மிகவும் சுலபமாகவும் அதே சமயம் ஹெல்த்தி புட் ஆகவும் இருந்தது...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹாய் ஸ்ரீகீதா ஓட்ஸ் தோசை செய்தேன் நனறாக இருந்தது

oats thosai very nice thanks 4 ur recipe

oatsyum araikanuma?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

Oats dosai romba taste a irukku madam :-)

நான் இன்று உங்கள் ஓட்ஸ் தோசை
சேய்தேன். தோசை ரொம்ப வலுவலுனு வந்தது.தோசை வரவே மாடேனு சொல்லிருசு:( எதனால இந்த மாதிரி வருதுனு சொல்ல முடியுமா pls.