இடிச்சக்கை துவரன்

தேதி: July 13, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சிறிய சக்கை - ஒன்று
தேங்காய் - 2 மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 - 3 (காரத்திற்கு ஏற்ப கூட்டி / குறைத்துக் கொள்ளலாம் )
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
தாளிக்க:
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
வரமிளகாய் - 2


 

முதலில் சக்கை துவரன் செய்ய மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவைகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். சக்கையின் தோலைச் சீவி எடுத்து விடவும்.
தோல் சீவிய சக்கையை சிறிது பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
சக்கை துண்டுகளை வெந்நீரில் 10 நிமிடம் வேகவைத்து தண்ணீரை நன்கு வடித்து விடவும்
அதை மிக்சியில் போட்டு ப்ளெண்டரில் ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
பின்னர் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியதை போட்டு தாளித்து ஒன்றிரண்டாக அரைத்த சக்கையை போட்டு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
பிறகு தேங்காய் அரைத்த கலவையை போட்டு நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும். இந்த இடிச்சக்கை துவரன் குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. லெஷ்மி ஷங்கர் அவர்கள்.

முன்பு சக்கையை வேக வைத்து இடித்து செய்தார்கள் அதனால் இதன் பெயர் இடிச்சக்கை துவரன். விருப்பம் இருந்தால் தேங்காய் அரைக்கும் போது பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

லக்ஷ்மி மேடம்,
முற்றிலும் புதிய குறிப்பு
இதுவரை எனக்கு இங்கு சக்கை கிட்டியதில்லை
கிட்டினால் கண்டிப்பாக செய்வேன்
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

லக்ஷ்மி, குறிப்பு நன்றாக இருக்கிறது. எனக்குப் பலாக்காய் பிடிக்கும். எப்போவாவது கிடைத்தால் சமைத்துப் பார்க்கிறேன். ;)

‍- இமா க்றிஸ்

லஷ்மி நிஙக் எந்த ஊர். எங்க ஊர் கேரளா எங்க வீட்டில் அடிக்கடி செய்வார்கள். ஊர் நினைவு வந்திட்டது. அடுத்த முறை போகும் போது தான் இனி சாப்பிட முடியும்.நல்ல குறிப்பு.

குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி
லக்ஷ்மிஷங்கர்

கவிதா மேடம் எல்லாம் வேண்டாமே ... நீங்க சக்கை கிட்டும்போது செய்து பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க
மிக்க நன்றி
லக்ஷ்மிஷங்கர்

இமா அம்மா
//சமைத்துப் பார்க்கிறேன். ;)//
அப்பன்னா சாப்பிட மாட்டீங்களா :))
மிக்க நன்றி
லக்ஷ்மிஷங்கர்

விஜி அக்கா
இங்க உங்களுக்கு கிடைக்காதா ?? உங்க ஊர்ல எங்க சொந்தக்காரங்க இருக்காங்க
மிக்கநன்றி
லக்ஷ்மிஷங்கர்

இல்லை. ;) அப்படியே ஷோகேஸில் வைத்துப் பார்த்துக் கொண்டே இருப்பேன். ;))

‍- இமா க்றிஸ்