மீன் வறுவல்

தேதி: July 14, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (8 votes)

 

1. மீன் - 3/4 கிலோ
2. மிளகாய் வற்றல் - 12 - 15
3. ஒரு முழு சின்ன பூண்டு
4. கறிவேப்பிலை - கொஞ்சம்
5. உப்பு - தேவைக்கு
6. எண்ணெய் - தேவைக்கு


 

உப்பு, மிளகாய் வற்றல், பூண்டு, கறிவேப்பிலை அனைத்தையும் சிறிது தண்ணீர் விட்டு சற்று கெட்டியான விழுதாக அரைக்கவும்.
இதை மீன் துண்டுகள் மீது தடவி குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
தோசை கல்லில் அல்லது ஒரு தவாவில் எண்ணெய் சிறிது விட்டு காய்ந்ததும் மீன் துண்டுகளை போட்டு மிதமான தீயில் வேக விடவும். ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் திருப்பி போடவும்.
இரண்டு பக்கமும் நன்றாக சிவக்க வெந்ததும் எடுக்கவும். எல்லா வகை மீனிலும் செய்யலாம். குறிப்பாக வஞ்சரம் மீன் இந்த வறுவலுக்கு மிக நன்றாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா மேடம்,
மீன் வறுவல் அசத்தலா இருக்கே
பாராட்டுகள்
மேலும் பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

எங்க அம்மா சொல்வார்கள், அசைவ உணவில் வாடை போக, மஞ்சள் தூள் போட வேண்டும் என்று, அதுவும் போடலாமா.....

வரலக்ஷ்மி.

True Love Never Fails.

கவிதா... மிக்க நன்றி :)

வரலக்ஷ்மி... விரும்பினால் மஞ்சள் தூள் சேர்த்துக்கங்க. நாங்க சேர்ப்பதில்லை, வாடை வருவதும் இல்லை. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

Vincy

மிக்க நன்றி தோழி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா