கத்திரிக்காய் தொக்கு

தேதி: July 15, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (5 votes)

கத்திரிக்காயில் நார்சத்து, வைட்டமின் B5, வைட்டமின் B1, வைட்டமின் B6, வைட்டமின் B3 போன்ற வைட்டமின்களும், தாது சத்துக்களான மான்கனீஸ், காப்பர், அயர்ன், பொட்டாஸியம் நிறைந்து காணப்படுகிறது. மேலும் ரத்தகொதிப்பு, புற்று நோய் வராமல் நம்மை காக்கும் ஆன்டிஆக்ஸிடண்ட் (antioxidants) நிறைந்து உள்ளது.

 

கத்திரிக்காய் - 200 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 3
வெங்காயத்தாள் - 2
பூண்டு - 6 பல்
கொத்தமல்லி - சிறிதளவு
கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
தேங்காய் துருவல் - அரை கப்


 

வெங்காயம், பச்சை மிளாகாய், தக்காளி, வெங்காயத்தாள், பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். கத்திரிக்காயை கழுவி விட்டு காம்பை நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்திருப்பவற்றை சேர்த்து வதக்கி எடுத்து ஆற வைக்கவும்.
வதக்கி ஆற வைத்ததை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்பு தாளித்தவற்றுடன் அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்.
பின்பு மசாலாதூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
அதன் பின்ன அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதினை சேர்த்து சிம்மில் வைத்து நன்கு கிளறி விட்டு இறக்கவும்.
மேலே கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கவும். சுவையான கத்திரிக்காய் தேங்காய் தொக்கு ரெடி.

இதனை சாம்பார் சாதம், கீரை சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். காரம் வேண்டுவோர் இதனுடன் மிளகாய் தூள் சேர்த்தும் சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை விரைவாக வெளியிட அட்மின் அவர்களுக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ரொம்ப சூப்பர்!! பார்க்கவே ஆசையா இருக்கு!!! செய்துட்டு சொல்றேன் கவிதா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மேடம்,
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வெங்காயத்தாள் என்றால் என்ன?