பாட்டில் உல்லன் பொம்மைகள்

தேதி: July 15, 2010

3
Average: 2.9 (15 votes)

 

உல்லன் நூல் - விரும்பிய நிறங்கள்
முட்டை - 2
வாட்டர் பாட்டில் - 2
ஃபேப்பரிக் பெயிண்ட் - கறுப்பு, வெள்ளை, ரோஸ் நிறங்கள்
பிஷ்நெட் ஒயர்
ஸ்டாஃப்ளர்
பெவிக்கால்
லேஸ்
ப்ரஷ்

 

பாட்டிலை வைத்து ஆண், பெண் உருவ பொம்மை செய்வதற்கு படத்தில் உள்ள பாட்டிலை போல் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். ஒல்லியாக உள்ள பாட்டில் ஆண் உருவ பொம்மைக்கும், 500 மி.லி ஃபேண்டா பாட்டிலின் அடிப்பாகத்தை நறுக்கி விட்டு பெண் உருவ பொம்மைக்கும் எடுத்துக் கொள்ளவும்.
பாட்டில் மூடியை கழற்றி விட்டு, அந்த மூடியின் அடியில் நீல நிற நூலை வைத்து முதலில் நன்கு இறுக்கமாக முடிச்சுப்போட்டு கொள்ளவும். அந்த நூலால் பாட்டிலை 10 முறை சுற்றிக் கொள்ளவும்.
10 முறை சுற்றி முடிந்ததும் அந்த நூலை நறுக்கி விட்டு பிங்க் நிற நூலை சேர்த்து முடிச்சு போட்டு கால் இன்ச் அளவு சுற்றி முடிக்கவும். பிறகு பிங்க நிற நூலை நறுக்கி விட்டு நீலநிற நூலை சேர்த்து முடிச்சுப் போட்டு சுற்றவும். முடிச்சுகள் ஒரே நேர்கோட்டில் வரும்படி முடிச்சு போடவும்.
அந்த நீலநிற நூலை பாட்டிலின் நடுப்பகுதி வரைக்கு சுற்றி முடிக்கவும். அடுத்து பிங்க நிற நூல் அரை இன்ச் அளவும், நீலநிற நூல் அரை இன்ச் அளவும் சுற்றி முடிக்கவும். கடைசியில் பிங்க் நிற நூலை சேர்த்து முடிச்சுப் போட்டு பாட்டிலின் அடிவரைக்கும் சுற்றி முடிக்கவும். பெண் உருவ பொம்மைக்கு உடல் பகுதி தயார்.
ஆண் உருவ பொம்மைக்கு டார்க் நீலநிறம் மற்றும் மஞ்சள் நிற நூலை எடுத்து கொள்ளவும். பாட்டில் மூடியின் அடியில் மஞ்சள்நிற நூலை வைத்து இறுக்கமாக முடிச்சு கொண்டு 10 முறை சுற்றிக் நறுக்கி விடவும். அந்த நூல் உடன் டார்க்நீல நிற நூலை சேர்த்து முடிச்சுப்போட்டு கொண்டு 10 முறை சுற்றிக் கொள்ளவும். இதேப்போல் மஞ்சள்நிற நூலால் 10 சுற்றுகள் 6 முறையும், டார்க்நீலநிற நூலால் 10 சுற்றுகள் 5 முறையும் மாறி, மாறி சுற்றி முடிக்கவும். இந்த சுற்றுகள் முடிந்தததும் அடிப்பாகம் முழுவதும் டார்க்நீலநிற நூலால் சுற்றி முடிக்கவும். இப்போது ஆண் உருவ பொம்மையின் உடல் பகுதி தயார். இதுப்போல் இரண்டு பொம்மையிலும் நூல்களை சுற்றி எடுத்துக் கொள்ளவும்.
ஏதாவது ஒரு பாட்டிலின் நடுப்பகுதியின் ஒரங்களை சிறிய செவ்வக வடிவத்தில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இரு ஒரங்களிலும் சற்று தள்ளி பிஷ்நெட் ஒயர் சொருகும் அளவிற்கு துளையிட்டு கொள்ளவும். முதல் ஒரு துளையில் பிஷ்நெட் ஒயரை மேல் வழியாக விட்டு அடிவழியாக கொண்டு வந்து மற்றொரு துளையின் மேல் வழியாக நுழைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது பாட்டிலின் மேல் சில்வர் நிற ஃபேப்பரிக் பெயிண்டை அடித்து நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது பெல்ட் தயார்.
வெள்ளைநிறம் மற்றும் பிங்க் நிற பேப்பரிக் பெயிண்டை கலந்தால் லைட் பிங்க்நிற பெயிண்ட் கிடைக்கும். இந்த பெயிண்டை இரண்டு முட்டை ஓடு முழுவதும் அடித்து நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கறுப்பு உல்லன் நூலை நான்கு செ,மீ அளவில் தேவையான அளவு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். மீதமுள்ள கறுப்பு உல்லன் நூலை முட்டையின் உயரத்தை விட சிறிது கூடுதலாக நறுக்கி எடுத்து கொள்ளவும். அதே அளவில் 12 துண்டுகள் நறுக்கி வைக்கவும். இந்த 12 நூலையும் ஏதாவது ஒரு முட்டையின் அடிப்பாகத்தில் மேலிருந்து பின்பக்கம் வருவது போல் வரிசையாக பெவிக்கால் தடவி ஒட்டி கொள்ளவும். அதாவது முட்டையில் இரு பக்கவாட்டிலும் நூல் தொங்குவது போன்று ஒட்ட வேண்டும். பின்னர் 12 நூலையும் நான்கு, நான்காக பிரித்து ஜடை பின்னுவது போல் இரட்டை ஜடை போட்டு கொள்ளவும். மற்றொரு முட்டையில் நான்கு செ.மீ அளவில் நறுக்கி வைத்திருக்கும் நூலை படத்தில் உள்ளது போல் ஒட்டிக் கொள்ளவும்.
இரண்டு முட்டையிலும் படத்திலுள்ளது போல் கறுப்புநிற பேப்பரிக் பெயிண்டால் கண், மூக்கு, வாய் வரைந்து கொள்ளவும்.
பிஷ் நெட் ஒயரில் செய்த பெல்ட்டை ஆண் உருவ பொம்மையின் இடுப்பில் வைத்து பின் பக்கம் ஸ்டாஃப்ளர் பின் போட்டுக் கொள்ளவும். பெண் உருவ பொம்மைக்கு மேலிருந்து நீலநிற நூல் சுற்றியதுக்கு கீழ் டிசைன் உள்ள லேஸ்ஸை சுற்றிலும் ஒட்டிக் கொள்ளவும். பாட்டில் அடியிலும் பெவிக்கால் தடவி ஒட்டவும். இந்த லேஸ்ஸை அதன் சுற்றளவுக்கு தகுந்தாற் போல் நறுக்கி ஒட்ட வேண்டும்.
இரண்டு முட்டையின் அடியிலும் பெவிக்கால் தடவவும். டார்க்நீலநிறம், மஞ்சள்நிற நூல் சுற்றிய பாட்டிலின் மேல் ஆண் உருவம் வரைந்த முட்டையை வைக்கவும். பிங்க், நீலநிறம் நூல் சுற்றிய பாட்டிலின் மேல் பெண் உருவம் வரைந்த முட்டையை வைத்து நன்கு ஒட்டி விடவும். பாட்டில்களைக் கொண்டு சுலபமாக செய்யக்கூடிய பொம்மைகள் தயார்.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த பாட்டில் உல்லன் பொம்மைகள் செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அம்மாடியோ!!! இப்படிலாம் கலக்கினா நாங்க என்ன செய்ய!!!! வாழ்த்து சொல்லியே ஆகணும்!!! அழகான செண்பகா & அண்ணா ;) Simply Super.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செண்பகா பாட்டிலை வச்சு என்னெல்லாம் பண்றீங்க! ரொம்ப அழகா இருக்கு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மிஸஸ் அட்மினிமேடம்( அட்மினுக்கு பெண்பால்) பாட்டிலில்உல்லன்
அசத்தலான பொம்மைகள். இன்னம் எவ்வளவு கை வேலைகள் ஸ்டாக்கில்
வைத்திருக்கிரீர்கள்? நவீனா உங்களை இந்த வேலைகளெல்லாம் செய்ய
விடறாளா? உங்களைப்பார்த்து வளரும் பெண். தாய்8 அடிபாஞ்சா, குட்டி
16 அடி பாயப்போரா..

செண்பகா மேடம்,
ரொம்ப அற்புதம்
பொம்மை ரொம்ப அழகாக இருக்கு
நீங்க செய்கிறவற்றை வைக்கவே ஒரு வீடு வேண்டும் போல இருக்கு...
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வழக்கம் போல சூப்பர் செண்பகா மேடம். அசத்துறீங்க. வாழ்த்துக்கள்.

சுப்பர்ப் செண்பகா. வழக்கம்போல் கலக்கல் கைவேலை.
அது என்ன, பொண்ணு குள்ளமா குண்டா, அவங்க ஆளு ஒல்லியா உயரமா இருக்கார். ;))) பொண்ணு சிரிப்பு "ஹையா! எப்படி!! எட்டி எட்டியாச்சும் முடியைப் பிச்சு விட்டு இருக்கிறேன், பாருங்க," என்று சொல்லுது. ;))) அந்தாள் கோவமா, பாவமா இருக்கார். மீசை அழகா இருக்கு. ;)))
கலக்கல் ஜோடி.
ரசித்தேன். ;)))

‍- இமா க்றிஸ்

இந்த பாட்டில் பொம்மைகள் ரொம்ப நல்லா இருக்கு. இதே மாதிரி சிகப்பு நிறத்தில் என் வீட்டில் ஒரு பேமிலியே (வாங்கி!!!) வெச்சுருக்கேன். அதுங்களுக்கு சைனீஸ் முகம் இருக்கும். எப்படி இந்த மாதிரி ஐடியாலாம் உங்களுக்கு தோணுது. ரொம்ப பொறுமையான ஆள்னு இதுலேயே தெரிஞ்சுக்கலாம். நவீனா குட்டி எப்படி இருக்கா? அவளுக்கு என்னோட அன்பு முத்தங்களை கொடுத்துடுங்க.

ஷெண்பகா.

ரொம்ப அழகு.. முதலில் பார்த்தவுடன் எந்த பொருளில் இருந்து செய்தீருப்பீர்கள் என நினைத்தேன்.. ஆனால் இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அறுசுவை டீம்,

//எளிதாக, சுலபமாக பாட்டிலை கொண்டு செய்யக்கூடிய பொம்மைகள் தயார்.//

எளிதாக - சுலபமாக இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? :-)

என்ன பாப்பி, உங்க ரெண்டு பேரு மாதிரி மட்டும் உருவ பொம்மை செஞ்சுக்கிட்டீங்க? அப்படியே ஒரு குட்டி பாட்டிலில் நவீனா பொண்ணு மாதிரியும் செய்யலாமில்ல...? :)) நவீனா அழகுக்கு ஈடாலாம் செய்ய முடியாதுன்னு விட்டுட்டீங்களோ? ;))

இமா! உங்க‌ கற்பனை கமெண்ட் நல்லா காமெடியா இருக்கு ;)

என்ன வனிதா உங்களவிடவா நான் கலக்குறேன். //அழகான செண்பகா & அண்ணா ;)// நீங்க ரொம்ப பொய் பேசிரிங்க வனிதா:) என்னை வாழ்த்தியமைக்கு ரொம்ப நன்றி.

senbagababu

எப்படி இருக்கீங்க கவி? உங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி.

senbagababu

உங்க பாராட்டிற்கு நன்றி. ஸ்டாக்கெல்லாம் ஒன்று இல்லை அப்பப்ப நேரம் கிடைக்கும் போது ஏதாவது அறுசுவைக்கு செய்து காட்டலாமே என்று முயற்சி செய்து பார்ப்பது உண்டு அவ்வளவுதான். பாப்பா தூங்கும் போதுதான் செய்வேன். /தாய்8 அடிபாஞ்சா, குட்டி 16 அடி பாயப்போரா..// பாப்பா இப்போதான் 2 அடி எடுத்து வைக்கறா(நடப்பதற்கு):)

senbagababu

மேடம் வேண்டாமே. எப்படி இருக்கீங்க கவிதா? சமையல் குறிப்புகள் கொடுத்து அசத்துறீங்க வாழ்த்துக்கள். /நீங்க செய்கிறவற்றை வைக்கவே ஒரு வீடு வேண்டும் போல இருக்கு...// அந்தளவுக்கு இன்னும் செய்யவில்லை. வாழ்த்துக்கு நன்றி.

senbagababu

செண்பகா மேடம் ரொம்ப அழகா இருக்கு. உங்களோட திறமையை பாராட்டியே ஆக வேண்டும். பொம்மையை பார்த்துவிட்டு எப்படி செய்திருப்பீா்கள் என்று யோசித்தேன். விடை தெரியவில்லை. இங்கு பார்த்தால் பாட்டில் வைத்து செய்துள்ளது அருமை. மிக்க நன்றி

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நீங்க அறுசுவைக்கு புதிதா? நான் முதன் முறையாக உங்களிடம் பேசுகிறேன். எப்படி இருக்கீங்க? என்னோட எல்லா கிராப்ட்டையும் பார்த்தது உண்டா? வாழ்த்துக்கு ரொம்ப நன்றி

senbagababu

அம்மா எப்ப பாத்தாலும் காமெடிதான் உங்களுக்கு. இருந்தாலும் உங்க கற்பனை ரொம்ப சூப்பர்:)ரொம்ப நன்றி

senbagababu

உங்க வீட்டில் இருக்கும் பொம்மையை போட்டோ எடுத்து அனுப்புங்க பார்க்க ஆசையா இருக்கு //ரொம்ப பொறுமையான ஆள்னு இதுலேயே தெரிஞ்சுக்கலாம்.// உண்மைதான்:) பாப்பா ரொம்ப நல்லா இருக்கா. உங்களிடைய முத்தத்தை கொடுத்துவிட்டேன். நேரில் வந்து தரசொல்றா.

senbagababu

உங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி.

senbagababu

அஸ்மா எப்படி இருக்கீங்க? எங்க இரண்டு பேரு சைஸ்ல மட்டும்தான் பாட்டில் கிடைத்தது. பாப்பா சைஸ்சில் சின்ன பாட்டில் கிடைக்கவில்லை:) பாராட்டிற்கு ரொம்ப நன்றி.

senbagababu

அசத்திட்டிங்க. ஆமாம் கை எல்லாம் இல்லை. இல்லை எனக்கு தான் தெரியல்லையா? எதுவானலும் பார்க்க கொள்ளை அழகு+ செலவில்லாமல் ஒரு சூப்பர் பொம்மை செய்துடவேண்டியது தான்.

ஐயோ மேடம் வேண்டாமே எத்தன தடவை எல்லார்கிட்டயும் சொல்லுவேன். உங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி ராதா.

senbagababu

எப்படி இருக்கீங்க? ஒரு முறை போனில் உங்களிடம் பேசி இருக்கிறேன். ஞாபகம் இருக்கா? அந்த பொம்மையில் கையில்லை விஜி. இந்த பொம்மை செய்ய செலவு இல்ல விஜி விட்டில் இருக்கும் பாட்டில் வைத்தே செய்து விடலாம். செய்து போட்டோ எடுத்து அனுப்புங்க.

senbagababu

ஓகே செண்பகா..... இது ஓகேவா? எனக்கு உங்க பின்னுாட்டத்தைப் படித்ததும் ஒரு சிறு குழப்பம். ஏன் மேடம் என்று கூற வேண்டாம் என்கிறீா்கள் என்று. ஏனென்றால் இப்பொழுது தான் தவமணி அவா்களை மேடம் என்று கூறி மாட்டிக் கொண்டேன். பிறகுதான் தெரிந்தது அவா் மேடம் அல்ல சார் என்று. அது போல் தாங்களுமோ என்று ஒரு வினாடி யோசித்துவிட்டேன். பிறகு உங்கள் படம் இருக்கிறதே, ஆதலால் நீங்கள் கண்டிப்பாக பெண்தான் என்று பிறகு முடிவுசெய்தேன். அடுத்த பின்னுாட்டத்தில் சந்திப்போம்

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


ஒங்கள மாறியே ஒங்க பொம்மையும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பபபப அழகாருக்கு.ம்ம்ம்ம்ம்ம்ம் .... அப்பறம் நீங்கதான் பாபு சாரோட WIFE-ஆ.
(ஹையா அட்மின் சார் குடும்பத்ல ஒருத்தர போட்டோல பாத்துட்டெனே!)
என்ன பத்தி அவர்கிட்ட கேளுங்கோ. பட்டி-20 ல என்ன போட்டு தாக்கிட்டார்.கொழந்த நவீனா போட்டொவ பாக்கனும்போல் இருக்கு.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

//ஒங்கள மாறியே ஒங்க பொம்மையும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பபபப அழகாருக்கு.ம்ம்ம்ம்ம்ம்ம் .... // என்னைய வச்சு காமெடி கீமெடி ஒன்றும் பண்ணலையே. நான் பாபுவோட மனைவியேதான் மோகனா. //(ஹையா அட்மின் சார் குடும்பத்ல ஒருத்தர போட்டோல பாத்துட்டெனே!)// நவீனா குட்டி போட்டோவையும் நீங்க பார்க்கலாம். பாபு உங்கள பத்தி சொன்னாங்க.

பாப்பா போட்டோவோட லிங்கை தருகிறேன் பாருங்க.
http://www.arusuvai.com/tamil/node/14967

senbagababu


இப்பதான் ஒங்களவரோட 02-06-2010 ஊர் சுத்தின கதைய படிச்சுண்டு இருந்தேன்.
நீங்க கூப்படறத பார்த்ததும் ஓடோடி வந்துட்டேன்.பாப்பா ரொம்ப அழகா ஒங்கள மாறியே இருக்கா.நெஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாமாமாமா!(மேடம்னு கூப்பிடபடாதுன்னுதான் சொல்லிட்டேளே!)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நான் அறுசுவைக்கு புதிது செண்பகா மேடம். நான் நன்றாக இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க? என்னை நலம் விசாரித்ததற்க்கு மிக்க நன்றி செண்பகா மேடம்.

"என்னவென்று சொல்வதம்மா
பொம்மையின் பேரழகை
சொல்லமுடிய வில்லையம்மா
செண்பகாவின் திறமையை"

உங்களுடைய பல படைப்புகளை இன்று தான் அறுசுவையில் பார்த்தேன். அனைத்தும் அற்புதம். உஙகளுடைய கற்பனை திறன் வளர என் வாழ்த்துக்கள்.

//எளிதாக - சுலபமாக இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? :-)//
என்ன சொல்றது! பொறாமை பிடிச்ச ஆட்கள். தாங்கள் பங்களிப்பு செய்தால் இப்படி எல்லாம் கேள்வி கேட்பாங்களா!! கேட்காத கேள்விக்கும் ஓடி வந்து பதில் சொல்லுவாங்க. ;-)

‍- இமா க்றிஸ்

சூப்பர் creativityங்க, எப்படிங்க இப்படிலாம் யோசிக்கிறீங்க. ரொம்ப அழகா க்க்யூட்டா செய்து இருக்கீங்க செண்பகா. அதுவும் அந்த பெண் பொம்மஒயின் ஜடை தான் சூப்பட்.

பொம்மைகள் மிக அழகு. உங்கள் கைவேலைகள் எல்லாமே மிக மிக அழகு. பாராட்ட வார்த்தைகள் இல்லை பிரமாதம். வாழ்த்துக்கள் தொடருங்கள்.
அன்புடன் செபா.

dear poppy akka, hw r u? hw s anna & little angel.
ena akka epadi asatha aarambichiteenga.
already u r so creative.
now u goes upon some more extra creative.
k. very nice.

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

Hi this is very good idea and so nice to see, can you give some tips for the navratri golu, for making park zoo in my home it will be very helpful and useful also

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta