அன்பு தோழிகளுக்கும், தோழர்களுக்கும் வணக்கம்.
மன்றம் பக்கமாக சற்று எட்டிப்பார்த்தால் அரட்டை இழையே காணல!!! அதற்கு பதிலா.... நிறைய கேள்விகள் இருக்கு...
அதனால இங்கே கொஞ்சம் அரட்டை அடிப்போம் வாங்க... அரட்டை இருந்திருந்தால் கூட இத்தனை நாளா அதில கேட்க வேண்டிய கேள்வியெல்லாம் இப்படி தனித்தனி இழை ஆகியிருக்காதோ என்னவோ!!!
ஊர் கதை, ஸ்கூல்,காலேஜ்,அக்கம் பக்கத்து வீட்டு கதை...இப்படியாக பல கதை பேச வேண்டுமென விரும்புவோர் வாங்களேன் இந்த பக்கம்!!!
யாராவது அரட்டை அடிக்க வரீங்களா???
எல்லோரும் எப்படிங்க இருக்கீங்க? வீட்டில் அனைவரும் நலமா???
ரொம்ப ரொம்ப நாள் ஆச்சு எல்லோர் கூடவும் பேசி... என்னை யாரும் தேடினீங்களா? இல்லைன்னு தெரியும் சும்மாதான்.........
எனக்கு தெரிஞ்சவங்களை இங்கே பலரை காணமுடியவில்லை. புதிதாய் இணைந்திருக்கும் அனைவருக்கும் நல்வரவு.
எல்லோரும் வாங்க, வந்து அரட்டையை சிறப்பாய் நடத்துங்க...
மீண்டும் சந்திப்போம்
pops.
ஹாய்,நான் புதுசு.என்னையும்
ஹாய்,நான் புதுசு.என்னையும் சேத்துப்பீங்களா?
வாங்க உமா
வாங்க உமா, ரொம்ப நாளா எங்க ஆளையே காணும்? உங்க பதிவைப் பார்த்ததில் மகிழ்ச்சி. உங்க Tips இல்லாம நாங்க எல்லாம் ரொம்ப குண்ண்டாடா...... ஆகிட்டோம் :-(
தொடர்ந்து வாங்க.
அன்புடன்,
இஷானி
காலம் ரொம்ப கெட்டுப்போச்சு.......
காலம் ரொம்ப கெட்டுப்போச்சுங்க....... அரட்டை அடிக்ககூட யாரும் வரல பாருங்க இஷானி, நீங்க எப்படியிருகீங்க?நான் நலம்.......கழுத்துல கத்தி வச்ச மாதிரி அப்படி ஒரு வேலை பிஸியா போச்சு....இப்போ கொஞ்சம் பரவாயில்லை அதான் இந்த பக்கமாக எட்டி பார்த்தேன்..
ஆமா என்ன இப்படி காமெடி பண்றீங்க??? குண்ண்டாடா...........வா ஆகிட்டீங்க.......
(வடிவேலு காமெடி மாதிரி கொஞ்சம் படிச்சு பாருங்க......எனக்கு ஒரே சிரிப்பு தான் போங்க)
உங்க ஊர்ல வெய்யில் எப்படியிருக்கு? இங்கே பார்க்கவே முடியல ஒரு வினாடிக்கு மேல எரிச்சுடும் போலிருக்கு...
மீண்டும் சந்திப்போம்
pops.
us
ஹாய்,
எப்படி இருக்கீங்க, நான் நிறைய அரட்டை அடிப்பேன், ஆனா, இங்க டைப் செய்வது கொஞ்சம் கடினமாக உள்ளது. போக போக பழகிவிடும் என்று நினைக்கிறேன். எனக்கு தமிழ் டைபிங் மறந்துவிடும் போலிருக்கிறது. அட்மின் தவறாக நினைக்க வேண்டாம்
அன்புடன்
பவித்ரா
அமெரிக்க தோழிகளே வாங்க அரட்டியடிக்கலாம்...
உங்க அரட்டையை எல்லோரும் இங்கே தொடங்குங்க. இது கொஞ்சம் பழைய திரட். நான் யாருமே அரட்டை அடிக்க வரலியே எல்லோரும் ரொம்ப திருந்திட்டாங்களோன்னு தப்பா நினைச்சேன். அதற்கு பிறகு அரட்டை தொடங்கி மெகா சீரியல் ரேஞ்சுக்கு போய்கிட்டு இருக்கு....
இந்த மாதிரி சில பழைய திரடுகளையும் உங்க பதிவுகளால் நிரப்புங்கப்பா............
யாரும் தலைப்பை பார்த்து தப்பா நினைக்காதீங்க, மத்தவங்கல்லாம் தூங்குவீங்கன்னு நினைக்கிறேன்,அதனாலதான்.
ஹாய் உமா நாங்களாம் வரகூடாதா
ஹாய் உமா நாங்களாம் வரகூடாதா.ஏன் பா gulfla இருக்கவங்களாம்
நீங்க உங்க friendsa ஏத்துக்க மாட்டீங்களா
குட்டியம்மா
குட்டியம்மா நான் மத்தவங்கல்லாம் தூன்னுவீங்கன்னு நினைச்சேன்...அரட்டை அடிக்க விருப்பமுள்ள அனைவரும் வாங்கப்பா...........
ஏன்னா இந்த த்ரடை பாருங்க ஆரம்பிச்சு எத்தனை ஆச்சுன்னு.....
ராதிகா, உமா எப்படி
ராதிகா, உமா எப்படி இருக்கீங்க? என்னப்பா தூங்கலியா ரெண்டு பேரும்?
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
பட்ட பகலில் தூக்கமா!!!
பகல் பன்னிரண்டு மணிக்கு கொளுத்துற வெய்யில்ல நாங்கலாம் தூங்க மாட்டோம் கல்பனா, இன்னைக்கு எங்க ஊருலயே ஹை டெம்பரேச்சர்.நான் சமைக்கிறேன்.