<!--break-->அன்பு தோழிகளே
யாருக்கேனும் ஆத்திச்சூடி-க்கு முழு அா்த்தம் தெரிந்தால் கூறவும்.அல்லது இணையதளத்தில் இதற்கு அா்த்தம் கிடைக்குமா? நம் தமிழ் மொழியில் இருந்தும் பலவற்றிற்கு அா்த்தம் தொரியவில்லை. என் பையன் அா்த்தம் கேட்டால் பலவற்றிற்கு அர்த்தம் கூறத்தெரியவில்லை. யாரேனும் தெரிந்தால் உதவுங்கள். காத்திருக்கிறேன். நன்றி
இப்படிக்கு
ராதா ஹரி
Hi Radha, refer the below
Hi Radha,
refer the below pages. May be you can get what you searched for.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF
http://eshuroshu.blogspot.com/2010/01/aathichudi-uyir-varukkam.html
With love,
Sudha
ராதா ஹரி
இங்க பாருங்க
http://athichudi.blogspot.com/search?updated-min=2008-01-01T00%3A00%3A00%2B08%3A00&updated-max=2009-01-01T00%3A00%3A00%2B08%3A00&max-results=12
அன்புடன்,
இஷானி
தவமணி
ராதா மேடம் ஆத்தி சூடிக்கு விளக்கம் கேட்டிருந்திங்க உங்க மொபைல்ல தமிழ் வசதி இருந்தால் கூகுள் போய் ஆத்தி சூடி ன்னு கொடுத்தாலே பல இணைய தளங்களின் முகவரி கிடைக்கும் அதற்குள் சென்று வேண்டியதை தேடிக் கொள்ளளாம்
நன்றி
WHAT NEXT
அன்புடன்
THAVAM
RATHA MADAM
ராதா மேடம் ஆத்தி சூடிக்கு விளக்கம் கேட்டிருந்திங்க உங்க மொபைல்ல தமிழ் வசதி இருந்தால் கூகுள் போய் ஆத்தி சூடி ன்னு கொடுத்தாலே பல இணைய தளங்களின் முகவரி கிடைக்கும் அதற்குள் சென்று வேண்டியதை தேடிக் கொள்ளளாம்.
முடியவில்லை என்றால் எந்தெந்த வரிகளுக்கு விளக்கம் வேண்டுமொ எழுதுங்கள் விளக்கம் சொல்கிறேன்.
நன்றி.
அன்புடன்
THAVAM
சுதா மேடம், இஷாணி மேடம், தவமணி மேடம்
மிக்க நன்றி சுதா மேடம், இஷாணி மேடம், தவமணி மேடம். நான் பல நாளாக google-ல் தேடிக்கிட்டு இருக்கேன். நான் எதிர் பார்த்த மாதிரி எல்லாவற்றிற்கும் விளக்கம் இல்லாமல் இருந்தது. நான் முதன் முறையாக மன்றத்தில் கேள்வி கேட்டேன். பதில் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நான் தேடிய ஒரு விஷயம் அறுசுவை முலமா ரொம்ப சுலபமா கிடைச்சிருக்கு.
சுதா மேடம் நீங்க கொடுத்த blogspot ரொம்ப நல்லா இருக்கு. கதைகளோட சொன்னா பசங்களுக்கு ரொம்ப சுலபமாக புரியும். தவமணி மேடம் என் mobile-ல் தமிழ் கிடையாது. ஆனால் நீங்க எந்தந்த வரிகளுக்கு விளக்கம் வேண்டுமோ கேளுங்கள் சொல்கிறேன் என்று கூறியுள்ளீா்கள், மிக்க நன்றி.
இஷாணி மேடம் நான் என்ன எதிர்பார்த்தேனோ அது நீங்கள் கொடுத்த link-ல் அப்படியே இருக்கு. Thank you very much madam.
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
ராதா
ராதா தவமணி சார் கோபிச்சுக்க போறார்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
நன்றி ஆமினா மேடம்
தவமணி சார் மன்னித்துக் கொள்ளவும். நான் அறுசுவைக்கு புதிது. அதுதான் தவறாக நினைத்துவிட்டேன்.
ஆமினா மேடம் மிக்க நன்றி, நல்ல வேளை கூறினீா்கள். அவரிடம் மன்னிப்பு கேட்க முடிந்தது.
இப்படிக்கு
ராதா ஹரி
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
ராதாஹரி
ராதா மேடம்
மிக்க மகிழ்ச்சி ஒன்றை நீங்கள் மாற்றித்தான் ஆக வேண்டும் நான் மேடம் அல்ல ஆண் உங்களின் சகோதரன்
நன்றி
அன்புடன்
THAVAM
தவமணி அண்ணா
அறுசுவை முலம் பெண்கள் மட்டும் தான் நண்பா்களாக கிடைப்பார்கள் என்று இத்தனை நாட்கள் நினைத்தது மிகவும் தவறு.
அறுசுவை முலம் ஒரு சகோதரா் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி அண்ணா என்னை தங்கள் சகோதரியாக நினைப்பதற்கு
இப்படிக்கு
ராதா ஹரி
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
ராதாஹரி
பரவாயில்லை சகோதரி ஒரு விதத்தில் பார்த்தால் என் பெயர் குழப்பம் தான் காரணம் தவமணி என்று பொதுவாக ஆண்களுக்கு பெயர் வைப்பதில்லை ஏனோ என் பெற்றோர் வைத்துவிட்டனர் போகட்டும் விடுங்கள் இதற்கெல்லாம் மன்னிப்பு தேவையில்லை சகோதரி
நன்றி
அன்புடன்
THAVAM