தேதி: July 16, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மீன் - 3/4 கிலோ
மிளகாய் வற்றல் - 12 - 15
பூண்டு - ஒரு முழு பூண்டு (சிறியது)
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
மீனை சுத்தம் செய்து, தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

மிக்ஸியில் மிளகாய் வற்றல், பூண்டு, கறிவேப்பிலை, உப்பு அனைத்தையும் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியான விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை மீன் துண்டுகள் மீது தடவி குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

தோசை கல்லில் அல்லது ஒரு தவாவில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீன் துண்டுகளை போட்டு மிதமான தீயில் வேக விடவும். ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் திருப்பி போடவும்.

இரண்டு பக்கமும் நன்றாக சிவக்க வெந்ததும் எடுக்கவும். எல்லா வகை மீனிலும் செய்யலாம். குறிப்பாக வஞ்சரம் மீன் இந்த வறுவலுக்கு மிக நன்றாக இருக்கும்.

Comments
படத்தோடு குறிப்பு
வனிதா,
நேற்று கூட்டாஞ்சோறு பகுதியில் இந்தக் குறிப்பைப் பார்த்தேன். இப்போ இங்கே வந்து விட்டது. ;) படத்தோடு இருக்கும் குறிப்புகள் தான் பலரைக் கவரும். பாராட்டுக்கள் வனிதா.
- இமா க்றிஸ்
இமா
இமா... மிக்க நன்றி. நலமா இருக்கீங்களா?? :) செபா ஆன்ட்டி நலமா?? முடிந்தவரை அம்மா அல்லது வசு செய்யும்போது படம் எடுத்து குறிப்பை தர முயற்சிக்கிறேன் அவ்வளவு தான்.... நான் எங்கே சமைக்க அம்மா வீட்டில். அதெல்லாம் மாலே போனாதான்!!! :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹாய் வனிதா அக்கா
உங்க மீன் வறுவல் சூப்பர் அக்கா நான் செய்து பார்த்துட்டு பின்னோட்டம் தருகிரேன்.
sahla
சஹ்லா... மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு சொல்லுங்க :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
அம்மாவா, வசுவா யார் கைவண்ணம் இது...அழகாக இருக்கிறது...
பாராட்டுக்களைத் தெரிவிக்கவும்....
மீனையெல்லாம் படமெடுக்கற நீங்க மீட்டிங்கையும் எப்படியும் எடுப்பீங்க....
யாழினி குமரனுக்கு என் அன்பு முத்தங்கள்.
தேன்
தேன்.. மிக்க நன்றி. அம்மா வேலை இது. நீங்க சொன்னதா அவங்களிடம் சொல்லிட்டேன். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Very nice...........
Very nice...........
மதுரா
மதுரா... மிக்க நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
FORMAL
உப்பு கறி SUPPER