அன்பின் தேவா

ஹாய் தேவா எப்படி இருக்கிங்க?என்னால் உங்களுக்கு எவ்வளவு சிரமம் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.உங்கள் வேலை நேரத்திலும் எனக்காக சிறிது நேரம் ஒதுக்கியதற்கு எப்படி நன்றி சொல்வேன்.எனக்கு 1 சகோதரி இல்லாத குறையை நீங்கள் தீர்த்துவிட்டிர்கள்

உங்க குட்டி பையன் எப்படி இருக்கான்.தேவா எனக்கு MsAccess ஓரளவுக்கு தெரியும்,MySOL ம் தெரியும் அது பிரச்சனை இல்லை.நான் பஹ்ரைனில் இருக்கேன்.இது மிகவும் சின்ன நாடு.Software Company கூட 1 தான் உள்ளது.
மதுரையைவிட சின்ன ஊர் என்று சொல்லலாம்.இங்கு MsAccess போன்ற வேலைகளை தேடுவது மிகவும் கடினம் என்று எனக்கு தெரியும்.இருந்தாலும் நான் MsAccess படிப்பேன்.இங்கு Software துறையில் வீட்டிலிருந்தே வேலை பார்பது சாத்தியமா என்பது எனக்கு தெரியாது.

அதனால்தான் நான் MTயை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்.இங்கு MT கன்சல்டன்சி கூட இல்லை.நான் MT படித்தாலும் இந்தியாவில் இருந்து ஆன்லைன் மூலம் தான் படிக்க வேண்டும்.இங்கு Electrical Contracting and civil company தான் அதிகமாக உள்ளது.

Software துறையில் வேறு எப்படி வேலை பார்ப்பது என்று எனக்கு தெரியவில்லை.நீங்கள் சொன்னது போல் நான் MsAccess,MySQL படிக்கிறேன்.ஆன்லைனில் MsAccess jobs செய்ய முடியுமா?இங்கு இருந்து வேறு நாடுகளுக்கு?

இருந்தாலும் நீங்கள் எனக்கு MTயை பற்றிய விவரங்கள் மட்டும் சேகரித்து கொடுத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.
என் வாழ்க்கையிலிலும் நீங்கள் என் வெற்றிக்கு காரணமாக இருப்பீர்கள்.

ரொம்ப நன்றி தேவா

மேலும் சில பதிவுகள்