மாவிளக்கு

மாவிளக்கு செய்வது எப்படி ஹெல்ப்மி தோழிஸ்

ஜெயா மாவிளக்கு ஒரு கிலோ அரிசி என்றால் அதனை களைந்து விட்டு ஒரு துணியில் பரப்பி விட்டு காயவைக்கவும். லேசான ஈரப்பதத்துடன் இருக்கும் போது மிக்ஸி அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். மாவு அரைக்கும் போது நான்கு, ஐந்து ஏலக்காயை சேர்த்து அரைக்கவும். ஒரு கிலோ அரிசிக்கு முக்கால் கிலோ வெல்லம், வெல்லத்தை துருவி அல்லது தூள் துளாக நுணுக்கி அரைத்த அரிசி மாவுடன் கலந்து வைக்கவும். அதில் சிறிதளவு பால் ஊற்றி கொள்ளலாம். பின்னர் அதனை நன்றாக பிசறி விட்டு உருண்டையாக உருட்டவும். உருண்டை பிடிக்க வராவிட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து உருட்டலாம். ஒற்றை படை எண்ணிக்கையில் தான் மாவிளக்கு போடுவார்கள். ஒரளவு பெரிய உருண்டையாக தான் உருட்டுவார்கள். உருண்டையின் மேல் எலுமிச்சை பழத்தை அழுத்தினால் சிறிது குழிப்போல அச்சு பதியும். குழியின் ஓரத்தில் மூன்று இடத்தில் குங்குமம் பொட்டு வைத்து நெய்விளக்குகேற்றி வைக்கவும். எனக்கு தெரிந்தை கூறி இருக்கிறேன். மற்ற தோழிகளும் சொல்லுவார்கள்.

மாவிளக்கு பற்றி வினோஜா அவகள்கருத்தை சொல்லி இருக்கிறார்கள்.
நான் என் கருத்தை சொல்கிரேன். ஆடிவெள்ளி, மற்றும் தை வெள்ளிக்
கிழமைகளில் மாவிளக்கு போடுவார்கள். அரைக்கிலோ பச்சை அரிசியை
நன்கு அலம்பி ஒரு துணியில் உலர்த்தவும். நன்றாக உலர விட வேண்டாம்.
பாதி காய்ந்ததும் மிக்ஸியில் மாவாக பொடித்துக்கொள்ளவும். பொடித்த ஈரம்
இருக்கும்போதே கால் கிலோ வெல்லத்தையும் பொடித்து போட்டு மாவுடன்
நன்கு பிசையவும். வெல்லம் போட்டு பிசையும் போதே அதன் ஈரப்பதத்தால்
மாவு ஈசியாக திரண்டு வரும். மேலாக 2ஏலக்காய்களை பொடித்து தூவவும்.
விளக்குப் பிரை முன்பு கோலம் போட்டு ஒரு வாழை இலை விரிக்கவும்.
வெள்ளியில் பேசின் மாதிரி ஏதாவது பாத்திரம் இருந்தால் (இல்லைனா,இலையில்)
அதில் இந்த மாவை கைகளினாலே உருண்டையாக திரட்டவும். நான்குபுரமும்
சந்தனம், குங்குமம் பொட்டு வக்கவும். நடுவில் ஒரு பெரிய கிண்ணம் அளவுக்கு
ஒரு குழி பண்ணி அது நிறைய நெய் ஊற்றவும். நாலு பக்கமும் திரியின் நுனி
வரும்படி போடவும். அப்படி இல்லைனா பஞ்சு ஒரு நெல்லிக்காய் அளவு உருட்டி
நுனியில் கூர்ப்பாக திரித்து நெய்யின் நடுவில் வத்து நல்ல நேரம் பார்த்து
விளக்கு ஏற்றவும் குறைந்தது 2 மணி நேரங்களாவது மாவிளக்கு எரியனும்
அந்த நேரம் நீங்கள் விளக்கு முன்பு உக்காந்து ஸ்லோகங்களோ பாராயணங்களோ
சொல்லிண்டு இருக்கலாம்.( இது கம்பல்சரி இல்லை.) விளக்கு மலை ஏரினதும்
வெத்திலை பாக்கு, பழம் தேன்காய் உடைத்து நைவேத்யம் செய்யனும்.
அந்த தேங்கா தண்ணியை மாவில் விட்டு கலந்து பிசைந்து எல்லாருக்கும்
பிரசாதமாக கொடுக்கலாம்.


நீங்க நன்னா சொல்லிருக்கெள்.
எங்காத்திலேயும் என் மாமியார் இப்படிதான் பண்ணுவா

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்