இந்திய ரூபாய் குறியீடு

கடந்த வாரம் இந்திய அரசால் நமது ரூபாய் க்கு என்று புதிய குறியீட்டை அறிவித்து இருந்தார்கள். இன்னும் சில மாதங்களில் அந்த குறியீடு நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த குறியீட்டை வடிவமைத்தது ஒரு தமிழ் இளைஞர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த குறியீடு இந்தி எழுத்து போல் உள்ளது, கம்யூனிச சின்னம் போல் உள்ளது, ஆங்கில ஆர் எழுத்து போல் உள்ளது என பல குற்றசாட்டுகள் கிளம்பினாலும் எப்படியும் அந்த குறியீட்டை நாம் உபயோகப்படுத்தி தான் ஆகனும்.

தற்போது அந்த குறியீட்டை எப்படி பயன்படுத்துவது? தற்பொழது அதை நம் கீ-போர்ட் மூலம் பயன்படுத்த முடியாது. அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும். அந்த குறையை போக்கும் வகையில் மங்களூரை சேர்ந்த Foradian Technologies என்ற நிறுவனம் Font மூலமாக அதை பயன்படுத்த ஏற்பாடு செய்து உள்ளார்கள். அதற்கு செய்ய வேண்டியது எல்லாம் - இந்த (http://blog.foradian.com) தளத்தில் சென்று Font யை தரையிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். பின் Control Panel சென்று Fonts யில் அதை Install செய்யவும்.

இந்த குறியீட்டை உபயோகப்படுத்த Word ல் சென்று Rupee Font யை தேர்ந்து எடுத்து TAB மேல் இருக்கும் கீ யை ( ` or ~ Key) அழுத்தினால் இந்த குறீயிடு நமக்கு கிடைக்கும்.

இந்த குறியீடு யூனிகோடு ல் சேர்க்கும் வரைக்கும் இதை பரவலாக பயன் படுத்த முடியாது என்பது தான் தற்போதைக்கு இதில் இருக்கும் குறை. நம் அறுசுவை தளத்தில் அதை சேர்க்க முடியவில்லை.

Hello Nagaisiva
நான் நித்யாவிஜய் .
எனக்கு இந்திய ரூபாய் குறியீடு பத்தி முழு விவரமும் vaanum ப்பா. please.
அந்த குறியீடு எப்படி இருக்கும் . ப்ளீஸ் சீக்கிரமா உங்க பதிவை eaathirparkkiraan

give me ur mail id, i ll send u the ruppee symbol. i cant able to paste here

அன்புடன்
பவித்ரா

Hi Pavithra, how are you?
"nithyavj94@gmail.com". This is my mail id. Please send that symbol. thank u.

ரொம்ப பயனுள்ள தகவல் நாகைசிவா! இதனை காப்பி பேஸ்ட் செய்தா ` என்று தான் வருது. விரைவில் யூனிகோடில் சேர்த்துவிடுவார்கள்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

தோழி நித்யா! இந்த லிங்க்கில் சென்று நம் நாட்டு ரூபாய் குறியீட்டைப் பாருங்கள்!

http://4.bp.blogspot.com/_ZLXwKOOnlHk/TEUc8MD4AOI/AAAAAAAAD64/48RjoAL9YYM/s1600/Rs.jpg

நாகை சிவா அண்ணன்! உங்கள் தகவலுக்கு நன்றி!

உங்க பதிவ இப்பதான் பார்த்தேன், சாரிப்பா,கீழே அஸ்மா கொடுத்த லின்க் பாருங்க

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்