BROAD KNOWLEDGE (பரந்த அறிவு)

அன்புள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்.
கல்வி சார்ந்த மற்றும் பொது அறிவு சார்ந்த விஷயங்கள் எனும்போது நம்மில் பலர் அவரவர்க்கென ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளாகவே இருந்து வருகிறோம். அதை தாண்டி மிகப்பரந்த அறிவைப் பெற, தன்னம்பிக்கை பெற நாம் அறிந்த்தை பகிர்வோம் & பதிவோம் பதிவுகளை இங்கே.
குறிப்பு:
(யாரும் தயவுசெய்து ஆங்கிலத்தில் பதியவேண்டாம். ஏனென்றால் தோழி ஆமினாவுக்கு ஆங்கிலம் ஆகாது.)

என் முதல் பதிவு யாதெனின்,

டாக்டர் அப்துல்கலாம் கூறிய கருத்துக்கள் சில:

1. குழந்தைகள் நமது விலைமதிப்பில்லா சொத்து.

2. நாம் பெண் குழந்தைகளையும், ஆண் குழந்தைகளையும் சம்மாகப் பாவித்து அவர்களின் உரிமைக்காகவும், கல்வி வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்க்காகவும் பாடுபடுவோம்.

3. நம்முடைய குழந்தைகளுக்கு கல்வியறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவோம். ஏனெனில், கற்பதனால் அறிவு வளரும். அறிவாற்றலால் குழந்தைகள், வாழ்வில் முன்னேற்றம் அடைவர்.

4.நாம் எல்லோரும் மண்வளத்தையும், காடுவளத்தையும், சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.

5. நாம் எல்லோரும் குறைந்தபட்சம் ஐந்து மரக்கன்றுகளை நட்டு வளர்ப்போம்.

6. நாம் நம்முடைய குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருப்போம்.

7.”கற்றதினால் ஆக்கசக்தி கிடைக்கிறது, ஆக்கசக்தியினால் சிந்தனை ஆற்றல் உண்டாகிறது, சிந்தனை ஆற்றலால் அறிவாற்றல் தோன்றுகிறது, அறிவாற்றலால்
உயர்ந்தவர்கள் ஆகிறோம். கனவு காணுங்கள்!”
- - - - - - - - - - - - - - - - - -
பதிவுகள் பலவிதம். அதில் தன்னம்பிக்கை பதிவுகள் ஒருவிதம்.

“உறுதியாக நில் எடுத்த முடிவில்
உழைத்துப்பார் வெற்றி உன் வடிவில்”

தமிழ்நாட்டின் எழுத்தறிவு?
1901ஆம் ஆண்டு ஆண்கள் - 14.10 % பெண்கள் - 1.0 %

2001ஆம் ஆண்டு ஆண்கள் - 82.33 % பெண்கள் - 64.55 % - சென்ஸஸ் 2001.
-- -- ---- ----- ------ -- --- ---- ----- ------
“செல்லும்போது ரசித்துக் கொண்டே செல்லுங்கள்;
திரும்பிப்பார்த்தால் இருக்காது வாழ்க்கை”

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள்:
மாதுளை, பப்பாளி, பேரிச்சம் பழம்,முருங்கைக்கீரை, பசலக்கீரை, பாதாம் பருப்பு,
உலர்ந்ததிராட்சை,முட்டை, கல்லிரல், பூசணி விதை மற்றும் காலிஃப்ளவர்.

இரத்தத்தில் ஹிமோகுளோபின் அளவு பெண்களுக்கு 12.5 கிராம் மற்றும் ஆண்களுக்கு 14.5 கிராம் இருத்தல் அவசியம். 10 கிராமுக்கு கீழே இருப்பின் மருத்துவரை அணுகுதல் உத்தமம்.

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

#தினமும் 10 முதல் 12 டம்ளர்கள் தண்ணீரை சிறிய கால இடைவெளி விட்டு விட்டு அருந்தி வந்தால் த்லைமுடி வேர்கள் வலுவடைவதுடன் மட்டுமன்றி அவற்றிற்க்கான இரத்த ஓட்டமும் சீராகும்.#

எதிர்பாருங்கள் இன்னும் இதைப்பற்றி மேலும் பதிவேன்.

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

வைட்டமின் "C" சத்து தலைமுடி வேர்களைத் தாக்கும் நோய்களிலிருந்து காப்பாற்றி தலைமுடிக்கு பாதுகாப்பு அளிக்கும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, கொய்யா, அன்னாசி, பப்பாளி, நெல்லிக்காய்,முட்டைக்கோஸ்,முருங்கைக்கீரை ஆகியவற்றில் வைட்டமின் "C" சத்து அதிகமுள்ளது.

எதிர்பாருங்கள் இன்னும் இதைப்பற்றி மேலும் பதிவேன்.

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

Can you please help me with some ways to discontniue my unexpected and unplanned pregnency?..my periods got delayed by 4-5 days and I tested positive this morning.Both me & my husband don't want at this time.

அனைத்து “B Complex" சத்துக்களும் தலைமுடி வளர்ச்சிக்கு முக்கியம் என்றாலும், பயாட்டின் மற்றும் அயனோசிட்டால் என்ற இரு “B Complex" சத்துக்கள் தலைமுடி வளர்ச்சிக்கு மிக மிக முக்கியம்.

பார்லி, ஒட்ஸ், சோயாபீன்ஸ், கைக்குத்தல் அரிசி, வேர்க்கடலை, காலிஃப்ளவர், பாதாம் பருப்பு ஆகியவற்றில் பயாட்டின் என்ற “B Complex" சத்து மிக அதிகமுள்ளது.

முளைவிட்ட தானியங்கள், ஈஸ்ட், வேர்க்கடலை,உலர்ந்ததிராட்சை,முட்டைக்கோஸ்,கல்லிரல் ஆகியவற்றில் அயனோசிட்டால் என்ற “B Complex" சத்து மிக அதிகமுள்ளது.

பயனுறுங்கள் மேலும் பதிவேன்.........

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

அயோடின் சத்து தலையிலுள்ள தோலுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி தலைமுடி வேர்களை உறுதியடையச் செய்வதோடு தலைமுடி உதிர்வைத் தடுக்கிறது.

##பசலைக்கீரை, அயோடின் கலந்த உப்பு, கடல் உணவுகள்( மீன், நண்டு,இறால்) ஆகியவற்றில் அயோடின் சத்து மிக அதிகமுள்ளது.##

பயனுறுங்கள் மேலும் பதிவேன்.........

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

தாமிரச் சத்து தலைமுடி வேர்களை உறுதியாக்கி, தலைமுடி வளர்ச்சியையும் அதிகப்படுத்துகிறது.

##கீரைகள், உலர்ந்த பருப்பு, கொட்டை வகைகள், கடல் நண்டு ஆகியவற்றில் தாமிரச் சத்து அதிகமுள்ளது.##

பயனுறுங்கள் மேலும் பதிவேன்.........

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

பயனுள்ள பல குறிப்புகள் தறீங்க!!!
வாழ்த்துக்கள் செந்தில்.

எனக்கு ஏதாவது தெரிந்தால் பிறகு சொல்கிறேன். நீங்கள் தொடருங்கள். தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

துத்தநாக சத்து உடலில் சேரும் கழிவுகளை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு இரத்தஓட்டத்தையும் அதிகப்படுத்துவதால் தலைமுடி உறுதியடைகிறது.

##துவரம் பருப்பு, பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, கிட்னி பீன்ஸ், வேர்க்கடலை, உளுந்து ஆகியவற்றில் துத்தநாக சத்து அதிகமுள்ளது##

”உங்கள் ஆதரவிற்கு மிகவும் நன்றி ஆமினா.
யாரும் கருத்துக்கள் பதியவில்லையே என்று மிகுந்த வருத்தத்துடன் இருந்தேன்.
உங்கள் கருத்து மேலும் என்னை ஊக்கமடைய வைத்திருக்கிறது.
தவறு ஏதேனும் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்.
நல்லவைக்கு ஆதரவு தாருங்கள். மேலும் என்னை ஊக்கப்படுத்துங்கள் ”

பயனுறுங்கள் மேலும் பதிவேன்.........

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

மேலும் சில பதிவுகள்