உணவு கொடுக்கும் முறை சரியா தவறா?

அன்னிவருகும் என் அன்பான வணக்கம்,

யாராவது என்னுடைய சந்தேகத்துக்கு பதில் கூறுங்களேன். என் 6 மாத குட்டி குழந்தைக்கு 9 .00 மணிக்கு morning cerelac or raggi பிறகு 11 .00 மணிக்கு பால் பிறகு 1 .00 மணிக்கு afternoon vegetable paste (home preparation )பிறகு 4 .00 மணிக்கு பால் கொடுக்கிறேன் பிறகு office லிருந்து வந்ததும் தாய் பால் கொடுக்கிறேன் பிறகு இறவு ரைஸ் கஞ்சி அம்மா prepare செய்து கொடுத்தது கொடுக்கிறேன். இந்த மாதரி
உணவு கொடுக்கும் முறை சரிதானா?

அனால் என் friend குழந்தைக்கு 6 மாதம் ஆகிறது only milk மட்டும் தான் கொடுக்கிறாள் குழந்தை மிகவும் புஷ்டியாக கொழுகொழு என்று வுள்ளது. ப்ளீஸ் யாராவது உங்களுடைய அறிவுரையும் கூறுங்களேன்.
நன்றி
பிரியா.
நலம் பெருக!!! வளம் பெருக!!!!

பால ப்ரியா

நீங்கள் கொடுக்கும் உணவு முறை தான் சரியானது. பால் மட்டுமே குடித்துக்கொண்டிருந்தால் அதில் எந்த பயனும் இல்லை. இப்படிசுழற்சி முறையில் கொடுக்கும் உணவில் தான் குழந்தைக்கு அதிகம் சத்து கிடைக்கும். அவ்வபோது ஆப்பிள்,வாழை என்று பழங்களையும் கொடுக்கலாம்.

குழந்தை கொழுகொழு என்று இருப்பது முக்கியம் இல்லை. ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுங்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பிரியா மேடம்

ஏன் இப்படி கவலைப்படுறீங்க. குழந்தைக்கு நீங்க ஊட்டச்சத்து உள்ள உணவு தானே கொடுக்கறீங்க. அப்புறம் ஏன் கவலைப்படுறீங்க. குழந்தையோட ஆரோக்யம் தான் முக்கியம். அவா்கள் குண்டாக கொழு கொழுனு இருந்தாலும் சரி, ஒல்லியாக இருந்தாலும் சரி, வியாதி இல்லாமல் இருந்தா அதுவே போதும். அப்பா அம்மா வைப் பொறுத்தே குழந்தைகள் இருக்கும். உங்க குழந்தைக்கு தேவையான உணவை நீங்க கொடுத்துகிட்டுதான் இருக்கீங்க. குண்டாகனும்னு நிறைய dump பண்ணாதீங்க. நாம் நிறைய குடுத்தாலும் குழந்தைகள் தங்களுக்கு தேவையான உணவை மட்டும் தான் எடுத்துக்கும், மீதியை கக்கிவிடும். இது எனக்கு doctor சொன்னது. தாய்பால் ரொம்ப சிறந்த உணவு. உங்களால முடிந்தவரை அதை குடுங்க. அது தான் எல்லா உணவையும் விட ஆரோக்யமான உணவு. அதனால் உங்க குழந்தை குண்டாக இல்லையேனு வருத்தப்படாதீங்க.

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மிகவும் நன்றி அமீனா,
ஆரஞ்சு ஜூஸ் எப்படி கொடுப்பது? மேலும் தண்ணீர் howmuch சேர்ப்பது. boiled ஆப்பிள் மசித்து கொடுக்கிறேன் banana இன்னும் ஆரம்பிக்க வில்லை.

தாய் தந்தையே முதல் தெய்வம்!!
நன்றி
பிரியா.

நான என் குழந்தைக்கு 6 மாதம் முடியும்வரை தாய்ப்பால் மட்டும்தான் கொடுத்தேன். 2.7 லிருந்து 6.8 எடை கூடினாள். மேலும் நான் வீட்டிலேயே இருந்ததினால் இது எனக்கு சாத்தியம் ஆயிற்று. எனது அக்கா 4 மாதத்திலேர்ந்து வேறு உணவு டாக்டர் ஆலோசனைப்படி கொடுக்க ஆரம்பித்தாள்.(வேலைக்கு செல்வதால்).
உங்கள் குழந்தை போதிய எடை இல்லை எனில் டாக்டரின் உதவியய் நாடலாம். குழந்தை என்பதால் சந்தேகம் எதற்கு.

Don't Worry Be Happy.

பால பிரியா

உங்க குழந்தைக்கு புளிப்பு சுவை ஒத்துவந்தால் கொடுங்க.(என் குழந்தை இனிப்பை தவிர புளிப்பு பிடிக்காது)

பால் புட்டியில் கொடுக்கலாம். செமிக்க கூடிய திறன் கம்மியாக இருப்பதால் ஆரங்சு ஜூஸை வடிகட்டி சிறிது சீனி சேர்த்து கொடுங்க. வாழை தான் மிகமிக முக்கியம்(நாட்டு வாழை தவிர). தினமும் ஒன்றை கொடுங்க. செரிக்கும் தன்மையை அதிகப்படுத்துவதுடன், மோஷன் சம்மந்தமான பிரச்சனை வராது. தண்ணிரின் அளவு கேட்டுள்ளீர்கள். எதற்காக ஆரஞ்சு ஜூஸ்க்கா? அவ்வாறு என்றால் சேர்க தேவையில்லை.என் குழந்தைக்கு 3 மாதம் முதலே செர்லாக், பிஸ்கட் கொடுத்துட்டேன்(படிப்பதால்).

எல்லாவற்றையும் விட மிகமிக முக்கியம் வென்னீர் அதிகம் கொடுப்பது. 11 மணிக்கு 100 மிலி தண்ணீர் வெதுவெதுப்பாக கொடுத்தால் குழந்தைக்கு நல்லது,பசியும் எடுக்கும். ஒவ்வொரு முறையும் சாப்பாடு கொடுத்து முடிந்ததும் தண்ணீர் நிறையா கொடுத்தால் சீக்கிரம் ஜீரணம் ஆகும். சூப் செய்து கொடுங்க.
வேற ஏதாவது சந்தேகம் என்றாலும் தயங்காமல் கேளுங்க. தெரிந்தால் சொல்றேன்.
இல்லையென்றால் மற்றவர்கள் சொல்லுவார்கள்.

அன்புடன்
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

டியர் அமீனா,

உங்கள் அல்லோசனைக்கு மிக்க நன்றி. வேறு சந்தேகம் இருந்தால் கண்டிப்பாக கேட்கிறேன்.

அன்புடன்
பிரியா.

டியர் அமீனா,

உங்கள் அல்லோசனைக்கு மிக்க நன்றி. வேறு சந்தேகம் இருந்தால் கண்டிப்பாக கேட்கிறேன்.

அன்புடன்
பிரியா.

ஹாய் ஜெயலக்ஷ்மி,

என் குழந்தை 01 .01 .2010 பிறந்தது. now 6 மாதம் 20 நாள் ஆகிறது 5 .9 கிலோ இர்ருகிறாள். பிறந்த வெயிட் 3 .00 கிலோ. தடுப்பு உசி போடும்போது வெயிட் ஓகே தான் என்று டாக்டர் கூறினர். அனால் நான் அவளுடைய வெயிட் அதிகபடுத்த முயற்சி செய்து கொண்டுதான் இர்ருக்கிறேன்.

அன்புடன்
பிரியா

என் குழந்தைக்கு இப்பொழுது 5 மாதம் ஆகிறது. டாக்டர் செரலாக் கொடுக்கலாம் என்று சொன்னார் . ஒரு நாளைக்கு எத்தனை முறை கொடுக்கலாம். செரலாக் தவிர வேறு என்ன உணவுகள் கொடுக்கலாம்.

அன்புடன்
மகேஸ்வரி

மகேஸ்வரி

செர்லாக் 3 வேளைக்கு கொடுக்கலாம். ஆப்பிள் பாலில் வேகவைத்து அரைத்துக்கொடுக்கலாம்(தினமும் 1 அல்லது 2 நாளைக்கு 1 என்று கொடுங்க.ரொம்ப சத்தானது). மாலையில் பாலில் ஊற போட்டு பிஸ்கட் கொடுங்க. சத்துமாவு கொடுங்க. சாதத்தை மசித்து(மிக்ஸியில் அரைத்தும் கொடுக்கலாம்) ஒரிரு வாய் கொடுத்த பழக்கப்ப்டுத்துங்க. மத்தபடி பால பிரியா சொன்னதை செய்யலாம்.
இரவு தூங்கப்போகும் முன் கிரேப் வாட்டர் கொடுங்க. ஒரு மூடி கிரேப் வாட்டர் கொடுத்த ஒடனே வென்னீர் கொடுங்க. சீக்கிரம் செமிச்சுரும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்