இனிய மாலையில் சுவையான தேநீர் விருந்து - அவசர சந்திப்பிற்கு நீங்கள் தயாரா?

அறுசுவை சென்னை கெட்டூகெதர் பற்றி முன்பே பேச்சை ஆரம்பித்தோம். பலரும் சொந்த அலுவல்கள் காரணமாக பிஸியாக இருந்ததால், தேதி குறித்து முடிவு செய்ய இயலவில்லை. தற்போது நான் சென்னையில் இருக்கின்றேன். சகோதரி யோகராணி அவர்களும் இந்தியா வந்துள்ளார். இங்கே இதுவரை யாரையும் சந்திக்க இயலவில்லை என்று வருத்தப்பட்டார். அவருக்காகவே ஒரு அவசர சந்திப்பிற்கு ஏற்பாடுகள் செய்துள்ளேன். நாளை மாலை சென்னை வேளச்சேரியில் உள்ள குமரகோம் (kumarakom - (http://www.kumarakomrestaurant.com)) ரெஸ்டாரண்ட் ல் கூடவிருக்கின்றோம். திருமதிகள் யோகராணி, வனிதா, ஷாதிகா, சீதாலெட்சுமி இவர்கள் அனைவரும் வருகின்றார்கள். சென்னைவாசிகள் மேலும் சிலர் வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். சென்னையில் இருக்கும் அறுசுவை நேயர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள விரும்பினால், தயவுசெய்து 99525 28028 என்ற எண்ணில் என்னை தொடர்புகொள்ளவும்.

இடம் : குமரகோம் ரெஸ்டாரண்ட், வேளச்சேரி (விஜயநகர) பேருந்து நிலையம் அருகில். சென்னை.
நாள்: 20.07.2010, செவ்வாய்கிழமை - மாலை 6 மணி

எளிமையான இந்த சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், என்னை தொடர்பு கொள்ளவும்.

இந்தவாட்டியும் நாங்க ஃபோட்டோவில் பார்த்து திருப்தி பட்டுக்கறோம் :(. ஃபோட்டோ போடுவீங்கள்ல

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி,,

நல்ல கேள்வி..போட்டோ போடுவிங்கள? ;-(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கெட்டுகெதர்

போட்டோவ பாத்து பெருமூச்சாவது விடுவோம். வேறேன்ன செய்ய?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அறுசுவையில் கெட்டூகெதர் இருக்கிறதா, கேட்பதற்கே இனிமையாக இருக்கிறது. அடுத்த முறை நானும் பங்கேற்க முயற்சி செய்கிறேன்.
ஏதோ மற்ற வலை மாதிரி இல்லாமல் இந்த மாதிரி யோசிக்கும் அட்மின் அவர்களுக்கு நன்றி

அன்புடன்
பவித்ரா

இந்த சந்திப்பு பற்றி முடிவு பண்ணி அரை மணி நேரம் தான் ஆகுது. அதனால பெரிய அளவில எதுவும் செய்ய முடியலை. நாளைக்கு சாயங்காலம் வரை எனக்கும் பர்சனல் ஒர்க்ஸ் இருக்கு. அதை சீக்கிரம் முடிச்சிட்டு இதுல கலந்துக்க வரணும். இது சும்மா ஒரு சந்திப்பு தான். கொஞ்ச நேரம் கூடி பேசலாம். உட்கார்ந்து பேச ஒரு இடம், அதே சமயம் கலந்துக்க வர்றவங்களுக்கு பக்கமாவும் இருக்கணும். அதுக்கு இந்த முறை வேளச்சேரிதான் பெட்டர் சாய்ஸ்ஸா இருக்கு. பெருமூச்சு விடுற அளவுக்கு இந்த முறை ஃபோட்டோஸ் இருக்காது.. ஃபோட்டோஸ்ஸே இருக்காதுன்னு நினைக்கிறேன். :-)

அட ..

சந்திபிற்கு வரும் தோழிகள் யாராவது ஒரு ஸ்னேப் எல்லோரையும் வைத்து எடுத்து அனுப்புங்கப்பா.. ஏதோ ஃபோட்டோஸ்ஸ பாக்கனும்னு ஆசைப்படுறோம்.. எடுக்க எவ்ளோ நேரம் ஆகப் போகுது.. ;-(

வனி.. இது உங்க பொறுப்பு.. சரியா ? ;-(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கையில் இருக்கும் மொபைலில் ஒரு ஸ்னாப் எடுக்கலாம் இல்லையா, முடியாது என்று அட்மின் சொல்லக்கூடாது. please

அன்புடன்
பவித்ரா

அட்மின் அவா்களுக்கு

இந்த மாதிரி கெட் டு கெதர் நீங்க நடத்துறத கேட்டா கொஞ்சம் பொறாமையா இருக்கு. எங்களை மாதிரி சென்னை ல இல்லாதவங்க வேற என்ன பண்ண முடியும். கெட் டு கெதர் வர்ற தோழிகள் யாராவது photo எடுத்து அனுப்புங்க. அதையாவது நாங்க பார்த்து சந்தோஷப்பட்டுக்கிறோம்.

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

என்ன அட்மின்சார் நாளை மாலை தேனீர் விருந்து என்று
இன்று மாலை தகவல் சொகிறீர்கள். சென்னையில் உள்ளவர்
களாவது கலந்துகொள்வதுபற்றி யோசிக்கவாவது டைம் கிடைக்கும்.
எங்களுக்கு அதுக்கு கூட அவகாசம் கிடைக்காதுபோலன்ன இருக்கு.
சரி அதுதான் போகட்டும். போட்டோவிலாவது பார்த்து சந்தோஷப்படலாம்
என்று பார்த்தால் அதுவுமில்லை என்கிறீர்கள். என்னங்க இது?

மேலும் சில பதிவுகள்