திருடர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

இப்போதெல்லாம் திருட்டு அதிகமாகிக்கொண்டு வருகிறது... அதில் இருந்து நாம் தப்பிப்பது எப்படி... உங்களுடைய ஐடியகளை சொல்லுங்க தோழிகளே..
1. நடந்து போகும் பொழுது கழுத்தில் உள்ள செயின்னை திருடுவோரிடம் இருந்து தப்பிப்பது எப்படி... நாம் கவனிக்க வேண்டியவை என்ன என்ன ஐடியாஸ் சொல்லுங்க...

ஸ்டெல்லா
இது பற்றிய இழை முன்பே இருக்கே!!!

http://www.arusuvai.com/tamil/node/15287

என் கருத்தை அங்கேயே படிச்சுக்கோங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

என்னுடைய தனிப்பட்ட கருத்து,
1 . முதலில் தேவையற்ற ஆடம்பரத்தை தேவையான நேரங்களில் (when you travel alone ) தவிர்க்க வேண்டும்.
2 . நடந்து செல்லும் போது, நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பது கொஞ்சமாவது தெரிய வேண்டும்.
3 . திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்லும் போது, நகைகளை அங்கே சென்றவுடன் வெளியே எடுத்து போடலாம். தெருக்களில் நடக்கும் போது அவைகளை சேலைக்குள் அல்லது சுடிதாருக்குள் வைத்து கொள்ளலாம்.
4 . முடிந்த வரை கவரிங் நகைகளையே அணியலாம். இப்பொழுது தான் அவற்றிலே நிறையே டிசைன்கள் வருதே.

இதற்கு மேல் என்ன செய்ய முடியும்.
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

அன்புடன்,
சுதா வசந்தன்

ஸ்டெல்லா..

இன்றைய நிலைக்கு தேவையான பதிவுதான்.. ;-) சாலையில் செல்லும் போது என்றால் மட்டும்.. வீட்டிற்கு வெறு மாதிரி பாதுகாப்பு வேண்டும் ;-(

1.சாலையில் செல்லும் போது நம் கண்களை அனைத்து இடத்திலும் மேயவிட்டு (பராக் பார்த்து கொண்டு) செல்லாமல் சுற்றி என்ன நடக்கிறது என்ற ஒருவித பாதுகாப்பு உணர்ச்சியுடன் செல்ல வேண்டும்.

2.மோபைலில் பேசிக் கொண்டு செல்வதை அறவே தடுக்க வேண்டும்.அது மொபைல் கொள்ளை, விபத்து மற்றும் செயின் கொள்ளை என அனைத்தும் நடக்க நாமே உதவி செய்வதை போல..

3.கைப்பையை மாட்டி முன் பக்கமாக இழுத்து வைத்துக் கொள்வது.

4.சாலையின் ஓரமாக அல்லது பிளாட்ஃபாமில் நடப்பது போன்றவை சிறிது உதவி செய்யும்..

5.தனியாக அவ்வாறு நடக்கையில் பயம் இருக்குமாயின் கையில் காம்பஸ் அல்லது கூர்மையான ஏதேனும் பேனா வைத்துக் கொள்ளலாம். வைத்துருப்பது பிரச்சனை இல்லை.. அதை தைரியமாக கையாள வேண்டும். இல்லையேல் அது நமக்கே பிரச்சனை ஆகிவிடும்.

6. சிறிய பாடி ஸ்ப்ரே பயன்படுத்தலாம்.. அதை கையில் வைத்திருப்பது யாருக்கும் தெரியாதபடி.. பிரச்சனை எனில் கண்ணில் அடித்து விட வேண்டியது தான்.. ;-)

7. ஆடி அசைந்து நடக்காமல் சுறுசுறுவென நடந்து செல்வது... முக்கியமான பொருள் கையில் இருப்பின் சென்ற வேலை முடிந்ததும் வேறு எங்கும் நேரம் செலவழிக்காமல் வீட்டிற்கு விரைதல்..

8. நகைகளை உடைக்குள் கவர் செய்து செல்வது.

9.மொத்ததில் கவனமாக, மனதில் தைரியத்துடன் செயல்பட வேண்டும் அந்த மாதிரி சூழ்நிலையில். .

மேல் கூறியவற்றை சிறிது கவனமாக கடைப்பிடிக்கலாம் என நினைக்கிறேன் ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆமி..

;-(
கஷ்டபட்டு அடித்தேன்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பதில் அளித்த எல்லோருக்கும் மிக்க நன்றி...

அதுனால என்ன பா? இதையும் மக்கள் படிக்கட்டும்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நான் கூட கஷ்ட பட்டு மறைத்து மறைத்து அடித்தேன். என் மேனேஜர் வேற பார்த்து கொண்டு இருந்தார்.

சுதா...

இங்கேயும் அதே கோப்புதான்.. ;-)
எல்லாம் ஒரெ குட்டையில் ஊறின மட்டை போல.. ;-)

ஒரே திருத்தம்.. இங்கு நான் தான் மேனெஜர்.. எனக்கு கீழே இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்.. சே.. நீங்கள் உங்கள் மேனெஜரை கண்காணியுங்கள்.. அவரும் அறுசுவைக்கு அடித்துக் கொண்டுதான் இருப்பார்.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சரியா சொன்னீங்க :-)

மேலும் சில பதிவுகள்