விரதம் இருப்பது சரியா.....

இது நான் மங்கையர் மலரில் படித்தது,அனைவருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.பொதுவாக நம் முன்னோர்கள் அந்த காலங்களில் கடவுள் பெயரை சொல்லி வாரம் 1 முறை விரதம் இருக்க சொல்லுவார்கள்.
என்னடா இது விரதம் இருக்க சொல்லி இருக்கிறார்கள் அதுவும் வாரம் 1 முறை இது முன்னோர்கள் சொன்ன ஐதீகமா?இல்லை இது முன்னோர்கள் சொன்ன பொய்தீகம் என்று விவேக் பானியில் நானும் நினைத்ததுன்டு,ஆனால் அறிவியல் பூர்வமாகவும் வாரம் 1 முறை விரதம் இருப்பது உடலுக்கு நல்லது என்று கண்டுபிடுத்து இருக்கிறார்கள்.முன்னோர்களா கொக்கா?எப்படி என்றால் விரதம் இருக்கும் நாட்களில் திட உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் நீராகாரம் அதாவது நம்ம பாணியில் 1 ஆப்பிள் ஜூஸ்,ஆரஞ்சு ஜூஸ்,(1பெப்சி,கோக் அப்படி எல்லாம் எடுத்துக்க கூடாது) எடுத்து கொள்ள வேண்டும்

இயற்கையாகவே பெரும்பாலான மனிதர்களின் உடலில் மலம் முழுவதுமாக வெளியேற்றப்படாமல் சிறிது குடலிலேயே தங்கிவிடும்.அதனால் கழிவுகள் குடலில் தேங்கி கொண்டே இருக்கும்,இப்படி நீர்பதங்களை 1 நாள் முழுவதும் திட உணவு இல்லாமல் எடுத்துக்கொள்வதால் எல்லா கழிவுகளும் வெளியேற்றப்பட்டுவிடும்,இதனால் குடல் பகுதி சுத்தமாகும்.

மேலும் இப்படி வாரத்தில் 1 நாள் விரதம் இருப்பதால்.உடலும் மெலியும் குண்டாவதையும் தடுக்கலாம்,டயட்டில் இருப்பவர்களுக்கு இது உடல் மெலிவதற்கு 1 வாய்ப்பாகும்.கடவுள் பேரை சொல்லி விரதம் இருந்தால்,டயட்டுக்கு டயட்டும் ஆச்சு,புண்ணியத்துக்கு புண்ணியமும் ஆச்சு.

நல்ல தகவல் மல்லி

நானும் தான் அதிகம் கேள்விபட்டதுண்டு. விரதம் இருப்பதால் பல நன்மை கிட்டும் என்று. ஆனால் என்ன நன்மை என்று இப்போது தான் தெரிந்தது.

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

plz keep giving informations like this, it is very usefull

மல்லி

இந்த லின்கை பாருங்களேன்.. ;-)

http://www.arusuvai.com/tamil/node/15069

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மல்லி..நிஜமாய் இந்த தகவல் ரொம்பவே உபயோகம்..scientifically இருக்கும் காரணங்களை தெளிவாய் இப்போது தான் தெரிஞ்சுகிட்டேன்..இன்னும் தகவல் இருந்தால் சொல்லுங்க..

Madurai Always Rocks...

ரம்யா

இந்த லிங்கை எங்கேயோ பார்த்த ஞாபகம். பாத்திமா அருமையா தகவலை சொல்லி இருக்கிறார்கள். தெரியாத பல விஷயங்கள் இருக்கிறது. நன்றி ரம்யா & பாத்திமா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தோழிகளே, பாத்திமா ஏற்கனவே இது பற்றி கருத்து குடுத்து இருப்பது தெரியாது,இதையும் ஏத்துக்கோங்க.அவங்க நெட்ல இருந்து குடுத்து இருக்காங்க நான் புக்ல இருந்து சுருக்கமாக எழுதி இருக்கேன்.இன்னொரு விஷயம்,இந்த மாதிரி ஜூஸ் குடிச்சுகிட்டெ விரதம் இருப்பதால மயக்கம் தலை சுத்தல் எதுவும் வராது,சோறு வடித்த தண்ணீரில் கூட உப்பு போட்டு குடிக்கலாம்,நீர் மோர் கூட குடிக்கலாம்

இன்னக்கி தான் அறுசுவை உள்ள நுழையிறேன். இதுவரை பார்வையாளரா தான் இருந்தேன். மல்லி மேடம் நல்ல தகவலை சொல்லி இருக்கீங்க, தெய்வ நம்பிக்கை உள்ளவங்களுக்கு அது விரதம், அறிவியல் பூர்வமா யோசிச்சா அது ஒரு ஆரோக்கியம். நான் பிரதோஷ விரதம் இருந்துருக்கேன் வெறும் தண்ணிய மட்டும் குடிச்சுட்டு

விரதம் இருப்பது நம் உடம்பு என்கிர மிஷினுக்கு எனர்ஜி டானிக்
கொடுப்பதுபோல புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய விஷயம்தான்.தினசரியுமே
நமெல்லாம் பசித்து ருசி அறிந்து சாப்பிடுவதே இல்லை. பசி நேரத்தில எதானும் சாப்பிடனுமே என்று தான் சாப்பிட்டு வருகிரோம்.வாயில் போடும் உணவை
நன்கு பற்களால் அரைத்து மென்று, நிதானமாக சாப்பிட்டல்தான் ஜீரணம்
சரியானபடி ஆகும் என்று சொல்வார்கள். அப்படி யர் செகிரோம்? உக்கந்தொமா
கடகட்ன்னு சப்பிட்டு எழுந்தோமா என்றுதானிருக்கோம். அப்படி இல்லாமல்
வெரும் பழ ஜூஸ் குடித்து 10 நாட்களுக்கு ஒரு முறை வயிற்றுக்கு சிரிது
ரெஸ்ட் கொடுப்பது நல்ல விஷயம் தான். முன்காலத்தில் நம்வீட்டுப் பெரிய
வர்கள் 15 நாட்களுக்குஒரு முறை ஏகாதசி என்ற பெயரில் விரதம் இருப்பார்
கள். அந்த கால கட்டங்களில் அவர்களுக்கெல்லாம் ஹெல்த் கான்ஷியஸ்
பற்றியெல்லாம் விழிப்புணர்வு இருந்ததில்லை. அதற்கு அவசியமும் இருந்த
தில்லை. வேறு பொழுது போக்குகளும் இருந்ததில்லை. அதனால கோவில்
சாமி சம்பந்தப்பட்ட கதைகள், விழயங்கள் அவர்களை ஈர்க்கும் விஷயங்க
ளாக இருந்தன. ஏக்காதசியன்று உபவாசம் இருந்தால் புண்ணியம் கிடைக்கும்
என்று, எல்லாவற்றையும் பாப, புண்ணியம் சேர்ந்த விஷயங்களாகவே
யோசித்து வந்தார்கள். சாமி நம்பிக்கையாலோ, ஹெல்த் நம்பிக்கையாலோ
10 நாட்களுக்கு ஒருதடவை உபவாசம் இருப்பது நல்ல விஷயம்தான்.

மேலும் சில பதிவுகள்