உடனே பதில் கொடுங்க ப்ளீஸ்

என் குழந்தைக்கு 13 மாதம் ஆகிறது... 2 நாளாக அவளுக்கு காய்ச்சல், நேற்று டாக்டரிடம் போன போது அவர் pedialite குடுக்க சொன்னார்....அது நம்ம ஊர் glucose மாதிரி போல எனர்ஜி-க்காக , ஜூஸ் போலத்தான் பார்க்க இருக்கு, ஆனால் என் பொண்ணு சுத்தமா குடிக்க மாட்டேன்றா,நானும் டேஸ்ட் பண்ணி பார்த்தேன்,ஒரு மாதிரியான சுவைல தான் இருக்கு, அவளை எப்படி குடிக்க வைப்பது? அனுபவசாலிகள் ஏதாவது tricks இருந்தா சொல்லுங்க.....

அநேக அன்புடன்
ஜெயந்தி

pedialite குடுப்பது dehydrated ஆகாமல் இருப்பதற்கு. காய்ச்சல் வந்தால் குழந்தைகள் எதையுமே சாப்பிட மாட்டார்கள். அதனால்தான் டாக்டர்கள் பீடியாலைட் குடுக்க சொல்வார்கள். லேசாக உப்பு டேஸ்டுடன் இருக்கும். கப்பில் ஊற்றி, ஸ்பூனால் கொஞ்சம் கொஞ்சமாக குடுங்கள். என் பிள்ளைகளுக்கு இப்படித்தான் குடுத்தேன்.
வாணி

ஐய்யோ மருந்தா?!!!!

இப்ப நெனச்சாலும் பயமா இருக்கு.
என் மகனுக்கு கொடுப்பதற்குள் நான் பட்ட பாடு.........

அந்த பொடியை(பொடிதானே?) அதிக தண்ணீரில் கலக்காமல் சிறிது தண்ணீரில் கலந்து கொஞ்சமா சீனியும் சேர்த்து கொடுங்க.

இல்லையேல் முதலில் தேனை நாக்கில் தடவி சட்டேன இதையும் கொடுங்க. சங்குல கொடுத்தா குழந்தகள் எளிதில் உள்வாங்கிகொள்ளும் என கேள்விபட்டிருக்கிறேன். முயற்சித்து பாருங்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உடனே பதில் தந்த தோழிகளுக்கு ரொம்ப நன்றி..... வாணி!!! நான் ஸ்பூன்-ல ட்ரை பண்ணினேன்,வேலைக்கு ஆகலை.... அதனால சங்குல தான் தர்றேன்....

ஆமினா, நான் வாங்கியிருப்பது பொடியில்ல, liquid ஃபார்ம்ல இருக்கு,நீங்க சொன்னது சரி தான், சங்குல குடுத்தா கொஞ்சமாவது குடிக்கிறா, இடைவெளி விட்டு விட்டு ஒரு சங்கு அளவு குடுக்கறேன்,அழுதுட்டே முழுங்கிடுச்சு......

மீண்டும் நன்றிகள்....

அநேக அன்புடன்
ஜெயந்தி

இது இப்போ கலர் கலரா வெவ்வேறு நறுமணங்களில் கிடைக்கிறதே...நான் ஜூஸ் என்று சொல்லிக் கொடுத்த ஞாபகம்.

மேலும் சில பதிவுகள்