Please Help me give some ideas

ஹாய் தோழிகளே எனக்கு ஒரு உதவி வேண்டும் என் ம்களின் ஸ்கூலில் UKG Fancy dress competion வருகிறது topic FLOWERS OR ANIMALS கொடுத்து இருக்கிறார்கள் இதை ப்ற்றி (online vedios )வீடியோஸ் ஆன்லைன்ல பார்க்க முடியுமா உங்களுக்கு தெரிந்த ஐடியா சொல்லுங்கள் வ்ருகிற 30 ஜீலை நடக்க இருக்கிறது என்க்கு உதவி பண்ணுங்கப்பா

since you have daughter, my Idea is u can dress her like a flower Rose, buy some red & green colour paper, cut like petals & leaves, she can dress in white or brown colour, u can clip or pin the petals & leaves.

hello madam, go and make search in google and you get lot of ideas in that for ur daughter's competetion.and in that search you will get the videos for ur related search. all the best for u and ur daughter.

எனக்கு online vidios பத்தி தெரியல. ஆனா sunflower மேக் அப் போடலாம். உங்க குழந்தையோட நெத்தி ஆரம்பிக்க இடத்தையும், கழுத்தும் நாடிக்கு கீழ வரைக்கும் அளந்து அந்த இடத்தை தெர்மாகோல்ல வெட்டி எடுத்துட்டு மீதி எடத்துல சூரியகாந்தி இதழ்களை வரைந்து பெயிண்ட் பண்ணனும். உடம்பில் பச்சை நிற உடை உடுத்தி chart அல்லது தெர்மாகோலில் இலைகளை வரைந்து ஆடையுடன் தைத்து விடலாம். நெத்தி மற்றும் முகத்தில் தெர்மாகோல் படும் இடத்தில் காட்டன் ரோல் வாங்கி கம் வைத்து ஒட்டினால் குழந்தைக்கு அழுத்தாமல் இருக்கும். இலைகளுக்கும், இதழ்களுக்கும் வண்ணம் தீட்டூம் போதே ஜிகினாவையும் தூவினால் மிகவும் அழகாக ஜொலிக்கும். இலைகளில் முழுவதும் தூவாமல் அதன் நரம்புகளிலும், ஓரங்களிலும் தூவினால் அழகாகவும், எடுப்பாகவும் இருக்கும்.நடுவில் இருக்கும் மகரந்தத்திற்கு குழந்தையின் முகத்தில் மஞ்சளை பூசி, ஆரஞ்சு வண்ண சாந்து பொட்டை புள்ளி புள்ளியாக வைக்கலாம். அல்லது பூவில் இருப்பது போலவே வேண்டும் என்றால் ஒரு வெள்ளை துணியில் குழந்தையின் கண் மற்றும் மூக்குக்கு இடத்தை வெட்டிவிட்டு படத்தில் உள்ளது போல் வரைந்து வண்ணம் தீட்டி தெர்மாகோலில் ஒட்டி விடலாம். படமும் இலைகளும் googleல் தேடினால் கிடைக்கும்.காதுக்கு நேராக இருக்கும் இதழ்களில் பின்பக்கம் லேஸ் அல்லது நாடாவை கம் வைத்து ஒட்டினால் கீரிடம் போல் எளிதாக தலையில் கட்டி விடலாம்

எனக்கு தெரிந்ததை சொல்லிவிட்டேன். இன்னும் சிறப்பான ஐடியாக்களை தோழிகள் சொல்வார்கள். உங்கள் குழந்தை முதல் பரிசு பெற என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
சுஜாதாசுதாகர்

சுஜாதா நானும் sunflower தான் சொல்லலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள நீங்க சொல்லீட்டீங்க ரொம்ப அழகா, விபரமா சொல்லி இருக்கீங்க சுஜாதா.
பர்வீன் animals முயல் போல வேடம் போடலாமே. உடல் புள்ளா கவர் ஆகுற மாதிரி ஒரு வெள்ளை நிற ட்ரஸ் போட்டு விட்டுட்டு கையில் காலில் வெள்ளை சாக்ஸ் போட்டு விடவும். முதத்திற்கு முயல் போலவே பெரிய மாஸ்க் போல வரைந்து கண் இருக்கும் பகுதில் மட்டும் ஒரு துளை போட்டு பின்னால் கட்டுவது போல் செய்துக் கொள்ளவும். இன்னும் நம்ம experienced motherலாம் வந்து உங்களுக்கு ஐடியா சொல்லுவாங்க பர்வீன்.

ஃபர்வின்

உங்களின் குழந்தைக்கு விலங்குகள் மற்றும் பூக்கள் என தீம் உங்கள் பள்ளியில் இருந்து கொடுத்திருந்தாலும் .. நீங்கள் ஒரு தீமை கண்டுபிடியுங்கள்.. அதாவது சன் ஃபிளவர், ரோஸ் போன்றவற்றை செய்தால், ஒவ்வொறு பெட்டல்ஸ்களையும் ஒரு ஒரு நிறத்தில் செய்து ஜாதி மதம் நாடு என வேறுபாடு இல்லாதது மனிதம்னு ஒரு கான்ஸப்ட் கொடுக்கலாம்...

செண்பகாவோட ஹெல்ப் கேளுங்க.. அவங்க யூஸ்ஃபுல்லா சொல்வாங்க..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கௌரி நானும் முயல் தான் நினைத்தேன். ஆனால் முயல் பத்தி எதுவும் சொல்ல முடியாது. ஆனால் பத்தி ஒன்றிரண்டு நன்மைகள் சொல்ல முடியும். அதான் பண்னேன். ரம்யா சொன்னது போல் இன்னும் கொஞ்சம் தீம் யோசித்து சிறப்பாக செய்யுங்கள்.

கௌரி நானும் முயல் தான் நினைத்தேன். ஆனால் முயல் பத்தி எதுவும் சொல்ல முடியாது. ஆனால் sunflower பத்தி ஒன்றிரண்டு நன்மைகள் சொல்ல முடியும். அதான் sunflower choose பண்னேன். ரம்யா சொன்னது போல் இன்னும் கொஞ்சம் தீம் யோசித்து சிறப்பாக செய்யுங்கள்.

ஹாய்
நீங்க உங்க குழந்தைக்கு புலி வேடம் போடலாமே, புலி இனம் அழிந்து வருகிறது என்று சொல்கிறார்கள், ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த நீங்கள் முயற்சி செய்யுங்கள்.
எந்த வேடம் போட்டாலும் எங்களுக்கு அறிவிக்க மறந்து விடாதீர்கள்

அன்புடன்
பவித்ரா

பர்வீன் நான் நினைத்தை தான் பவித்ராவும் சொல்லி உள்ளார்கள். அல்லது யானை வேடம் போடலாம். காடுகளை அழிப்பதால் அங்கு வாழும் உயிரினங்கள் ஊருக்குள் வருகிறது. வனவிலங்குகள் பாதுக்காப்பாக இருக்க காடுகள் அவசியம், மனிதன் தன்னுடைய தேவைக்காக காட்டிலுள்ள மரத்தை வெட்ட கூடாது. யானை, புலி, மான் இந்த மாதிரி ஏதாவது வேடம் இட்டு காடுகளின் நன்மைகளை சொல்லலாம்.

ஹாய் மை டியர் தோழிகளே என்க்கு ரொம்ப சந்தோஷமாக் இருக்கு இப்படி எல்லாரும் ஒடோடி வந்து சொல்லுவீங்கன்னு நான் நினைக்கலை எல்லாருக்கும் ரொம்ப நன்றி சுஜாதா சொன்னது போல் ரோஸ் ச்ன்ப்ளவர் செய்யலாம் ஆனால் என்க்கு அதை எப்ப்டி செய்வது என்று தெரியவில்லை எல்லோரோட ideas ரொம்ப நல்லா இருக்கு ஜாதி மத வேறுபாடு இல்லை என்று எப்ப்டி petalsla காமிப்ப்து ஒவ்வொறு petals எப்ப்டி அதில் எழிதி ஒட்டுவதா இல்லை எப்ப்டி பண்றது எத செய்றதுன்னே தெரியலைப்ப எல்லாம் கண்ண் க்ட்டுது செண்பகா எங்கே இருக்கீங்க உங்க கேட்க சொல்லி இருக்காங்க் வந்து என்க்கு idea சொல்லுங்க என்க்கு பார்த்தால்தான் நீங்க சொல்றது செய்ய முடியும் என்க்கு அந்த அள்வுக்கு வ்ரையுறதுலாம் தெரியாதுப்பா என்க்கு ஆன்லைன்ல வீடியோஸ் பார்க்க சைட் கொடுங்க ப்ளீஸ் பார்த்தால் கொஞ்சம் செய்ய முடியும் என்க்கு ஜாதி மத வேறுபாடு இல்லை என்ற் தீம் என்க்கு பிடிச்சி இருக்கு அதை எப்ப்டி செய்வது சொல்லுங்க என் குழ்ந்தைக்கு 1 prize கிடைக்க் உதவி பண்ணூங்க போன் முறை அவளுக்கு prize கிடைக்கலை அதனால் ரொம்ப upset ஆயிட்டா இந்த முறை கிடைக்க் முயற்சி செய்ய்லாம் என்ன ப்ண்றோமோ அதை பற்றி சில் வாக்கியம் சொல்லனுமாம் கொஞ்சம் தாய்மார்கள் வந்து சொல்லுங்க்

மேலும் சில பதிவுகள்