உதவி செய்யவும் pls.

என் பெயர் மேபல். எனக்கு திருமணமாகி 1.3 வருடமாகிறது. எனக்கு வெள்ளை படுகிறது. மாதவிலக்கு சரியாக 28 நாளில் வந்துவிடும். டாக்டரிடம் சென்ரெஅன் ஸ்Cகன் எடுக்க சொன்னார்கள். ஸ்cகன் ரிப்பொர்ட் ல் எல்லாம் நார்மலாக உள்ளது. அடுத்து தைராடு டெஸ்ட் எடுக்க சொல்கிறார்கள். என் கணவருக்கும் டெஸ்ட் எடுக்க சொல்கிறார்கள். பயமாக இருக்கிறது. உதவி செய்யுங்கள் ப்ளிஸ்

Folic acid tables சாப்பிடுறேன். நான் பஸ்ஸில் ரொம்ப தூரம் travel பண்ணுறேன் அதனால தான் ஏதாவது problem மா தெரியல.

மேபல் நீங்க ரொம்ப பயப்படறீங்கன்னு நினைக்கிறேன். பயப்பட எதுவும் இல்லைம்மா. மிகவும் ஈசியான ஒரு டெஸ்ட்தான் அது. நீங்க பயப்படாம ரிலாக்ஸ்டா இருந்தா போதும் வலி எதுவும் இருக்காது. சில சமயம் வெறுமனே ஸ்கேன் செய்ய மட்டுமே கூட வரச்சொல்லியிருக்கலாம்.

ஒரு சானிட்டரி நாப்கின் மட்டும் கையில் வச்சுக்கோங்க. வேற எந்த தயாரெடுப்பும் தேவையில்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இரண்டாம் நாள் fasting ல வரசொல்லியிருக்காங்களா?? blood test க்காக தான் இருக்கும் இந்த blood test hormone check பண்றதுக்கு பா.
irregular periods ,குழந்தையிண்மை,white discharge இவற்றிற்கு main காரணம் hormonal imbalance. அந்த problem உங்களுக்கு இருக்கா?? இல்லையான்னு கண்டுபிடிக்கத்தான் வரசொல்லியிருப்பார்கள் மற்றபடி பயபட ஒன்றும் இல்லை

ponni

மேபேல் என் பெயர் நித்யா, உங்களிடம் இதுதான் முதல் முறையா பேசுகிறேன் நல்லா இருகீங்களா? எனக்கும் குழந்தை இல்லை, நான் வங்கதேசத்தில் வசிக்கிறேன், இங்கு மருத்துவரிடம் காண்பித்தேன் எனக்கும் என் கணவருக்கும் சில டெஸ்ட் எடுக்கச்சொன்னார்கள் எனக்கு Blood Test, Urine Test, USG(Ultrasonogram) test they took in that everything is normal,
எனக்கும் என் கணவருக்கும் சில விட்டமின் மாத்திரைகள் கொடுத்தார்கள்(இருவருக்கும் ஒரே மத்திரைகள்) 1 மாததிர்க்கு சாப்பிடச் சொன்னார்கள் மாதவிலக்கான இரண்டாவது நாள் வரச்சொன்னார்கள் நேற்று சென்றோம் எனக்கு Ovulet மாத்திரையை இரண்டாவது நாளில் இருந்து 5 நாட்கள் வரை சாப்பிடச் சொன்னார்கள் பின்பு மாதவிலக்கான 9வது நாளில் இருந்து ஒரு நாள்விட்டு ஒருநாள்(alternative days)we should meet each other till 19th day.
அதனால நீங்க பயப்படாம டாக்டரைச் சென்று பார்த்தபின் கூறுங்கள். வாழ்த்துக்கள்

அன்புடன்
நித்யா

நன்றி நித்யா மேடம்.

தைராய்டு டெஸ்டு எடுத்ததில் நார்மல். என் கணவருக்கு விந்து பரிசோதனை செய்ய சொல்லி இருக்கிறார்கள். Officeல் Leave கிடைக்கததால் இன்னும் Hospital போகவில்லை. என் மாமனார், மாமியார் இன்னும் குழந்தை இல்லையா என்று கேள்வி கேட்கின்றனர். என்ன செய்வதெ\ன்றே தெரியவில்லை.

Maybel எப்படி இருக்கிறீர்கள்?? அடுத்தவங்க சொல்றத எல்லாம் காதில் போட்டுக்காதீங்க relax டா இருங்க. நித்யா சொன்னமாதிரி தான்பா treatment procedure இப்போ எல்லாத்துக்கும் treatment இருக்குப்பா dont worry எல்லாம் நமக்கு கிடைக்கவேண்டிய நேரத்தில கடவுள் கொடுப்பார் so pray and wait for the beautiful moment with out tension.

"wish you all the best"

ponni

மேபேல்,பொன்னி எப்படி இருகீங்க? நீங்க சொல்வது சரிதான், ஒருவருக்கொருவர் ஆலோசனைகள் வேறுபடும், என் கணவருக்கும் அதே டெஸ்ட் எடுக்கச் சொன்னார்கள் இன்னும் எடுக்களை, நீங்க கவலைபடாம மனச லேசா வச்சுகோங்க எல்லாம் நன்மைக்கேனு நெனச்சு சந்தோஷமா இருங்க, எனக்கும் மருத்துவரிடம் சென்றுவந்தபின்ஹான் நம்பிக்கை கொஞ்சம் அதிகமாகி உள்ளது.

அன்புடன்
நித்யா

எனக்கு மென்சஸ் 28 நாளில் வந்துவிடும். ஆனால் இந்த மாதம் 5 நாள் முன்னதாகவே 21செப். வந்து விட்டது. இது எதனால்? எதாவது Problem இருக்கா?

நீங்க அதிகமா மனசை அலட்டிகிட்டாலும் இப்படி ஆகலாம். சிலருக்கு தள்ளிப் போகும் சிலருக்கு சீக்கிரம் வரும். நார்மல் ஃப்ளோ என்றால் ரிலாக்ஸ்டாக இருங்க. அடுத்த மாதமும் இதேபோல் ஆனது என்றால் மருத்துவரிடம் அட்வைஸ் கேட்பது நல்லது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்