Home remedy

I have dark skin around my neck because of wearing chain.Is there any home treatment to get rid of that.


ஒங்களுக்கு ஒதவி செய்ய நெறய பேர் வருவா................

(அப்பாடி........... மொதல் கருத்து என்னோடதுதான் இன்னிக்கு.)

(ஆம்ஸ்& ரம்யா மேடம் இப்ப என்ன பண்ணுவேள்......)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

http://www.arusuvai.com/tamil/node/14963

இந்த லிங்க்ல தேவா கிட்ட நீங்க கேட்டா அவங்க உங்களுக்கு பதில் சொல்லுவாங்க!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கழுத்து கருமைக்கு, தேன்,முட்டையின் வெள்ளைகரு,எலுமிச்சை சாறு சில துளிகள் கலந்து கழுத்தில் பூசி கழுவி வர கருமை நீங்கும்.புளித்த தயிர் தடவலாம்.வுருளைகிழங்கு சாறு கழுத்தில் தடவிவர கருமை நீங்கும்.அலோவேர ஒரு சிறந்த tan remover என்று நம்ம தேவா கூட சொல்லியிருக்கிறார்கள். இவை அனைத்து முறையில் எதாவது ஒன்றை தினமும் follow செய்யவும்.நாளடைவில் கழுத்து
கருமை மறையும்

கேரளாவில் உடம்பு தேய்த்துக்குளிப்பதற்கு பீர்க்கங்கா
கூட்டோடு நார் உபயோகப்ப்டுத்து வாங்க.அது பேர் என்னனு
தெரியலை பரவலாக எலா இடங்களிலும் கிடைக்கிறது.
பயறுமாவு,அதில் புளித்த தயிர் ஊற்றிகலந்து அந்த நாரில்
தோய்த்து கருப்பான பகுதிகளில் தேய்த்துக்குளிக்கவும்
நாளடைவில் கருமை நிறம் மறைந்து வரும். இதை
தொர்ந்து தினமும் செய்யனும்.

கோகிரிஷ்,

கழுத்தில் கருமை வைட்டமின் E குறைவினால் ஏற்படும்.எனவே அந்த வைட்டமின் அதிகம் உள்ள உணவைப் போதிய அளவு எடுத்துக்கொள்ளுங்கள்.
மேலும் வைட்டமின் E ஆயில் கடைகளில் கிடைக்கும். அதைத் தடவினாலும் கருமை நாளடைவில் மறையும். எங்கோ படித்தது.எங்கே என்று நினைவில் இல்லை.

Hai freinds thank uu all very much for ur suggestions will try them.

use facewash regularly for face,neck & around ur problem will be removed permanently

Think Positively

ஹாய்

கற்றாழையின் உள் இருக்கும் ஜெல் போன்ற பகுதியை கருமை
உள்ள இடங்களில் பூசினால் நாளைடைவில் கருமை மறைந்துவிடும்.

அமுதா

மேலும் சில பதிவுகள்