அட்மின்(பாபு) அண்ணாவுக்கு

அட்மின்(பாபு) அண்ணாவுக்கு எனக்கு ஒரு சந்தேகம் நான் ஒரு செய்முறை அனுப்ப உள்ளேன் விளக்கபடங்களுடன், அதற்க்கு ஒரு படத்தை அதாவது தேவையான பொருட்களை இரண்டு விதமாக படம் எடுத்துள்ளேன் இதில் நன்றாக உள்ளதை நீங்களே தேர்வு செய்து கொள்வீர்களா என்பதை கூறவும்
(அண்ணா நான் அனுப்பியா கேள்வியை நீங்க பார்கலைனு நினக்கிறேன் பதில் தறவும்)please.

நல்லாருக்கீங்களா? உங்க எல்லா பதிவையும் இப்பதான் படிச்சேன். எனக்கும் கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு. ஆனா எப்படி ஒரு பொது இடத்துல சொல்ரதுன்னும் தெரியலை அதும் இல்லாம உண்மையாவே அவங்க சொன்னதா இருந்தா என்ன பன்னரதுன்னு ஒரு பயம்... அவங்க அனுப்பின எல்லா பதிவயிமே கொஞ்ச கொஞ்ச நேர வித்தியாசத்துலயே அனுப்பிருந்தாங்க அதனால எனக்கு நல்லாவே சந்தேகமா இருந்துச்சு. ஆனா என்னால சொல்ல முடியலை அதனால அவங்களுக்கு ஒரு மெயில் அனுப்பனும்னு நினைச்சுருந்தேன். இப்ப வந்து பாத்தப்பதான் நீங்க நல்ல முடிவு எடுத்துருக்கறது தெரிஞ்சுருக்கு... இனி இப்படி பன்னலாம்னு நினைக்கரவங்களுக்கு ஒரு பயம் இருக்கும் நீங்க பன்னினத பாக்கும் போது.

அண்ணா நான் கூட கொஞ்ச நாளுக்கு முன்ன இந்த இழைல (http://www.arusuvai.com/tamil/node/15525?page=2) புத்தகத்துல படிச்சதுன்னு சொல்லி ஒருசில செய்திகளை போட்டுருக்கேன், அது தப்பா இருந்தா மன்னிக்கவும்... அந்த பதிவை வேணும்னா நீக்கிருங்க அண்ணா...

நன்றி.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

அட்மின் அவா்களுக்கு

உங்களின் எண்ணம் புரிகிறது. நீங்கள் யோசிப்பதில் தவறில்லை. அறுசுவையின் தனித்துவம் ஒருபோதும் குறையக்கூடாது. உங்கள் கடுமையை நீங்கள் கண்டிப்பாக காட்டித்தான் ஆகவேண்டும்.

கதை மற்றும் கவிதைகளின் பிழைகளையும் சேர்த்துதான் கூறினேன். நீங்கள் சம்மதித்தால் நான் என் மின்னஞ்சல் முகவரி தருகிறேன். தாங்கள் ஊரில் இருந்து வந்ததும் எனக்கு கூறுங்கள்.

திருமதி. கரோலின் அவா்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

திருமதி. கரோலின் அவர்களின் சகோதரிக்காக, முகம் பார்த்திராத ஒருவருக்காக நீங்கள் தெரிவித்த அனுதாபங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

அவர் நிமோனியா வினால் இறந்துவிட்டதாக, அங்கே சென்ற பின்புதான் தெரியும். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்ததால், அது குடல் வரை பரவி, குடல் செயலிழந்து இறந்துள்ளார்.

அங்கிருந்து வந்த மறுதினம்(நேற்று), எனது சித்திக்கு ஒரு ஆக்ஸ்டெண்ட், கால் முறிவு என்று அவரைப் பார்க்க வெளியூர் சென்றுவிட்டேன்.

இன்று மதியம் மற்றொரு சோகச் செய்தி. எனது நெருங்கிய நண்பர், கல்லூரி தோழர், ரூம் மேட், பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்தவர், இன்று மதியம் இறந்துவிட்டாராம். அவருக்கும் கிட்டத்திட்ட இதே நிமோனியா வை காரணமாக சொல்கின்றார்கள். இன்னும் முழுமையான தகவல் கிடைக்கவில்லை. இப்போது கோவில்பட்டி (அவரது ஊர்) புறப்பட்டு செல்கின்றேன். திரும்பி வர இரண்டு நாட்கள் ஆகலாம். எல்லாமே தவிர்க்க இயலாத பயணமாக இருக்கிறது. இன்னும் இங்கே அலுவலகத்தில் நெட்வொர்க் சரி செய்யப்படவில்லை. இரண்டு நாட்கள் கழித்து நான் திரும்பி வந்த பிறகுதான் பல்சுவை பகுதி, மற்ற பகுதிகளை அப்டேட் செய்ய இயலும். தயவுசெய்து பொறுத்தருளவும்.

நாங்கள் செய்யும் அனைத்தும் பொறுமையா நீங்க பார்க்கறீங்க, அத்தியாவசிய காரணங்களால் நீங்கள் போவதற்கு நாங்க என்ன சொல்லப்போறோம், பாத்து பத்திரமா போயிட்டு வாங்க அண்ணா, இறந்தவரின் குடும்பத்தாருக்காகவும் இறைவனை ப்ரார்த்திக்கிறோம்.

அன்புடன்
பவித்ரா

//இன்று மதியம் மற்றொரு சோகச் செய்தி. எனது நெருங்கிய நண்பர், கல்லூரி தோழர், ரூம் மேட், பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்தவர், இன்று மதியம் இறந்துவிட்டாராம். அவருக்கும் கிட்டத்திட்ட இதே நிமோனியா வை காரணமாக சொல்கின்றார்கள். இன்னும் முழுமையான தகவல் கிடைக்கவில்லை.//

அட்மின் சார் ,
தோழரின் இரங்கல் கேட்டு
கோவில்பட்டி செல்கின்றீர்.
கண்கள் குளமாக அவருக்கு
இதயாஞ்சலி செய்கின்றோம்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நிறைய அலைச்சலில் இருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. நண்பரின் இழப்பு, உறவினரின் பாதிப்பு, சர்வர் பிரச்சனை என நிறைய மன உளைச்சலும் இருக்கும்.

திருமதி. கரோலின் அவர்களின் தங்கை மற்றும் உங்கள் நண்பரின் இழப்புக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

எல்லாவற்றையும் முடித்து நலமுடன் திரும்புங்கள்.

அன்புடன்,
இஷானி

நல்லாருக்கீங்களான்னு கேக்க தோணலை அண்ணா... சாரி. உங்க சித்திக்கு இப்ப கால் முறிவு எப்படி இருக்கு பரவாயில்லயா? உங்க நண்பர் இறந்த செய்திய படிச்சப்ப ரொம்ப கஷ்டமா இருந்துச்சு...

இங்க எங்க ஊருல கூட நிறைய பேருக்கு நிமோனியான்னு கேள்விப்பட்டேன். ஏன் இப்படி திடீர்னு நிமோனியா பரவுது? எதனால? உங்க நண்பரின் ஆத்மா சாந்தியடையவும், கரோலின் மேடம் வீட்ல எல்லாரும் சகஜ நிலைக்கு சீக்கிரமாக வரனும்னும் வேண்டிக்கறேன்...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்