அரட்டை 2010‍ பாகம் 1

ஹலோ ! என்ன பாக்கறீங்க... நானும் எல்லா இடத்திலும் போய் பாக்கறேன்... நான் போற இடத்துக்கு நண்பர்கள் போவதில்லை.. அவங்க வந்து போனா ஒரு 10 நாள் கழிச்சி தான் எனக்கே தெரியுது... அதனால் கொஞ்சம் அரட்டையை தொடங்கறேன்... முன்ன மாதிரி ( எப்ப முன்ன மாதிரின்னு கேக்காதீங்க... ) என் ராசி எப்படின்னு பாக்கலாம்...
எனக்கு தெரிஞ்சு இப்ப இந்த இழை இல்லை...

கரெக்டா வந்து அட்டென்டென்ஸ் போடணும்.. இல்லைன்னா வனி கைல பிரம்போட வருவாங்க...

என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ.. இந்த இழை மட்டும் காணாம போயி அதையும் என்னை தேட வைக்காதீங்க....

அன்பார்ந்த நெஞ்சங்களே! தோழிகளே மற்றும் தோழர்களே! நண்பிகளே மற்றும் நண்பர்களே! மற்றும் என் உயிரினும் மேலானஅறுசுவையின் அன்புள்ளங்களே!
உங்கள் அனைவருக்கும் என் இனிய மாலை வணக்கம்.
நான் போடற மொக்க தாங்க முடியாம அறுசுவையில் பாதிபேர் என்கிட்ட பேசறதையே குறைச்சுக்கிட்டாங்க.... மாமி சொன்னாங்களேன்னு இங்க வந்து ஒரு
Good evening போட்டுட்டு போறேன்.
http://www.arusuvai.com/tamil/node/15631 - இதுல வந்து என்னோட அக்கப்போர பத்தி தெரிஞ்சுக்கிட்டு, என்னை உங்க அரட்டையில சேர்த்துக்கறத பத்தி, ஒரு மீட்டிங் போட்டு, நல்லா ஒன்னுக்கு பத்து தடவ discuss பண்ணி நல்ல முடிவா எடுங்க!!!
போய்ட்டு வர்ரேன்....

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

என்ன செந்தில் குமார் எப்படி இருக்கீங்க?திடீர்னு அரசியல்வாதி ஆயிட்டீங்களா என்ன? கும்பிடறதப்பாத்தா அப்பிடித்தான் தெரியரது. சரி சரி காலை வணக்கம்.(.நாங்க பதிவு போடாட்டாலும் அப்பப்பொ படிச்சுருவோமில்ல!)

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்
உண்மைதான், நல்ல வரிகள்.


என் வார்த்தையை மதிச்சு இங்க வந்து குட் ஈவ்னிங் சொன்னதுக்குதான்!

பொன். செந்தில்குமார்

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கலக்குங்க. ரசிக்க ஒரு பட்டாளமே காத்துண்டு இருக்கு.


என்ன ஒரு பொருட்டா மதிச்சு பதில் போடறேளே....

ரொம்ப தாங்க்ஸ்...............

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

என்ன அப்படிச்சொல்லிட்டேள். அருசுவைல உங்க பிள்ளையார் சுழி
நாலயும் ஐயர் பாஷை எழுத்தாலயும் ஒரு ரசிகர் கூட்டமே உங்க
பின்னால இருக்கு தெரியுமோ.

அட! நான் எதிர்பார்க்கத அளவுக்கு பதிவுகள் இருக்கே.. வந்தனம்.. வந்த சனம் குந்தனும்... இருங்க .. இப்ப கடைக்கு கிளம்பறேன்.. வந்து நிதானமா எல்லாரிடமும் பேசறேன்.. இன்னும் பெஞ்ச் மேல ஏத்தற ஆள் (ஓ... டீ பார்டிக்கு போயிருப்பாங்க) காணோம்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா, மாலை வணக்கம் சொல்லனும்ன்னு நினைத்தேன், ஆனா முடியல, அதனால என்ன, இரவு வணக்கம் திருமதி இலா அவர்களே,

அன்புடன்
பவித்ரா


ஒங்களுக்கு ”கொஸ்டீன் கோமு” இந்த பட்டத்தை தரேனே.நேக்கு ரொம்ப ஆசையா இருக்கு தெரியுமோ.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


ரொம்ப தூக்கம் வரதால எல்லாருக்கும் GOOD NIGHT!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்