அரட்டை 2010‍ பாகம் 1

ஹலோ ! என்ன பாக்கறீங்க... நானும் எல்லா இடத்திலும் போய் பாக்கறேன்... நான் போற இடத்துக்கு நண்பர்கள் போவதில்லை.. அவங்க வந்து போனா ஒரு 10 நாள் கழிச்சி தான் எனக்கே தெரியுது... அதனால் கொஞ்சம் அரட்டையை தொடங்கறேன்... முன்ன மாதிரி ( எப்ப முன்ன மாதிரின்னு கேக்காதீங்க... ) என் ராசி எப்படின்னு பாக்கலாம்...
எனக்கு தெரிஞ்சு இப்ப இந்த இழை இல்லை...

கரெக்டா வந்து அட்டென்டென்ஸ் போடணும்.. இல்லைன்னா வனி கைல பிரம்போட வருவாங்க...

என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ.. இந்த இழை மட்டும் காணாம போயி அதையும் என்னை தேட வைக்காதீங்க....

மோகனா மேம் ரசிகர் மன்ற தலைவர் அவர்களே, செயலாளர் அவர்களே (ஆமா,யார் தலைவர்,செயலாளர்) சரி...விடுங்க யாரா இருந்தா நமக்கு என்ன பொருளாளர் அவர்களே, எனக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவியை வழங்கியுள்ள எங்கள் மோகனா மேடம் அவர்களே காலைல காலை வணக்கத்தில் என்னை ஏன் மறந்தீர்கள் என்று நான் கேட்கப் போவதில்லை.யாருப்பா அது கல்லெடுத்து அடிக்கறது உடுங்கப்பா நான் எங்க பொருளாளர் மொக்க போட்ட பின்னால வந்து மொக்க போட்டுக்கறேன் சாரி பேசிக்கறேன்

அன்புடன்
THAVAM

அறுசுவை தளத்தின் உறுப்பினர் அனைவருக்கும் எங்கள் மன்றத்தின் சார்பாக நாங்க சொல்லிக்கிறோம் ¤GOOD NIGHT¤

அன்புடன்
THAVAM

//ஆமா,யார் தலைவர்,செயலாளர்//
நீங்க கேட்ட கேள்வியினால இந்த பூலோகமே ஆட்டம் கண்டுவிட்டதே!1
என்ன மாமி மன்றத் தலைவி யாரென்று இன்னும் தெரியாமல் ஒரு ஜீவன் இப்புவுலகில் இருக்கிறதா..... என்ன கொடும தவமணி சார்.
இந்த தகவலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால், எங்கள் தன்னிகரில்லா தனிப்பெருந்தலைவி,தன்மான தங்கம்+சிங்கம், நடமாடும் அறுசுவை அகராதி ஆமினாவிடம் கேளுங்கள்...

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

பொருளாளர் அவர்களே நான் நமது தலைவி தன்மான சிங்கம் அறு(சு)வை தங்கம் அவர்களிடம் இவ்வளவு பெரிய கேள்வியை கேட்கப் போவதில்லை காரணம்(யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க சார் அவங்களுக்கே மறந்து போச்சாம்) இருந்தாலும் நான் என் கடைமையை திறம்பட ஆற்றுவேன் என்று... இருங்க... இருங்க... கல்ல எடுக்காதிங்க. நன்றி வணக்கம் அட்மின் சார் வேற பார்த்து கொண்டு இருக்கிறார் எனது உரையை இத்துடன் முடித்து கொண்டு நாளை நல்லதொரு விவாதத்தை அரட்டை அரங்கத்தில் முன் வைக்க இருக்கிறேன் என்ற தகவலோடு விடை பெறுகிறேன்.
வாழிய நாடு

அன்புடன்
THAVAM

எனக்குக்கூட ஒரு பட்டம் கொடுத்து என்னை கௌரவித்திருக்கேளே.
எவ்வளவு பெரியமனசு உங்களுக்கு. நீங்க கொடுத்ததைப்போல பதிலுக்கு
நானும் ஏதாவது செய்ய வேண்டாமா?
இந்தியத்தொலைக்காட்சிகளிலேயே முதன் முறையாக என்று பில்ட் அப்
பெல்லாம் கொடுக்கிர மாதிரி சொல்லனும்னா,

” உலக இணையதள வரலாற்றிலேயே முதல் முறையாக உ ( பிள்ளையார் சுழி)
போட்டு எழுதும் திருமதி மோகனா ரவி” அவர்களுக்கு ஒரு பொறுத்தமான
பட்டத்தை கொடுத்து அவரை கௌரவிக்க வாருங்கள்தோழிகளே

( இந்த ஐடியாவே அட்மின் சாரோடதுதான்).

மேடம் என்ன தவமணி நம்மை அறு(சு)வை என்று சொல்லிட்டாரேன்னு கோவிச்சுகாதீங்கோ. நன்றி

தாயிற் சிறந்த கோவிலுமில்லை

அன்புடன்
THAVAM

என்னப்பா இது ... ஒருத்தர் கட்சி ஆரம்பிச்சிட்டாரா.. தவம்ஸ்.. பாருங்க உங்க பதிவை படிச்சதும் கழுத்து கைக்கு வந்திடுச்சி.. அம்மா முடியலையே....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

செந்திலும் தவமணியும் என்னைய வச்சு பெரிய காமெடியே பண்ணிட்டீங்க போல!!
//எங்கள் தன்னிகரில்லா தனிப்பெருந்தலைவி,தன்மான தங்கம்+சிங்கம், நடமாடும் அறுசுவை அகராதி ஆமினாவிடம்//

செந்தில் நிறையா அரசியல் பேச்சுக்களை பாப்பீங்களோ?
சிரிச்சதுல பொறை ஏறி சாப்பிட முடியாத அளவுக்கு ஆக்கிட்டீங்க!

தவமணி
இதுக்கெல்லாம் போய் நான் கோவிச்சுக்குவேனா? பட்டில மட்டும் தான் நான் சண்ட போடுவேன்.

உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்னே நெனச்சுட்டு இருந்தேன். ஆனா நீங்க மாட்டல!
தவமணி மேடம் அப்படின்னு ஒரு தோழி சொன்னதுக்கு வித்தியாசமான பேரை வச்சுட்டாங்கன்னு சொல்லிர்ந்தீங்க. எங்க ஸ்டாப் ஒருவர் பேரும் தவமணி தான்(நான் தவா என அழைப்பேன்). பொதுவாவே இது ஆண்களின் பெயர் தானே!
நல்ல தலைப்புக்கு காத்திருக்கேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் மோகனா! எப்படி இருக்கீங்க? நானும் என்னடா ஒரு வேளை எழுத்துபிழை போலன்னும் நினைச்சேன்.. அது பிள்ளயார் சுழின்னு அப்புறம் தான் புரிஞ்சது.. அப்ப நீங்க பிள்ளையார் பட்டி தானே...
வாங்க‌ மோக‌னா... எந்த‌ ஊரான்ன‌ என்ன‌.. எல்லாருக்கும் ந‌ல்லா வ‌ண‌க்க‌ம் வைக்கிறீங்க‌...கிக்..கிக்.கி...
நான் காலையில் எழும் போதே இந்தியால‌ எல்லாரும் டின்ன‌ர் முடிச்சிருப்பாங்க‌...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சீத்தாம்மா! எப்படி இருக்கீங்க? மாமா/மகன்ஸ்/மருமகள்/பேரக்குழந்தை நலமா? நானும் அந்த நினைவில் தான் ஆரம்பித்தேன்... மழலை தமிழ்ன்னாலும் பரவாயில்ல.. அவங்கள (பிரபாதாமு) எங்கயாவது கண்டா வரச்சொல்லுங்க..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்