அரட்டை 2010‍ பாகம் 1

ஹலோ ! என்ன பாக்கறீங்க... நானும் எல்லா இடத்திலும் போய் பாக்கறேன்... நான் போற இடத்துக்கு நண்பர்கள் போவதில்லை.. அவங்க வந்து போனா ஒரு 10 நாள் கழிச்சி தான் எனக்கே தெரியுது... அதனால் கொஞ்சம் அரட்டையை தொடங்கறேன்... முன்ன மாதிரி ( எப்ப முன்ன மாதிரின்னு கேக்காதீங்க... ) என் ராசி எப்படின்னு பாக்கலாம்...
எனக்கு தெரிஞ்சு இப்ப இந்த இழை இல்லை...

கரெக்டா வந்து அட்டென்டென்ஸ் போடணும்.. இல்லைன்னா வனி கைல பிரம்போட வருவாங்க...

என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ.. இந்த இழை மட்டும் காணாம போயி அதையும் என்னை தேட வைக்காதீங்க....

தவமணி சார்.காலை வணக்கம்.நல்ல இருக்கிங்கலா?நான் ஷேக்.திருநெல்வேலி.நீங்க?இன்றைய நிமிசங்களிலிருந்து நீங்களும் நானும் தோழர்கள்.சரியா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

இலா..

காணாம போகக்கூடாதுனு சொல்லி இந்த இழையை ஆரம்பிச்சீங்க...
ஒரே நாள்ள 8 பக்கம் வரை வந்துடுச்சு.. உங்க கூட அதிகம் நான் பேசினதில்லை.. பேசிடலாம்.. ;-) என்ன சொல்றீங்க.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அனைவருக்கும் காலை வணக்கம்

இலா மேம் முதல் முறை உங்களுக்கு பின்னுாட்டம் கொடுக்கின்றேன். நானும் இதில் கலந்துகொள்ளலாமா? என் பெயர் ராதா. அறுசுவை இணையத்திற்கு புதிது என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த மாதிரி எந்த பின்னுாட்டமும் கொடுத்ததில்லை. ஒரு சில பேருக்கு பின்னுாட்டம் கொடுத்துள்ளேன். என்னையும் சேர்த்துக்கொள்வீர்களா?

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

உ மாமிக்கு வணக்கமுங்கோ..வணக்கம்..!! "அட்டவணை ஆம்சு" GM ! மற்றும் வந்துருக்குவுக எல்லாருக்கும் வணக்கம்! நம்ம மின்னல் ரம்ஸ் எங்கனு தெரியல..தவமணி சார் என்ன சத்தமே காணோம்..வயலில் களை பறித்திர்களா.?? இல்லை உ மாமிக்கு பயந்து பம்ப்பு செட்டு அறையில் ஒளிந்து இருந்திரா?? கலக்குங்க..

Madurai Always Rocks...

ரம்யா வந்துட்டீங்களா?

உங்கள தான் மாமியும் பவித்ராவும் தேடிட்டே இருந்தாங்க?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆனந்தி// "அட்டவணை ஆம்சு" GM//
அப்படினா என்ன?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வேர் இஸ் "what next?"
தவமணி சார்..உங்களுக்கு பிடிச்ச வாட் நெக்ஸ்ட் எங்கே காணோம்...????

Madurai Always Rocks...

யாரது??!!! நம்ம இலா'வா??? அட கடவுளே!!! எப்போ இருந்து இவங்க அரட்டை பக்கம் துவங்கும் அளவுக்கு முன்னேரினாங்க??!!! ;) எப்படியோ.... பார்ப்பதே மகிழ்ச்சியா தான் இருக்கு!!! :)

நலமா இருக்கீங்களா?? நாங்க நலம். வராத மக்களெல்லாம் வந்திருக்காங்க.... சந்தோஷம். ;)

டீ பார்ட்டிக்குலாம் போகலப்பா... நம்ம வேலை கொஞ்சம் அதிகமா போச்சு 1 வாரமா!!! அதான் வர முடியாம போச்சு!!! :( சீதால்ஷ்மி நேற்று இரவு சொன்னாங்க, விடிஞ்சதும் (9 மணிக்கு தான் விடிஞ்சுது) வந்துட்டேன் இலா!!!

எல்லா அக்கா'வும் நலமா?? இனி அறுசுவையில் எல்லாரும் எனக்கு அக்கா தான். இதுக்கு முன்னாடி இருக்கவங்களும் சரி, இனி வர போறவங்களும் சரி. புரிஞ்சிதா?? யாரும் என்னை அக்கா'னு சொல்ல கூடாது!!! ஒரு சின்ன பிள்ளைய போய் வம்பிழுக்குறது. இனி அக்கா, மேடம் சொன்னா பென்ச் தான்!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா


வாங்கோ...........வாங்கோ!அப்பாடா! வந்துட்டேளா!நேக்கு ரெண்டு நாளா தூக்கமே வர்ல்ல தெரியுமோ?

பி.கு;
சி.ஐ.டிகிட்ட சொல்லி தேடலாம்னுருந்தேன்.........

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இலா, ஆமி, உ மாமி, ஷேக் அண்ணா, தவமணி சார், காணாமல் போய் திரும்பி கிடைத்த நம்ம ரம்யா அவர்களுக்கும் மற்றும் அனைத்து அறுசுவை நண்பர்களுக்கும் எனது இனிய இலா, ஆமி, உ மாமி, ஷேக் அண்ணா, தவமணி சார், காணாமல் போய் திரும்பி கிடைத்த நம்ம ரம்யா அவர்களுக்கும் மற்றும் அனைத்து அறுசுவை நண்பர்களுக்கும் எனது இனிய காலை வணக்கம்

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்