அறுசுவை தளத்தின் அருமை

ட்ரெய்னில் நேற்று வந்து கொண்டிருந்தபோது பக்கதிலிருந்த ஒரு நபர்(இப்போது எனது நண்பர்-அவரது பெயர் முருகன்)பேசிக்கொண்டுவந்தார்.கம்ப்யூட்டர் பற்றி பேச்சு வந்தபோது அறுசுவையை பற்றி சொன்னேன்.எனது கதைகளை பற்றியும் சொன்னேன்.நீங்கள்தானா அந்த சேக் என்று ஆச்சர்யமாய் கேட்டார்(அவர் அப்படி கேட்டது எனக்கும் ஆச்சர்யம்தான்)
அதைவிட்டு வீடுவந்து அலுவல் முடித்து கம்ப்யூட்டர் ஓப்பன் பன்னிபார்த்தேன் அப்போதுதான் "சென்னை கெட் டூகெதர்,பார்த்தேன்.பிறகு அதில் குறிப்பிட்டிருந்த நம்பரில் பாபு அண்ணாவை தொடர்பு கொண்டு பேசினேன்."பேச்சுக்களின் நடுவே நேற்று உங்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்(ஆனந்தம் இன்னும் அதிகமானது)என்றார்.யோகரானி மேடம் என்னை பார்க்கவிரும்பியதாய் சொன்னார்.அவரை மட்டுமின்றி அங்கு வந்திருந்த அனைவரையும் மிஸ் பன்னிவிட்டேன்.குறிப்பாக பாபு அண்ணாவை.
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா என்ன??

ஒரு வாரம் தங்கி கெட் 2 கெதர்ல பங்கெடுதுக்கலாம்னு நெனச்சேன்.ஹும்....

”நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.................’’

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

உங்க மாதிரிதான் நாங்களும். கெட் டு கெதரை ரொம்பவே
மிஸ் பண்ணிட்டோம்.

ஷேக், (அப்படிக்கூப்பிட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்க நினைக்கரேன்)கவலைப்படாதீங்க.மனசத்தேத்திண்டு அடுத்தமுறை கெட்டுகதர்ல போய் எல்லாரயும் பார்த்துக்கோங்க.என்னாலதான் முடியாது, ம்ம்ம்..... அப்பொவாவது போட்டோ எடுத்து அனுப்புங்க, பாத்து த்ருப்தி பட்டுக்கரோம்

ஹலோ ஷேக் அண்ணா,
எப்படி இருக்கீங்க, இந்த மாதிரி ஒரு வலையில் நானும் உறுப்பினர் என்பதில் பெருமையாக உள்ளது. நான் இது வரை அறுசுவையில் யாரையும் பார்த்ததில்லை, கெட் 2 கெதர் போட்டோவாவது அனுப்புங்க

அன்புடன்
பவித்ரா

பவித்ரா ஸிஸ்டர்.நானே அங்க போக முடியலைனு வருத்தத்துல இருக்கேன்.நீங்க போட்டோவ அனுப்பச் சொல்ரிங்க??எனக்கும் பார்க்க ஆசைதான்.(அது ஆச தோச அப்ல வடை ஆஹி விட்டது)

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ப்ரியா மேடன் உங்களால சென்னை வரமுடியாதா?அப்படி ஒரு கெட்டுகெதெர் இருந்தால் வர முயற்சி பன்னுங்க.முயற்சி திருவினையாக்கும்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

சாரி அண்ணா,
நானும் அட்மின்கிட்ட போட்டோ பத்தி பதிவு போட்டேன், ஆனா இன்னும் வரவில்லை, அதான் உங்ககிட்ட கேட்டேன்.

அன்புடன்
பவித்ரா

கோமு மேடம்.டோன்ட் வொரி.அடுத்த கெட் டுகெதர்ல நாம் எல்லோரும் மீட் பன்னலாம்.ஒகே.உங்க அடுத்த கதை என்னாச்சு?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

எதுக்கு பவித்ரா சாரி பூரி எல்லாம்...??பரவாயில்லை.ஒக்கே.அப்புறம்?நீங்க கதை எழுதுறாப்புல ஏதும் ஐடியா இருக்கா?நான் உங்கள் கதைகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

கதையா அதுவும் நானா, நானே ஒரு கவிதை, எனக்கு எதுக்கு கதையெல்லாம், (எழுத தெரியாது என்பதை இப்படியும் சொல்லிக்கலாம்), நீங்க ரொம்ப எதிர்பார்ப்பதால், அட்மின்க்கும் ஒகேன்னா, வேற எதாவது புக்ல வற கதைய அப்படியே காப்பி அடிச்சிடுரேன். ஹி ஹி ஹி

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்