நாளை (23.07.2010) எங்கள் ஊர் கோயில் தேர் வீதி உலா வருகிறது. கோயில் தேர் வீதி உலா வரும் போது பூஜைக்கு என்னென்ன பொருட்கள் வைக்க வேண்டும்? பட்டு சாத்துவது போன்ற வேறென்ன சம்பிரதாயங்கள் செய்யலாம்? Please reply me soon friends.
நாளை (23.07.2010) எங்கள் ஊர் கோயில் தேர் வீதி உலா வருகிறது. கோயில் தேர் வீதி உலா வரும் போது பூஜைக்கு என்னென்ன பொருட்கள் வைக்க வேண்டும்? பட்டு சாத்துவது போன்ற வேறென்ன சம்பிரதாயங்கள் செய்யலாம்? Please reply me soon friends.
லலிதா
லலிதா
எனக்கு இது பற்றி தெரியல!
காத்திருங்க, தெரிஞ்சவங்க கண்டிப்பா பதில் சொல்லுவாங்க!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
லலிதா
எங்க ஊரில் தேர் வரும் போது நாங்கள் செய்தவை, பழங்கள்(ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம்), மல்லிகைப்பூ மாலை, பட்டு துணி. அர்ச்சனைக்கு தேவையான பூ வாழைப்பழம், தேங்காய், சூடம், ஊதுபத்தி.
இது தவிர தேர் வரும் போது அதில் உதவியாளர்களாக வருபவர்களுக்கும் பார்க்க வருபவர்களுக்கு எலுமிச்சை ஜூஸ், பானகம், தண்ணீர் பாக்கெட் இதைப் போல் கூட கொடுக்கலாம்.
தேர் வீதி
பழம், சூடம், பட்டு துண்டு / பாவாடை, வெற்றிலை பாக்கு, மாலை, எலுமிச்சை இது தான் சாதாரணமாக வைப்பது (சைவ சமயத்திற்கு குறிப்பாக அம்மனுக்கு) வைணவம் மாக இருந்தால் கல்கண்டு, உலர்ந்த பழங்கள், பருப்புகள் வைக்கலாம். தேரை வடம் பிடித்து வருபவர்கள் இளைப்பாற பானங்கள், பழங்கள் வழங்கலாம்.
நட்புடன்
நாகை சிவா
"Follow your heart and your dreams will come true."
தேர் வீதி
தேங்காய் விட்டு போச்சுங்க :)
நட்புடன்
நாகை சிவா
"Follow your heart and your dreams will come true."
தேர் வீதி
பதிலளித்த அனைவருக்கும் நன்றி. பொங்கல், கடலை, அவள் மற்றும் குளிர் பானம் தவிர இலகுவாக செய்யககூடிய ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்.
Lalitha
லலிதா
நான் சொல்ல நினைத்தை எல்லாம் மற்றவர்கள் கொடுத்துட்டாங்க. பொங்கல், கடலை, அவல், குளிர்பானம் இதைதவிர வேற என்னா எளிதானதுன்னு எனக்கு தெரியல மேடம். நீர் மோர் கொடுக்கலாமே. நீங்கள் விரும்பினால் அன்னதானம் கூட செய்யலாம்.
dates kodukalam
dates kodukalam
லலிதா.
.
பானகம்,எலுமிச்சை ஜுஸ்,கொடுக்கலாம்
radharani