முச்சுபிடிப்பிற்கு (வாயுப்பிடிப்பு) யாராவது வைத்தியம் தெரிந்தால் சொல்லுங்க பா. என் மாமனார் முச்சுப்பிடிப்பினால் முதுகுப்பக்கம் வலிக்கிறது என்று கூறுகிறார். என்ன செய்யவேண்டும். பூண்டு சேர்த்துக் கொடுத்திருக்கிறேன். வேறு ஏதேனும் மருந்து உள்ளதா? உதவி தேவை
இப்படிக்கு
ராதா ஹரி
மூச்சு பிடிப்பு பெருங்காயம்
மூச்சு பிடிப்பு
பெருங்காயம் சிறிது அளவு எடுத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு 1 டம்ளர் ஆக வற்றும் வரை செய்து பெருங்காயம் நன்கு கரைந்ததும் அதை வடிகட்டி குடிக்கவும். நான் கர்ப்பமாக இருக்கும் போது உருளைகிழங்கு அல்லது வாயு சம்பந்தமான் பொருள் சாப்பிட்டு அவஸ்தை பட்டால் நான் செய்யும் உடனடி மருத்துவம் இது, நல்ல பலன் தரும். முயற்சித்து பாருங்கள். குடி தண்ணீர் கொதிக்க வைக்கும் போது சீரகம் போட்டு கொதிக்க வைக்கவும். அஜீரணகோளாறுகள் அண்டாது. பசியை தூண்டும்.
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
மூச்சு பிடிப்பு
try this and reply soon.
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
பாத்திமா
மிக்க நன்றி பாத்திமா
நானும் யாரேனும் பதில் கூற மாட்டார்களா என்று தான் எதிர்பார்த்திருந்தேன். மிக்க நன்றி. கண்டிப்பாக செய்து கொடுக்கிறேன். பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும் அப்படித்தானே. அது நன்கு கொதித்து 1 டம்ளா் ஆக வற்றும் வரை செய்து அதை குடிக்க சொல்கிறீா்கள். நான் புரிந்துகொண்டது சரியா?
இப்படிக்கு
ராதா ஹரி
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
நீங்கள் புரிந்து கொன்டது சரி தான்.
நீங்கள் புரிந்து கொன்டது சரி தான். 2 டம்ளர் நீரில் பெருங்காய கட்டி சிறிது சேர்த்து நன்கு கொதித்து பெருங்காயம் கரைந்து 1 டம்ளர் ஆக வற்றியதும் வடிகட்டி கொடுக்கவும். கொஞ்சம் சூடாக குடித்தால் நல்லது.
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
பாத்திமா
என்னிடம் கட்டி பெருங்காயம் இல்லை. அதனால் பெருங்காயப்பொடி உபயோகிக்கலாமா?
இப்படிக்கு
ராதா ஹரி
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
no problem.
no problem. you may use Asafoedita powder. But you should filter that.
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
பாத்திமா
ஓகே நன்றி. தாங்களிடம் பேசினது ரொம்ப சந்தோஷம். இந்த ராதா வை தோழியா ஏத்துப்பீங்களா?
இப்படிக்கு
ராதா ஹரி
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
என்ன கேள்வி இது? வாங்க ரெண்டு
என்ன கேள்வி இது? வாங்க ரெண்டு பேருமா சேர்ந்து அறுசுவைய ஒரு வழி பண்ணிடுவோம். :)
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
ரா....ரா.. ராதா!
உ
சுக்குபொடிய நன்னா வென்னீர்ல போட்டு கொதிக்க வெச்சு வடி கட்டி குடிச்சு பாருங்கோ!அப்பறம் சித்தா கடைல பிண்ட தைலம்னு கேட்டா தருவா. அதை வலி இருக்கற எடத்ல சூடு பறக்க தேய்ங்கோ!சரியாயிடும்.
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
ராதாஹரி
அன்பு ராதாஹரி
எல்லா இழையிலும் கலக்கறீங்க, ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
நிறைய வெள்ளைப் பூண்டு (15-20) உரித்து, நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கி, சாப்பிடக் கொடுங்கள், கொஞ்ச நேரத்தில் நிறைய ஏப்பம் வரும், வலியும் குறையும்.
ஸ்ப்ரைட், செவன் அப் போன்ற சோடா வகைகள் பிடிக்கும்னா, அதுவும் குடிக்கலாம்.
ஹாட் பாக் ல வென்னீர் நிரப்பி, ஒத்தடம் கொடுக்கலாம்.
அன்புடன்
சீதாலஷ்மி
அன்புடன்
சீதாலஷ்மி