இரத்த மூலம்

அன்பான தோழிகளே ! இரத்த மூலத்திற்க்கு வீட்டு கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள். உடல் சூட்டை விரட்டும் வழியையும் சொல்லுங்கள். உங்களுக்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்.

கல்பனா

நத்தை சாப்பிட்டால் குணமாகும் என என் அக்காவுக்கு சித்த வைத்திய மருத்துவமனையில் சொன்னார்கள்.

காரம் அதிகமா சேக்க கூடாது.....

தேங்காய்(இளநீர்) நீர் குடிக்க வெட்டுவது போல் மேல் உள்ளதில் சிறு துளையிட்டு அதில் வெந்தயம் போட்டு மாடியில் வைத்துவிடுங்கள். பனி காத்து பட்டு,வெந்தயம் ஊறியதும் காலையில் வெறும் வயிற்றில் அந்த இளநீரை,வெந்தயத்துடன் குடிக்க வேண்டும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அன்பு தோழி அமீனா ரொம்ப நன்றி பா. அமீனா இருக்க பயமேன். நான் இளநீர் வைத்தியத்தை செய்து பார்த்து உங்களுக்கு பதில் சொல்கிறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால், உங்களுடைய மெயில் ஐடி தரமுடியுமா? நீங்கள் சாட்டிங் வருவீர்களா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரத்தமூலத்துக்கு பெஸ்ட் மருந்து சின்ன வெங்காயம்தான்.
அதாவது சாம்பார் வெங்காயம்னு சொல்வாங்க. அதை
ஒருகைப்பிடி எடுத்து, தோல் நீக்கி, கொஞ்சம் நெய் விட்டு
நன்கு வதக்கி துளி உப்பு மட்டு சேர்த்து சாப்பிடுவதற்குமுன்பு
முதலில் அந்த வெங்கயத்தை சாப்பிட்டு வரனும்.குறைந்தது
40- வது நாளில் நல்ல பலன் தெரியும். ட்ரை பண்ணி பாருங்க.

கல்பனா
சாட்டிங்’க்கு நான் வரத விட அருசுவைக்கு வரும் நேரங்கள் தான் அதிகம்.
நீங்க சாட்டிங் வந்தாலும் பேசமுடியாது. காலைல ரம்யா வாங்குனாங்க!
வந்தவங்கள கூட அருசுவைக்கு வர சொல்லிட்டேன். நாம் இங்கேயே பேசுவோமே!

உங்களுக்கு இன்னும் அதிகமான தகவல் தர முடிந்தால் சொல்கிறேன்.

நான் சொன்ன முறையை வாரம் ஒருமுரை விடாமல் செய்யுங்கள்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தோழி கோமு, உங்களோட பதிலுக்கு மிக்க நன்றி. ஆனால் நாங்கள் இருக்கும் (காங்கோ) இடத்தில் சின்ன வெங்காயம் இல்லை பா. ஃரெண்ட்ஸ் யாராவது இந்தியா போனால் வாங்கி வரச்சொல்லி நீங்கள் சொன்னது போல் செய்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சரி பா அமீனா, நாம அறுசுவைலயே பேசிக்கலாம். தகவல் வேண்டுமென்றால் மட்டும் உங்களுடன் பேசுவேன் என்று தவறாக நினைக்க கூடாது. நல்ல தோழிகளாக பேசலாம் அல்லவா? கண்டிப்பாக நீங்கள் சொன்னது போல் வாரம் ஒரு முறை விடாமல் செய்கிறேன். உங்களின் அன்பான அறிவுரைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி அமீனா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மெகா டீவியில் பெண்கள்.காம் நிகழ்ச்சியில் இது பற்றி நிறையா டிப்ஸ் சொன்னாங்க!
அதுல ஒன்னு தான் அந்த இளநீர் பற்றியது!

கோமு சொன்னதும் அதில் இடம் பெற்றிருந்தது!

சித்தவைத்தியத்துல தான் குணமாகும் என்று சொல்கிறார்கள்

நன்றிலாம் தோழிகளுக்குள் கூடாதே கல்பணா:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அமீனா நீங்க மெகா டீவி பார்க்கறது எங்களுக்கெல்லாம் எவ்வளவு உபயோகமா இருக்கு பா. எங்களுக்காகவே தொடர்ந்து பெண்கள்.காம் நிகழ்ச்சிய தொடர்ந்து பாருங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா மேடம்,
எங்கேயோ படிச்சு எழுதி வைத்து இருந்தது உங்களுக்கு உதவுமா பாருங்க:
முதலில் நிறைய தண்ணீர் குடிங்க
உணவில் பால்,தயிர் ,மாதுளை,காரட் ,மஞ்சள்,வெள்ளை முள்ளங்கி,வாழைபழம்,எள்ளு ,அத்திபழம் சேர்த்துகோங்க எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவாக சாப்பிடுங்க
சீரக தண்ணீர் மட்டும் குடிங்க
மோரில் பொடித்த இரண்டு மிளகு,ஒரு சிட்டிகை சுக்கு,கல் உப்பு சேர்த்து வெறும் வயிறில் குடிக்கலாம்
கால் ஸ்பூன் கடுகை 2 ஸ்பூன் தயிரில்
தயிரில் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்து கடித்து சாப்பிட வேண்டும் பின்பு மோர் குடிக்க வேண்டும் இதை தொடர்ந்து செய்ய வேண்டும்
புதினா ஜூசில் தேன் விட்டு குடிங்க
சீக்கிரமாக உங்கள் நோய் குணமாக ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பு தோழி கவிதா, நீங்கள் எங்கேயோ படித்ததை ஞாபகம் வைத்துக்கொண்டு இங்கே எனக்காக பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. எனக்காக ஆண்டவனை பிராத்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. நீங்கள் சொன்னவற்றை செய்து பார்க்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்