மரவள்ளிக் கிழங்கு அடை

தேதி: April 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மரவள்ளிக் கிழங்குத் துருவல் - 4 கப்
புழுங்கரிசி - ஒரு கப்
பச்சரிசி - ஒரு கப்
மிளகாய் வற்றல் - 12
சோம்பு - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

அரிசி வகைகளை போதுமான தண்ணீரில் சுமார் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு நீரை இறுத்து மரவள்ளித் துருவல், மிளகாய் வற்றல், சோம்பு, உப்புடன் நன்கு அரைக்கவும்.
அரைத்த மாவினை சுமார் 4 மணி நேரம் வைத்திருந்து பிறகு அடையாக சுடவும்.
தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இதில் அடை என்பது, வடைபோல பொரிக்க வேண்டுமா? அல்லது பகோடாபோல் பொரிப்பதா? அல்லது ரொட்டியாகச் சுடுவதா? கொஞ்சம் கெதியாகப் பதில் தந்தால் நல்லது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்புள்ள அதிரா!

அடை என்பது தோசைக்கல்லில் தோசை சுடுவதுபோல-ஆனால் சற்று மொத்தமாக மாவைப் பரத்தி எண்ணெய் சுற்றிலும் கொஞ்சம் விட்டு, இரண்டு புறமும் தோசைபோல சுட்டு எடுப்பது.

மிக்க நன்றி. அரிசிவகை ஊறப்போட்டுவிட்டேன், இதற்குப் பதில் வந்துவிட்டதா எனப்பார்க்க வந்தேன். நாளைக்கு விபரம் சொல்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சுட்டிட்டேன் அடை!!!
மனோ அக்கா முதன் முறையாக அடை சுட்டுவிட்டேன். இங்கே எங்களுக்கு மா புளிப்பதில்லை(நீண்ட நாட்கள் எடுக்கும்). குளிர் அதிகம். இருந்தும் நான் ஹீட்டருக்கு பக்கத்தில் கிட்டத்தட்ட 8 மணித்தியாலங்கள் வைத்து எடுத்தேன். அப்பத்தின் வாசம் வந்தது. மரவள்ளி இனிப்புத் தன்மை என்பதால், இனிப்பான அடையாக இருந்தது. ஆனால் அடை, தோசைபோல் மென்மையாக வரவில்லை. அப்படித்தான் அடை இருக்குமோ? அல்லது மா புளித்தது காணாதோ தெரியாது. நல்ல சுவை, சட்னி தேவைப்படவில்லை சும்மாவே சாப்பிட்டு முடித்துவிட்டோம். மரவள்ளிக்கிழங்கில் மட்டும்தான் அடை செய்ய முடியுமோ?. நேற்று உடனேயே பதில் போட வந்தேன், நித்திரையாகிவிட்டேன். இப்போ இங்கு ஸ்கூல், ஈஸ்ரர் ஹொலிடே என்பதால் நினைத்தபடி எல்லாம் செய்ய முடிகிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த மரவள்ளிக் கிழங்கு அடையின் படம்

<img src="files/pictures/aa209.jpg" alt="picture" />

அன்புள்ள அதிரா!

மரவள்ளிக்கிழங்கு அடை சிவந்த நிறத்துடன் சிவப்பு நிறப்பின்னணியில் மிகவும் அழகாக இருக்கிறது!!

மனோ ஆன்டி, மரவள்ளி கிழங்கு அடை சூப்பர். நான் இரண்டு முறை செய்துவிட்டேன். நேற்று போட்டோ எடுத்து அட்மினுக்கும் அனுப்பியிருக்கிறேன். விரைவில் இங்கே இணைத்து விடுவார் என்று.

"இரு நூறு குறிப்புகளை தாண்டி விட்ட உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ஆன்டி"

மிகவும் சூப்பர் டேஸ்டான அடை என் கணவருக்கும் மிகவும் பிடித்திருந்தது,தேங்காய் சட்னியுடன் அருமை.குழந்தையும் விரும்பி சாப்பிட்டான்.இது போல் நிறைய சிம்பிளான மற்றும் வித்தியாசமான ரெசிப்பிஸ் நிறைய கொடுங்க. உங்களை போன்ற அனுபவமுள்ளவர்கள் கொடுப்பது என்னை போன்றோருக்கு உதவுகிறது.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. உமா(பாப்ஸ்) அவர்கள் தயாரித்த மரவள்ளிக்கிழங்கு அடையின் படம்

<img src="files/pictures/aa358.jpg" alt="picture" />

மரவள்ளிக் கிழ்ங்குஅடை சுவையாக இருந்ததறிய மகிழ்வாக இருந்தது. புகைப்படம் மிகவும் அழகாக இருக்கிறது. உங்களின் அன்பான பின்னூட்டத்துக்கு நன்றி!! முடிந்தபோதெல்லாம் நிச்சயம் சுவையான குறிப்புகள் கொடுக்கிறேன்.