பண்டிகை பலகாரங்கள்

அறுசுவை தோழிகளே ! பண்டிகை நாட்களில் என்னென்ன பலகாரங்கள் செய்து உங்கள் இல்ல உறுப்பினர்களை அசத்துவீர்கள். நீங்கள் அனைவரும் அதை இங்கே மற்ற தோழிகளுடன் பகிர்ந்து கொண்டால் அவர்களும் வரும் பண்டிகை நாட்களில் வித்தியாசமாக முயற்சி செய்து பார்க்க உத்வியாக இருக்கும்.

இது எங்கள் வீட்டு ஸ்பெஷல்ஸ் :

விநாயகர் சதுர்த்தி
வேர்க்கடலை கொழுக்கட்டை, தேங்காய் கொழுக்கட்டை, எள்ளுருண்டை, கருப்பு கொண்டை கடலை சுண்டல், சேமியா பாயாசம், உளுந்து வடை

தீபாவளி
முறுக்கு, எள்ளடை, குலோப் ஜாமுன், மைசூர் பாகு, தேங்காய் பர்பி, டைமண்டு கேக், வெல்ல அதிரசம், சர்க்கரை அதிரசம், சோமாஸ், முந்திரி பர்பி.

கார்த்திகை தீபம்
எள்ளுருண்டை, கம்புருண்டை, சோள பொரி உருண்டை, அவல் உருண்டை, மாவிளக்கு, வெல்ல வடை, மசாலா வடை, சங்கு பாயாசம்

பொங்கல்
சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், இனிப்பு வடை, மசால் வடை, பாசிப் பருப்பு பாயாசம்

தமிழ் வருட பிறப்பு
பருப்பு போளி, தேங்காய் போளி, கேசரி, மசால் வடை

இது தவிர நடுவில் வரும் அமாவாசை, கிருத்திகை ஐட்டங்களை நான் இங்கே சேர்க்கவில்லை.

தீபாவளி பண்டிகைக்கு பலகாரங்களை நாங்கள் சாப்பிடுகிறோமோ இல்லையோ, இங்கே எங்களுக்கு கிறித்துவ, முஸ்லீம் நண்பர்கள் அதிகம். அவர்களும் அவர்களுடைய பண்டிகைக்கு அப்படித்தான் தருவார்கள். அதனால் போட்டி போட்டுக்கொண்டு செய்து தருவோம்.

என்ன தோழிகளே நீங்களும் லிஸ்ட்டு போட தயார் ஆகிட்டீங்களா?

ஹாய் கல்பனா,

கலக்கிட்டீங்க போங்க, இவ்வுளவு ஆயிட்டமா, கலக்குரீங்க.... enda oru neega.. enga veetla.. oru kozhukatti.. pongal.. sweet avalutha.. entha area'yanum sonnegana.. i wl shift my home near to your house.. kalpana..

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

நான் ரம்ஜான் பற்றி மட்டும் சொல்றேன்.

காலை- வெங்காயப்பணியாரம்,பூரி, உளுந்தவடை,காரபோண்டா,மக்ருணி, சீப்புபணியாரம், கேசரி

மதியம்
மட்டன் பிரியாணி,(தலை முதல் கால் வரை என்னன்ன முடியுமோ, அதையெல்லாம் ஒவ்வொரு வெரைட்டில பன்னுவோம்), சாதா சோறு, ரைதா, தாளிச்சா

மாலை
பஜ்ஜி, வடை, பாஸ்மதி ரவா கீர்,

இரவு
மயக்கத்துல தூங்கிற்வோம். பசிக்கிறவங்களுக்கு புரோட்டா, வெஜ் சால்னா,

இது போக அடுத்த நாள் ஆட்டுக்கால் சூப்......

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நோன்புல காலங்காத்தாலேயே யாராவது காரபோண்டா சாப்பிடுவாங்களா என்ன?
கதை வுடுறுதுக்கு ஒரு அளவு வேண்டாமா?இப்படியா காரசாராம கதைய அள்ளிவிடுறது. நோன்புங்க்ற பேர்ல இப்படி வகை வகையா வச்சு மாட்டுறது.
வீட்டுல பெரும்பாலான நேரங்களை இப்படி பட்டியலிட்டு படையல் செய்வதில்தான் போக்குவீர்களோ. யார் சொன்னா இந்தியா வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள நாடு என்று. சாப்பாட்ல கொஞ்சம் நிதானம் தேவை ஆமினா, இப்படி வகை வகையா வச்சு மாட்டிட்டு, அப்பறம் இங்கே வந்து முதுகு புடிப்புக்கு வைத்தியம் என்ன? அஜீரன கோளாறுக்கு எதாவது வழி இருக்கானு விழி பிதுங்கி வந்து நிக்ககூடாது.
புரியுதா?
அன்புடன்
ஆஷிக்

ஆஷிக்

நான் நோன்பு நேரத்தில் என்று சொல்லவில்லையே!

ரம்ஜான் பண்டிகையன்று இப்படி தான் சாப்பிடுவோம் (கூட்டு குடும்பத்தில் மொத்தம் 25 பேர் இருக்கோம்)

அதுக்கு தான் அடுத்த 7 நாள் மறுபடியும் நோன்பு வைப்போமே!

முதல் அரட்டையே ஆமினா கூட வம்பா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

என்ன தான் நாங்க(என்னை மட்டுமே குறிப்பிடுகிறேன் ) பிரியாணி செஞ்சாலும் உங்க பிரியாணி முன்னாடி நிக்க முடியாது. i லைக் ur பிரியாணி

சகோதரர் ஆஷிக் அவர்களே, நாங்கள் இப்படி பட்டியலிட்டு படையல் போட்டதில் ருசிப்பவர் முதல் ஆள் நீங்களாக தான் இருப்பீர்கள். உங்க வீட்டு அம்மாவை கேட்டால் தெரியும். ;)) நாங்கள் தினமும் செய்வதை பட்டியல் இடவில்லை, பண்டிகை காலத்தில் செய்வதை தான் பட்டியல் இட்டிருக்கிறோம். நாங்கள் உணவில் நிதானமாக இருப்பதால் தான் உங்களுக்கான பணிவிடைகளை செய்ய முடிகிறது. இல்லாமல் போனால் நீங்கள் தான் எங்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்.

நாம் தீபாவளி, கிறித்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளை கொண்டாடாமல் விடுவதால் ஒன்றும் நம் நாடு வறுமைகோட்டுக்கு மேலே போய் விடாது. ஒருவன் எவ்வளவுதான் பரம ஏழையாக இருந்தாலும் அவனுக்குரிய அந்த பண்டிகை நாள் கொண்டாட்டத்தை கடன் பட்டாவது அவனுடைய மனைவி, மக்கள் சந்தோஷத்திற்காக கொண்டாடுவான்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேடம், 100% correct :) கண்டிப்பா கண்டிப்பா, நீங்க சொல்றதை எல்லாத்தையும் மனப்பூர்வமா ஒத்துக்கிறேண். நான் ஆமினாகிட்டே பேசுறதையெல்லாம் கணக்குல எடுக்காதீங்க, ஒரு ரிலாக்சேஷனுக்காக அதுகிட்ட சும்ம எதையாவது வம்புக்கு பேசுவேன். மற்றபடி நீங்கள் சொல்வதை நான் மறுக்கவில்லை
அன்புடன்
ஆஷிக்

ஆஷிக் , முதலில் நீங்க மேடம்னு கூப்பிடறத விடுங்க. உங்க சகோதரியையோ, தோழியையோ இப்படிதான் மேடம்னு கூப்பிடுவீங்களா? எனக்கு வயசாக்கி பாக்குறதுல உங்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியல :( நானும் உங்களை சும்மா கலாய்ச்சேன் அவ்வளவு தான். எனக்கும் தெரியும் அமீனாவை ஒரு நாளாவது வம்புக்கு இழுக்கலனா உங்களுக்கு தூக்கம் வராதுனு.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனக்கு உங்கள தெரியாதுல்ல, அதான்.
என்ன இப்ப தங்கச்சினே சொல்லிட்டு போரேன்,
என்ன குறைஞ்சிர போகுது,
அன்புடன்
ஆஷிக்

இது ஆஷிக் அண்ணாவுக்கு அழகு :))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்