அரட்டை 2010 பாகம் 3

தங்கம் விலை ஏறுதோ இல்லையோ அதைவிட பாஸ்ட்டா நம்ம ‘அரட்டை 2010 பாகம் 2’

2 நாள்ல 150 பதிவை தாண்டிருச்சு :)

இலா எனக்கிட்ட கட்டளையின் பேரில் புது இழை தொடங்கிவிட்டேன்.

வழக்கம் போல் உங்கள் ஆதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இந்த இழையை தூங்க வச்சுறாதீங்க (ஆமினா தொடங்குன எந்த இழையும் 10பதிவுக்கு மேல் தாண்டாது:(

இலா வரவரைக்கும் ஒத்துழைப்பு தாருங்கள்..........

எல்லாரும் ஒரு நிமிஷம் இங்கே வாங்க......

புது இழை தொடங்கியாச்சு.......

இனி உங்க அரட்டையை இங்கே தொடங்குங்க.......

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கலக்கறீங்க போங்க, ஒரு நாளைக்கு ஒரு பாகம் ஓவர், காத்து உங்க பக்கம்தான் பயங்கரமா அடிக்குது போல

அன்புடன்
பவித்ரா

இப்பதான் அங்கே பாகம் 2 ல ஒரு பதிவு கொடுத்துட்டு வர்றேன், அதுக்குள்ள இங்கே பாகம் 3 தொடங்கியாச்சா.

நானே நானா யாரோதானான்னு என்னை நானே கேட்டுக்கறேன், இந்த அளவுக்கு அரட்டைல நான் பதிவு கொடுத்ததே இல்லைப்பா.

அன்புடன்

சீதாலஷ்மி

உங்களுக்கு முன்னாடி பதிவு போடக்கூடாதேன்னு நினைத்தேன், பாத்தா இழையே நீங்கதான் தொடங்கியிருக்கீங்க, சரியாபோச்சு போங்க, பெண்கள் ஜாஸ்தி பேசுவாங்கன்னு சொல்லறது 100% உண்மை

அன்புடன்
பவித்ரா

வாங்கோ.வாங்கோ.........

சீதா மேம், உங்களையும் எங்க அரட்டை இழுத்துற்ச்சு பாத்தீங்களா?

அதான் இலா ஆரம்பித்த அரட்டை 2010ன் மகிமை.......

பவி-

போன அரட்டை மாறி 180க்கு போன பிறகு வேறு இழை தொடங்கலாம்னு நெனச்சேன்.

(இலா மேல் உள்ள பயத்தால்).

முதல்முறை கொடுத்த வேலையை செய்யலன்னா ஆமி பேர் கெட்டு போய்டும். அதான் தொடங்கிட்டேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஓகே, நான் கிளம்பறேன்
நாளைக்கு பாக்கலாம், குட் நயிட்

அன்புடன்
பவித்ரா

ஆமி, ஷேக் அண்ணா, வனி அக்கா, இலா அக்கா, செந்தில் அண்ணா, உ மாமி, சுந்தரி அக்கா, எல்லாம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க, யார்கிட்ட இருந்தும் பதிவையே காணோம், எதாவது சொல்லுங்க

அன்புடன்
பவித்ரா

நீங்க தான் குட்நைட் சொன்னவங்களாக்கும்?!

போறேன்னு சொல்லிட்டு இன்னும் என்ன அரட்டை?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேடம், வந்துட்டோம்ல, ஆஹா 3 நாள்ள 3வது பாகம் ரிலீஸ் பண்ணியாச்சா, எங்க மேடம், மாமி பதிவ போட்டாங்களா, அப்பாடா. இதிலாவது மாமிய முந்திடனும். நன்றி.
தாயிற் சிறந்த கோயிலுமில்லை.

அன்புடன்
THAVAM

அரட்டை பாகம் 2 படிக்கவே இன்னிக்கெல்லாம் டைம் போய்ருச்சு அதனால என்னால பதிவு குடுத்து அரட்டை அடிக்க முடியல, அதனால நாளைக்கு வந்து அரட்டை அடிக்கரேன் இப்ப கெளம்பரேன்..... எல்லாருக்கும் நாளைய தினம் இனிய நாளாக இருக்க மனதார வேண்டிக்கொள்கிறேன்.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்