பீன்ஸ் கோதுமை அடை

தேதி: July 24, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (9 votes)

நீரழிவு, அதிக உடல் எடை, ரத்தகொதிப்பு, இருதய நோய் உள்ளவர்கள் கோதுமையை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். என்னுடைய டயட்டீஷியன் தோழி தந்த குறிப்பு இது.

 

பீன்ஸ் - 100 கிராம்
வெங்காயம் - ஒன்று
வெங்காயத்தாள் - ஒன்று
கோதுமை மாவு - ஒரு கப்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
உளுந்து - 3 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 3 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
தோசை அல்லது இட்லி மாவு - ஒரு கரண்டி


 

முதலில் பீன்ஸை பொடியாக நறுக்கி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். வெங்காயம், வெங்காயத்தாள் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
தோசைகல்லில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுந்து, சேர்த்து வதக்கவும்.
பருப்புகள் பொன்நிறமானதும் அதனுடன் வெங்காயம், வெங்காயத்தாள் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின்பு வதக்கிய பொருள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, தோசைமாவு ஆகியவற்றை கோதுமை மாவுடன் சேர்த்து கலக்கவும்.
அவற்றில் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து காய்ந்ததும் தீயை சிம்மில் வைத்து அடை போல் ஊற்றி நன்கு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
தேவையெனில் அடையில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி எடுக்கவும். இப்போது சுவையான, ஆரோக்கியமான பீன்ஸ் கோதுமை அடை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பு கவிதா,

உங்க குறிப்புகள் நிறைய நான் செய்திருக்கிறேன்ப்பா.எல்லாம் ரொம்மவே வித்யாசமாகவும்,சுவையகாவும் இருக்கும்ப்பா.இந்த பீன்ஸ் கோதுமை அடை ரொம்ம சூப்பர்ப்பா.என் கணவரிடம் பாராட்டு கிடைத்தது. நன்றிப்பா

அன்புடன்,
மாணிக்கவள்ளிஅமர்நாத்


நான் கோதுமை மாவில் தோசை,சப்பாத்தி செஞ்சுருக்கேன்.ஆனா அடை செஞ்சதில்ல.

செஞ்சு பாத்துட்டு ஒங்களுக்கு சொல்றேன்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கவிதா,
குறிப்பும் நன்றாக இருக்கிறது. ஸ்மைலியும் அழகாக இருக்கிறது. ;)

‍- இமா க்றிஸ்

மாணிக்கவல்லி மேடம்,
உங்கள் பின்னூட்டத்திற்கும்,பாராட்டிற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

இமா மேடம்,
உங்கள் பின்னூட்டத்திற்கும்,பாராட்டிற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

மோகனா மாமி ,
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி
கண்டிப்பாக செய்து பாருங்க

என்றும் அன்புடன்,
கவிதா

பீன்ஸ் கோதுமை அடை ரொம்ப நல்லா இருந்தது.
குறிப்பை பார்த்ததுமே செய்து பார்த்து விட்டுத்தான்
பதில்போடனும்னு இருந்தேன். பாராட்டுக்கள்.

கோமு மேடம்,
செய்து பார்த்து விட்டு சொன்னதற்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா