இது தவறா சரியா

ஹாய் தோழீஸ் எனக்கு ஒரு வருத்தம். நீங்கள் யாராவது கனவரை பெயர் சொல்லி அழைப்பது உண்டா. நான் திருமணம் முடிந்ததில் இருந்து என் கனவரை பெயர் சொல்லி தான் அழைப்பேன். ஆனால் இப்போது என் பக்கத்து வீட்டில் ஒரு பென் இருக்கிறாள். அவளின் அம்மா அவளின் டெலிவரிக்காக இங்கு வந்து இருகிராங்க. அவங்க வந்த முதல்நாளே என்னிடம் உன் கன்வரை நீ பெயர் சொல்லி அழைக்க கூடாது., இது சரி அல்ல, நான் மூன்று மாதம் இங்கு இருப்பேன். அதுக்குள்ள நீ இந்த பழக்கதை மாத்த வேண்டும் இல்லை என்றால் நான் மாற்றி விடுவேன் என்று அதடுராங்க. வந்த முதல் நாளே இப்படி என்ன அதிகாரம் செயராங்க. என்க்கு ரொம்ப கக்ஷ்டமா போச்சி. என்ன இப்படி பேசிராங்கனி. என் மனம் புன் படும்படி சொல்லிடாங்க. மெதுவா கூட சொல்ல. ஏதோ அவங்க வைத்த ஆள் மாதிரி சொல்ராங்க. கனவரை பெயர் சொல்லி அழைப்பது அவளவு பெரிய குற்றமா. சொல்லுங்கள் தோழிகளே.

ஹாய் இதுக்கெல்லாம் ஏன் கவலைப் படுறீங்க.. அது குற்றமெல்லாம் ஒன்னும் இல்லை.. நம் கலாச்சாரம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து பேசுவதுதான். அதனால் தான் அவர் அப்படி கூறி இருப்பார். உங்கள் கணவரைப் பெயர் சொல்லி அழைத்தாலும் அவரை வா போ என்று ஒருமையில் அழைக்காமல் மரியாதையாக வாங்க போங்க என்று அழைத்தால் அது ஒன்றும் வித்தியாசமாகத் தெரியாது..


அது ஒங்க உரிமை.இதுல தப்பு இருக்கறதா நேக்கு படல்ல.

அந்தம்மா அப்படி சொல்லரதுதான் தப்பு

அவா எந்த காலத்ல இருக்கா.?

ஆத்துகாரருக்கு அப்படி கூப்டா புடிக்கறதோல்யோ........

அவா பாட்டுக்கு சொல்லிண்டே இருக்கட்டும்.....

.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

சோனியா அதுல ஒன்னும் தப்பில்லை. கணவர் முன் பேச தயங்குவதும்,கணவர் பேரை சொல்ல மறுப்பதும் அந்த காலம். சொல்ல போனா கடவுளையே பேர் சொல்லி தான் கூப்பிடுறோம்.அது தப்பில்லையா?
அந்த காலத்துல 12 வயசுல ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும். அவளின் கணவருக்கு 25 வயசா இருக்கும். அதுனால அப்படி பெயர் சொல்லாமல் மரியாதையா சொல்லி கூப்பிட்டிருக்காங்க. இப்ப யாருக்கும் அந்த அளவுக்கு வயது வித்தியாசம் இருப்பதில்லை.

என் கணவரை பெயர் சொல்லி தான் அழைப்பேன்.ஆனால் மாமியார் வீட்டில் அப்படியே மாத்திவிடுவேன். பெரியவர்கள் மனம் புண்படாமல் இருக்க நீங்களும் அப்படி பழகி கொள்ளலாம்.ஆனால் சம்மதமே இல்லாமல் பக்கத்துவிட்டு அம்மா உங்களை அதட்டுவது ஒத்துக்கமுடியாத விஷயம். நீங்களும் ஒரு வார்த்தை அதட்டி பேசியிருந்தால் அந்த அம்மா அடுத்து வாயை திறந்திருக்க மாட்டார்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் தோழீஸ் பதில் தந்தமைக்கு நன்றி. நான் எப்போதும் பெயர் சொல்லி தான் அழைப்பேன், ஆனால் நீ வா போ அப்படி பேசமாட்டேன். நீங்க வாங்க போங்க இப்படி தான் அழைப்பேன். எனக்கு காதல் திருமணம் 4வருடம் காதலித்து அப்புரம் தான் திருமணம் செய்து கொண்டேன். சோ நான் பெயர் சொல்லி அழைத்தேன். பெற்றோர் பார்த்து வைத்தவரை திருமணம் செய்தால் நான் பெயர் சொல்லி அழைப்பேனா தெரியவில்லை, ஆனால் காதல் திருமணம் என்பதால் மிக அன்பாக பெயர் சொல்லி அழைப்பேன், என் கனவரும் அதை தான் விரும்புவார். ஆனால் அந்த அம்மா தான் இப்படி சொல்லிடாங்க, இதுல வேர சொல்லுராங்க பெயர் சொல்லி அழைத்தால் கனவரில் ஆயுல் குறையும் என்று, இதை நம்புரதா வேண்டாமா என்று புரிய வில்லை.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

நீங்க சொல்ரது சரிதான் அமினா. இதை என் வீட்டில் உள்ளவங்க சொல்லி இருந்தால் கூட என் மனம் இவ்வளவு பாதிக்க பாடாது. முன்ன பின்ன தெரியாத ஒரு நபர் பார்த்த முதல் நாளே எல்லா மத்திலும் அப்படி பேசினது என் மனதை ரொம்ப பாதித்து விட்டது., அதுவும் என் கனவரிடம் சொல்ராங்க. இனி இப்படி பெயர் சொல்லி அழைக்க விடாதிங்க இது சரி அல்ல அப்படி சொல்ல்ராங்க. இது நியாயமா சொல்லுங்க.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

என்ன சோனியா இதுக்கெல்லாம் போய் கவலைப் பட்டுக்கிட்டு. உங்கள் கணவருக்கு நீங்கள் அப்படி கூப்பிடறது பிரச்சினை இல்லேன்னா நீங்க பாட்டுக்கு அவரை வழக்கம் போல கூப்பிடுங்க. சிலர் அப்படித்தான் அவங்களால் ஏத்துக்க முடியாத விஷயங்கள மற்றவர் மீதும் திணிப்பாங்க.

ஆயுசு குறையும்னு சொல்றதெல்லாம் சும்மா டுபாக்கூர். வெளிநாட்டவர்கள் அவர்களது கணவரை பேர் சொல்லித்தான் கூப்பிடறாங்க. அவங்க எல்லாம் நல்லாத்தானே இருக்காங்க.

அந்த அம்மா மீண்டும் உங்களிடம் வற்புறுத்தினால் என் கணவருக்கு இதுதான் பிடிச்சிருக்கு அதனால நான் அப்படித்தான் கூப்பிடுவேன்னு சொல்லிடுங்க. அதுக்கப்புறமும் ஏதாவது சொல்லிக்கிட்டு இருந்தா வயசுக்கு மரியாதை கொடுத்து கண்டுக்காம போயிடுங்க அவ்வளவுதான்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சோனியா இது உங்கள் தவறு தான். அடுத்தவர்களை இந்த அளவுக்கு பேசவிட்டது மிக பெரிய தப்பு.

உங்களிடம் சொல்லுவது மட்டுமென்றால் அதை விட்டு விடலாம்.ஆனால் உங்கள் கணவரிடம் சொல்லியது மிகப்பெரிய தவறு. அது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சமம். இதே இடத்தில் நான் இருந்திருந்தால் ரெண்டில் ஒன்னு பாத்திருப்பேன். அவங்க முகத்துக்கு நேரே “நான் அப்படி தான் கூப்பிடுவேன். என் கண்வருக்கு அது தான் பிடிச்சுருக்கு. உங்க குடும்ப பிரச்ச்னை எதுவோ அதை மட்டும் பாருங்க” என ஒரு முறை சொல்லிடுங்க. இதில் ஏதும் குற்றமில்லை.

அடுத்தவர்களை நம் குடும்பவிஷயத்தில் நுழைய விடவே கூடாது.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி கவிசிவா. வயதுக்கு மூதவங்க கிட்ட எப்படி பதில் சொல்ரதுனி சொல்லாமல் விட்டுடேன். இப்போது என் கனவரை அழைக்க கூட பயமா இருக்கு.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

//இதுல வேர சொல்லுராங்க பெயர் சொல்லி அழைத்தால் கனவரில் ஆயுல் குறையும் என்று, இதை நம்புரதா வேண்டாமா என்று புரிய வில்லை.//

ஹேய் இதுல எந்த logical reason ம் இல்லை. அந்தக் காலத்தில் எல்லா நல்ல விஷயங்களையும் ஒரு பயம் மூலம் தான் மக்களிடம் ஏற்படுத்தினார்கள். அதன் விளைவுதான் இந்த "ஆயுள் குறையும் என்ற கதை".பெரியவர்களிடம் மரியாதையாக இருக்க வேண்டும் என்பது தான் நாம் எடுத்தக் கொள்ள வேண்டிய கருத்து.. உங்கள் கணவரிடம் மரியாதையாக இருக்கிறீர்கள் மேலும் உங்கள் கணவரே பெயர் சொல்லி அழைப்பதை விரும்பும் போது நீங்கள் ஏன் குழப்பிக் கொள்கிறீர்கள்..

அதுக்கப்புறமும் ஏதாவது சொல்லிக்கிட்டு இருந்தாஉங்கள் கணவர் என்ன நினைக்கிறார் என்பது தான் முக்கியம். அந்த அம்மா புரிந்து கொள்வது போல் தெரிய வில்லை எனில் free யாக விட்டு விடுங்கள்.அவரிடம் சரி என்று மட்டும் கூறி விடுங்கள். அதற்கு மேல்
புரிய வைக்கவே முயற்சிக்க வேண்டாம். else that will be mere waste of time..

ஹாய் சோனியா, ஆமினா சொல்வது மிக சரி. நானும் எனது கணவரை பெயர் சொல்லி தான் அழைப்பேன். ஆனால் மாமனார், மாமியார் முன் மரியாதையாக நடந்து கொள்வென். இந்த விஷயத்தில் நீங்கள் பககத்து வீட்டு காரருக்கு இவ்வளவு உரிமை கொடுத்தது ஆச்சரியமாக உள்ளது. பொதுவாக இப்பொது மட்டும் அல்ல எப்போதும் கணவன், மனைவி உறவில் பிளவு எற்படும் படி நடந்து கொள்பவரிடம் முக தாட்சன்யம் வேண்டாம்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

மேலும் சில பதிவுகள்