உதவி தேவை.

ஹாய் தோழீஸ் உதவி தேவை வாருங்கள். எனக்கு பன் செய்ய வேண்டும். அது எப்படி செய்வது என்று தெரிய வில்லை. பொதுகை டிவில ஒரு பென் ரொம்ப அழகா சொல்லி கொடுத்தாங்க, ஆனால் எனக்கு அது சரியா வரல. அவங்க சொன்னது போல தான் செய்தேன். உங்களுக்கு தெரிந்தால் சொல்லி தாருங்கள் ப்ளீஸ். பொதிகை டிவி யாராவது பார்பிங்களா. அந்த நிகழ்ச்சி எப்போது உண்டு என்று சொல்லி தாருங்கள். அப்புரம் ஜூஸ் பத்தி நிறைய சொல்லி கொடுத்தது அந்த பென். ஆனால் அப்போது என் மர மண்டைல ஏரல. இப்பம் என்ன பன்ரது தெரியல.

திரு அட்மின் அண்ணா உங்க கிட்ட ஒரு வேண்டுகோள். நீங்க காய்கறி லிஸ்ட்ல ஏன் முட்டைகோஸ் சேர்க்க வில்லை. தயவுசெய்து அதை சேர்க்க முடியும்மா. அதன் பிறகு தேடுக அதில எந்த டிஸ் பெயர் காய்கறி பெயர் அடித்தாலும் அதில் பதில் வரவில்லை, தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் அடித்து பார்த்து விட்டேன். என்னைபோல் சமயல் செய்ய தெரியாதவங்க என்ன காய்கறி இருக்கோ அதை தான் வைத்து தேடி பார்ப்போம். ஆனால் முட்டைகோஸில் நிறைய குறிப்பு இருக்கு அதையும் தனியாகா போட்டால் நல்லா இருக்கும். மற்றொரு வேண்டுகோள் எந்த குறிப்பு படத்துடன் விளக்க பட்டு இருக்கு என்று அந்த குறிப்பின் பக்கதில் ஒரு சின்ன அடையாலம் போட்டா நல்லா இருக்கும். யாரும் சமைக்கலாம் பகுதில் இருக்கு. இருந்தாலும் மற்ற குறிப்புகள் பக்கத்திலும் போட்டால் நல்லா இருக்கும், அதாவது ஒரு சின்ன சிம்பல். தவராக இருந்தா மன்னிக்கவும்.

எப்படி லெமன் ஜுஸ் செய்வது யாராவது சொல்லி தாங்க. அதன் பிறகு செட்ரிக் அசிட் போடுவதற்க்கு பதிலாக எந்த டிஸ்சாக இருந்தாலும் அதற்க்கு பதிலாக லெமன் விடாலாம. இது சரியா இதுவும் சொல்லி தாங்க.

அரட்டை அடிக்க மட்டும் கூப்பிட உடன் எல்லாரும் ஓடி வருவாங்க. ஒரு சந்தேகம் கேட்ட ஒருத்தரையும் கானாது. (சரி நீங்க திட்டுரது என் காதுக்கு கேட்கிரது. உனக்கு தினமுன் சந்தேகம் தான் வருது தீர்த்து வைக்கிரது எங்க புலப்பா போச்சினி சொல்ரது).சரி என்ன பன்ன ஒரு அப்பாவி பொன்னு சந்தேகம் எத்தனை முறை கேட்டாலும் சொல்லி தர தான் செய்யனும். இல்ல எல்லாரையும் இந்த அருசுவைல இருந்து 1நாளைக்கு தள்ளி வைத்துடுவேன். தள்ளி வைத்தல் என்பது என்ன என்று எல்லாரும் தெரியும் என்று நினைக்கிரேன். இருந்தாலும் ஒருக்க நினைவு படுத்துரேன். உங்க கூட ஆரும் பேச புடாது. ஆரும் விவாதம் பன்ன கூடாது, ஆரும் சண்டை போட கூடாது, ஆரும் இந்த பக்கமே வர கூடாது.புரிந்தா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

///****ஒரு அப்பாவி பொன்னு**** சந்தேகம் எத்தனை முறை கேட்டாலும் சொல்லி தர தான் செய்யனும். இல்ல எல்லாரையும் இந்த அருசுவைல இருந்து 1நாளைக்கு தள்ளி வைத்துடுவேன்./////

சோனி எனக்கு இதயமே அதிருது. நீ அப்பாவி போண்ணா? நீ இங்க இருக்குரதிலையே சுட்டீ பொண்ணு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*


கவல படாத சகோதரிரிரிரி...................

எல்லாரும் வந்துடுவா நோக்கு ஒரு நல்ல பதில தந்திடுவா.................

கவல படாத சகோதரிரிரி!...............................

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஹாய் சோனியா

எனக்கும் தெரியாது எப்படி பன் பண்றதுனு..... நம்ம அறுசுவை ல கிடைக்காதது எதுவும் இல்லை. நீங்க அறுசுவை ல right side ல வர்ற (நீங்க மன்றம் தவிர வேற எந்த பாகம் ஓபன் பண்ணினாலும் வகைகள், அசைவம், ஆரோக்கிய சமையல் அப்படின்னு எது வேணும்மனாலும் தேடி கண்டுகொள்ளலாம்) கேக் அல்லது பிஸ்கட் க்ளிக் செய்து பாருங்கள்.

http://www.arusuvai.com/tamil/recipes/48

அப்பறம் தேடுக பகுதி இன்னும் வேலை செய்யவில்லை. அறுசுவை புதிய இணையதளமா மாறியதால இந்த பகுதி வேலை செய்யல. அட்மின் அவா்கள் கூடிய சீக்கிரம் சரி செய்துவிடுவார்கள். அது வரை தயவுசெய்து தேடிக்கொள்ளுங்கள். ஜுஸ் செய்வதையும் அதே முறையில் கண்டு பிடிக்கலாம். பானம் என்று இருக்கும்.....

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹாய் ராதா ரொம்ப நன்றிபா. நீங்க ரொம்ப நல்லவங்க, அருசுவைல எல்லாரும் சொல்ராங்க 10வருடம், 15வருடம் சமயல் அனுபவம் இருக்குனி, ஆனால் ஒரு சந்தேகம் கேட்டால் யாரும் வந்து சொல்ல மாட்டாங்க. ஆனால் நீங்க ரொம்ப நல்லவங்க. நான் தேடி கண்டு பிடித்து பன் செய்தால். முதல்ல உங்க வீட்டுக்கு தான் அனுப்பி வைப்பேன். ஆனால் நான் நல்ல தேடி பார்த்தேன், பன் மட்டும் யாரும் செய்து போட வில்லை. என்ன பன்ன நானும் தேடி அலுத்து போய்டேன். இனி இந்த அருசுவைல உங்கள தவிர நான் யார் கூடவும் பேச மாட்டேன். நீங்க மட்டும் தான் என் ஃப்ரண்ட்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா

பொருள்-ல உங்க கூட கோபம்னு போட்டுட்டு.... என்னைப் போல நல்லவ யாருமே இல்லைனு சொல்லிட்டீங்களே... முதல்ல என் மேல தான் கோபம்னு நினைச்சேன். படிக்க படிக்க எனக்கு புல்அரிச்சு போச்சு..... நன்றி நன்றி நன்றி.... நீங்க பன் தான் வேணும்னா google -ல போய் தேடிப்பாருங்க கண்டிப்பா கிடைக்கும்..

நீங்க என் friend இல்லாமலா...... வருக தோழியே வருக....

யாரும் அறுசுவையில் உங்க பதிவ பாத்துருக்க மாட்டாங்க. இங்க help பண்ண நிறைய பேர் இருக்காங்க. ஆனா இன்னைக்கு யாரையும் காணோம் என்ன பண்ண. நீங்க வேணும்னா பாருங்க கண்டிப்பா யாராவது சொல்லுவாங்க...

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நான் கூகுலில தேடி பார்த்தேன். கோதுமை பன் இருக்கு. இம்மா பெரிய அருசுவை சமயல் தெரட்ல ஒரு பன் செய்து போடாதது ஆச்சரியா இக்குங்கோ, யாராவது சொல்லி தந்தா நானே செய்து போடுவேன்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

To Make Good Plain Buns
450g (1lb) Flour
170g (6oz) Good Butter
150ml (¼ pint) Milk (approx)
110g (4oz) Sugar
1 Egg Yolk
2 small tsp Baking Powder
Few Drops Lemon Essence

Warm the butter, without oiling it.
Beat with a wooden spoon.
Stir the flour in gradually with the sugar and mix together well.
Heat the milk to lukewarm, beat with it the yolk egg and the lemon essence and stir into the flour, etc.
Add the baking powder, beat the dough well for about 10 minutes.
Divide it into 24 pieces.
Put into buttered tins or cups.
Bake in a brisk oven from 20 to 30 minutes.

Time: 20 to 30 minutes.
Sufficient to make 12 buns.
Seasonable at any time.

இது ஓகே வானு பாருங்க. எனக்கு தெரிஞ்சா நானே சொல்லிருப்பேன். அறுசுவைலயும் இல்லைனு சொல்லிட்டீங்க. இது சரியா இருக்கானு பாருங்க. நானும் கூகில் தான் பாத்தேன்

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

//எந்த குறிப்பு படத்துடன் விளக்க பட்டு இருக்கு என்று அந்த குறிப்பின் பக்கதில் ஒரு சின்ன அடையாலம் போட்டா நல்லா இருக்கும். யாரும் சமைக்கலாம் பகுதில் இருக்கு. இருந்தாலும் மற்ற குறிப்புகள் பக்கத்திலும் போட்டால் நல்லா இருக்கும், அதாவது ஒரு சின்ன சிம்பல்.//

சோனியா குறிப்புகள் பக்கத்த ஒபன் பண்ணினா "குறிப்பு வகை"னு left side ல இருக்கு பார்த்தீங்களா. அதுல குறிப்பு, விளக்கப்பட குறிப்பு இருக்கு. உங்களுக்கு எந்த மாதிரியான குறிப்பு வேணும்னு ஈசியா பட்டியிலிட்டுக்கலாமே. நீங்க கேட்ட பன் குறிப்பு கூட்டாஞ்சோறுல இருக்கானு தேடி எடுத்து தரேன்.

ரொம்ப நன்றி ராதா, வினோஜா. நான் எல்லாம் செய்து வைத்துடேன். விரைவில் போட்டோவுடன் அருசுவைக்கு அனுப்பி வைக்கிரேன். அல்லாரும் வந்து மூக்குமேல சிசிசி வாய் மேல விர வைக்கிர மாதிரி. :))

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்