இங்க வாருங்கள் அனைவரும்.

ஹாய் தோழீஸ் இன்று யாரும் விவாதம் செய்ய தலைப்பு கொடுக்க வில்லை என்று நினைக்கிரேன். நான் சொல்லும் தலைப்பு அனைவருக்கும் பொருந்து என்றும் நினைக்கிரேன். இது ஏற்கனவே கேட்டு இருக்க என்று தெரிய வில்லை. இருந்தாலும் கேட்கிரேன்.

பெண்கள், ஆண்கள் இரண்டு பேரும் மகிழ்ச்சியாகவும், சந்தோசமாகவும், சுதந்திரமாகவும் இருப்பது திருமணத்திற்க்கு முன்பா அல்லது பின்பா. வாங்க பேசலாம். எல்லாரும்.

முதல்ல நான்னே சொல்ரேன். எனக்கு திருமணத்திற்க்கு பிறகு தான் சுதந்திரம், மகிழ்ச்சி, எல்லாம். ஏன் சொல்ரேன்னா. திருமணத்திற்க்கு முன்னாடி என்ன என் கன்வர் கூட பேசவே விடல ( காதலிக்கும் போது). வெளி போகவும் விடல. தம்மா துண்டு விசயம் இதுக்கு கூட அனுமதி இல்ல ஆனால் இப்பம் ரொம்ப ஜாலியா போரேன் ஹா ஹாஹா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனி எனக்கும் திருமணம் ஆனதும் தான் அதிக மகிழ்ச்சி, சுதந்திரம், அதிகப்படியான அன்பு என் கண் அவரிடம் கிடைத்தது.

திருமணம் முன்பு இது கிடைத்தது. ஆனால் திருமணம் ஆனால் எல்லாம் போயிவிடும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்!. ஆனால் எனக்கு அதுவும் கிடைத்தது.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

இனிய காலை வணக்கம். திருமணத்திற்கு பின் தான் சுதந்திரம், சந்தோஷம் எல்லாம். ஆனால் என்னவரிடம் கேட்டால்...................எல்லாத்தையும் நான் தான் அனுபவிக்கிறேன்னு ரொம்ப feel பண்றார்

பதில் தந்தவர்களுக்கு நன்றி. என்னப்பா எங்கள எதிர்த்து போட்டி போட யாரும் இல்லையா இங்க. ஐய்யோ வேதனை அவமான் வெட்கம். என்ன முத்து டயலாக் போல இருக்கா, அதே தாங்க. வாங்கபா எல்லாரும் இங்க, யாராவது திருமணத்திர்க்கு முன்னாடினி சொல்லுவிங்கனி பார்த்த யாரும் சொல்ல மாட்டுங்குரிங்க, என்னாட்சி வாங்க விவாததிர்க்கு. யாராவது சொன்ன நிரைய பேசலாம்னி பார்த்தா எல்லாம் நம்ம கட்சியா இருக்கு. என்னபா எல்லார் கனவர்களும் தங்கள் மனைவியை அவ்வளவு அன்பாவா பார்த்துகிராங்க. இதை என்னால் நம்மவே முடியல.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

பிறந்தவீட்டில் கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரம் இருந்தது???????????
திருமணத்திற்குப்பின் கணவரின் சுதந்திரத்தையும் நாமே
எடுத்துக்கொண்டுவிடுவதால். ஐயோ பாவம் கணவன்மார்கள்.

என்னப்பா எல்லாரும் சேம் சைட்டு கோல் போடுரிங்க, சரி நானே வரேன் மாரி. நான் கூறுகிரேன். திருமணத்திற்க்கு முன்பு தான் நமக்கு சந்தோசம் சுகந்திரம், மகிழ்ச்சி எல்லாம், எப்படி சொல்ரேன் என்றால். நம்ம அம்மா வீட்டில் இருக்கும் போது வேலை செய்ய வேண்டாம். கேட்ட பொருள் உடனே வாங்கி கொடுப்பாங்க, யாருக்கும் பயம் இல்லாமல், வீட்டில் ரொம்ப சந்தோசமா இருக்கலாம், ஆனால் நம் கன்வர் வீட்டில் அப்படி இருக்க முடியும்மா. ஒரு நாள் உடம்பு சரி இல்லாம் நம்ம வேலை செய்யாமல் இருந்தால் உடனே ஒரு சத்தம் வரும். உலகத்தில யாருக்கும் நோயே வரல என்ன இவளுக்கு மட்டும் அதிசயமா வந்து இருக்குனி. அப்புரம் என்ன ஓரே திட்டு மழை தான், வீட்டில் நம்ம ஃப்ரிடமா இருக்க கூட முடியாது. தூங்க போனா கூட எல்லாரும் தூங்க போன அப்புரம் தான் நம்ம தூங்க போகனும். இன்னும் இருக்கு அடுத்த பதிவில்.இப்படி அடிக்கி கொண்டே போகலாம்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

நானும் உங்க கட்சி தான் சோனியா, அம்மா வீட்டில் இருக்கும் போது நல்ல சந்தோஷமா ஹேப்பியா இருக்க முடியும். அப்போலாம் நமக்கும் சேர்த்து நம்ம பெற்றொர்களே யோசிப்பாங்க. இவளுக்கு இத செய்த நல்லது அத செய்த நல்லதுன்னு. நம்ம கடமை ஒழுங்கா படிச்சுட்டு, ஜாலியா நினைச்சத செய்துட்டு இருப்போம். டென்ஷன் ஃப்ரீ லைஃப்.
ஆனா திருமணாத்திற்கு பின் நமக்குனு ஒரு குடும்பம் அவர்களுடைய ஆரோக்கியம், நலன், கணவர், குழந்தை, மாமியார் மாமனார் இப்படி கடமைகள் அதிகரிச்சுடும். டென்ஷன் புல் லைஃப்

அய்யோ அதுக்காக யாரையுமே திருமணம் செய்துக்க வேண்டாம்னு சொல்லலாப்பா.

சரியா கூரினிங்க யாழினி. உன்மை தான். எந்த ஒரு டென்சன்னும் இல்லாம. முட்டையில் இருந்து வந்த கோழி குஞ்சுபோல் சந்தோசமாக மனதில் எந்த ஒரு சங்க்டமும் இல்லாமல் இருக்கும் காலம் அம்மா வீடு தான். திருமணம் முடிந்தா நம்ம வீடு வாசல் குழந்தை கனவர்னி எல்லா பாரமும் நமக்கு தான். அம்மா வீடு தான் நல்ல துள்ளிகுதித்து விளையாடும் காலம்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்