full body checkup

அனைவருக்கும் காலை வணக்கம்,இன்றைய தலைப்பு.வருடம் ஒரு முறை குடும்ப உறுப்பினர்கள், உடல் பரிசோதனை செய்து கொள்வது?பற்றி தங்களது கருத்துக்களை பதியவும்.(full body check up)

அப்பாடி இன்னைக்குதான் முதல் முறையா நான் முதல்ல பதிவு போடுறேன்.... ஆமினா இல்லை போல.......

கண்டிப்பா முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது....
வரும் முன் காப்போம்.....

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ரொம்ப நல்ல விஷயம்.
ஆனா நிறையா பேர் இதை செய்வதில்லை.
நாம் உழைப்பது நாம் கை,கால் சுகத்தோடு இருப்பதற்கே! ஆனால் “நாம் தான் நல்லா இருக்கோமே! அப்பறம் எதுக்கு செக்கப்? தேவையில்லாத செலவு” என்று பல அறியாமை குணம் கொண்ட மக்களால் கடைபிடிக்கப்படுவதில்லை.

வரும் முன் காப்பது சிறந்தது இல்லையா? கண்டிபாக அனைவரும் செய்ய வேண்டிய ஒன்று...

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தங்களுடைய பதிலுக்கு நன்றி. மாமி தங்களுக்காக தமிழில் பதிந்து இருக்கிran.


இனிமெல் என்னுடன் யார் கதைப்பதெண்டாலும் தமிழிலிலெயே கதைக்க்க வேணும்.
என்ன சரியோ?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நிச்சயம் அவசியமான ஒன்று. 9 வருடங்களுக்கு முன்பு எனக்கு gallstone இருப்பது தெரிய வந்தபின், தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்து வருகின்றேன். சரியாக ஒரு வருடம் என்று சொல்ல முடியாது. சில சமயங்களில் ஒன்றரை வருடங்கள் கழித்தும் செய்து வருகின்றேன். ஆனால், கண்டிப்பாக செய்து வருகின்றேன். திருமணத்திற்கு பிறகு எனது மனைவிக்கும் செய்து வருகின்றேன்.

சென்னையில் ஹைடெக், பாரத் ஸ்கேன்ஸ் நன்றாக இருக்கிறது. இரண்டிலும் மாற்றி மாற்றி செய்திருக்கின்றேன். தற்போது செட்டிநாடு ஹாஸ்பிடலில் மிகவும் நன்றாக செய்வதாக சொல்கின்றார்கள். எனது சகோதரர் குடும்பத்தினரோடு அங்கே சென்று செக் அப் செய்துகொண்டார். கட்டணமும் மிகக்குறைவு. அடுத்த மாதம் அங்குதான் செல்ல இருக்கின்றேன். ஹைடெக், பாரத் போன்றவை சில நிறுவனங்களுக்கு கட்டண சலுகை கொடுப்பார்கள். உங்கள் குடும்பத்தினர் அந்த நிறுவனங்களில் பணியாற்றினால், உங்களுக்கும் அந்த சலுகை கிடைக்கும். சாதாரணமாக சென்றால், கட்டணம் சற்று அதிகம்தான். இருப்பினும் அப்போலோ போன்றவற்றை ஒப்பிடும்போது மிகவும் குறைவு.

மாஸ்டர் ஹெல்த் செக்கப்பில் சில பிரிவுகள் வைத்திருக்கின்றனர். பரிசோதனைகள் அதிகம் என்றால் கட்டணமும் அதற்கு தகுந்தாற்போல் இருக்கும். தைராய்டு செக்கப் மாஸ்டர் ஹெல்த் செக்கப்பில் வருவதில்லை. அதையும் சேர்த்து செய்ய சொல்லவும். அது மிகவும் அவசியமான டெஸ்ட்.

25 வயதிற்கு உட்பட்டவர்கள் 4 வருடங்களுக்கு ஒருமுறையாவது செய்து கொள்ள வேண்டும். 25 - 40 என்றால் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நல்லது. 40 ஐ கடந்தவர்கள் வருடம் ஒருமுறை செய்துகொள்ளல் பாதுகாப்பானது. அதில் எக்ஸ்ரே மட்டும் தேவையென்றால்(ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால்) ஒவ்வொரு வருடமும் செய்யவும். இல்லையென்றால், அதை இரண்டு, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை செய்தால் போதுமானது.


உடல் நல பரிசோதனைகள் நெறய இருக்கு.
அதுல சிலதை இங்க கொடுக்கறென்.
1. சிறப்பு முழூஉடல் பரிசோதனை
2. முழு உடல் பரிசோதனை
3 வேலை தகுதி உடல் நல பரிசோதனை
4 வருட உடல் நல பரிசோதனை
5 திருமண தகுதி உடல் நல பரிசோதனை
6 இருதய நல பரிசோதனை
7 சர்க்கரை நல பரிசோதனை 1&2
8 நுரையீரல் பரிசோதனை
9 மூட்டு கை,கால் வலி பரிசோதனை
10 கல்லீரல் பரிசோதனை
11 சிறு நீரக பரிசோதனை
12 புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை
13 முதியோர் உடல் நல பரிசோதனை

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

full body check up திருச்சி யில் எங்க செய்யலாம்,தங்களது கருத்துக்களை சொல்லவும் தோழிகளே,

sharmila

பாரத் ஸ்கேன் இருக்குமே திருச்சில!
அங்கே பண்ணுங்க. எல்லாத்துலையும் பாரத் தான் பெஸ்ட்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எல்லாரும் நல்லாருக்கீங்களா? கண்டிப்பாக எல்லாரும் வருசத்துக்கு ஒரு முறை உடல் பரிசோதனை பன்னிக்கனும். அவசியம் எல்லாருமே இதை பன்னிக்கனும். ரொம்ப டென்சன் ஆகறமாறி வேளை செய்யர ஒவ்வொருத்தரும் சுகர், பிரசர் டெஸ்ட் பன்னனும். அது மட்டும் இல்லாம வீட்டில யாராச்சுக்கு ஏதாவது ஒடம்பு சரி இல்லாம போய் சரி ஆனாங்கன்னா அவங்களுக்கு சரி ஆனாலும் அதே டெஸ்ட் மறுபடியும் ஒரு முறை செய்து பார்த்து முழுமையா அவங்க ஒடம்பு சரி ஆயுருச்சான்னு கன்பார்ம் பன்னிக்கனும்.

பரம்பரையா இருக்க வியாதி கண்டிப்பா
அவங்க வாரிசுகளுக்கும் வரும் அதனால முதல்லயே அத தடுக்க என்னன்ன பன்னனுமோ அத பன்னனும் அவங்கல்லாம் அப்பப்ப செக் பன்னி பாத்துக்கனும்...

கேன்சர் பரம்பரை வியாதி இல்லைன்னு சொல்றாங்க ஆனாலும் அம்மா அப்பாகிட்ட இருக்க ஜீன்ஸ்லாம் குழந்தைகளுக்கும் இருக்கும்கறதால அவங்களையும் நோய் தாக்கலாம்னு சொல்றாங்க அதனால இத மாறி வியாதியால பாதிக்கப்பட்டவங்களோட வாரிசுகளும் கண்டிப்பா ஃபுல் செக்அப் பன்னிக்கரது அவங்களுக்கு மட்டும் இல்லை அவங்களை சுத்தி இருக்கவங்களுக்கும் நல்லது...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.


என்னை கேட்டா 30 வயசுக்கு மேல இருக்கறவா வருஷத்துகொருதரம் முழு உடல் பரிசோதனை செஞ்சுக்கறது நல்லதுனு சொல்வேன்.ஏன்னா எங்காத்ல 40 வயசானவா எதேச்சையா பரிசோதனை செஞ்சுக்க போன போது புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை செஞ்சு பாக்கனுமுனு டாக்டர் சொன்னா.

அதில் அவாளுக்கு கர்ப்பபை-ல புற்றுநோய் இருப்பதா சொல்லிட்டா.
ஆனா ஆரம்ப ஸ்டேஜா இருந்ததால பயப்பட வாண்டாம்.கொணபடுத்திடலாம்னு சொன்னா.இருந்தாலும் அவா பட்ட வேதனை தாங்கமுடியாம இருந்தது.
தலை முடி எல்லாம் கொட்டி போயிடுத்து.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்