பட்டி மன்றம் - 21 - பெருகி வரும் மீடியா

அறுசுவை தோழர் மற்றும் தோழிகளே..

வேலைப்பழு சற்று அதிகமாக இருந்த காரணத்தினால் சரியான நேரத்தில் தொடங்க வேண்டிய பட்டி மன்றம் சிறிது காலத் தாமதமாகிவிட்டது.. மன்னிக்கவும்.

இதோ உங்களுக்காக........

பெருகி வரும் தகவல் தொடர்பு வசதிகள் (டிவி, ரேடியோ, இன்டர் நெட்,மொபைல் ...இன்னும் பல) இன்றைய இளையத் தலைமுறையினர்களின் வளர்ச்சியை சீராக்குகிறதா ? சீரழிக்கிறதா?

உங்க கருதுக்களை கொண்டு வந்து கொட்டுங்க.. ;-)

இன்னொரு முறை பட்டிமன்ற விதிமறைகள் :
1.யார் பெயரையும் குறிப்பட்டு வாதாட கூடாது.
2.ஒரே ஒரு அணியை எடுத்து அதில் பேச வேண்டும்.. பொதுவாக இரண்டு பக்க கருத்தையும் கூறக்கூடாது.
3.ஜாதி, இனம், மொழி, என தேவையில்லாத சமூக பிரச்சனையை திணிக்கக்கூடாது.
4.யார் மனதையும் தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்தாமல் வாதாட வேண்டும்
5.நடுவரின் தீர்ப்பே உறுதியானது.. இறுதியானது.. (அப்பா தப்பிச்சாச்சு ;-)...இதுக்கு விதிமுறைனு எல்லாம் ஒரு பில்டப் குடுக்க வேண்டி இருக்கு.. ;-) )

நல்ல தலைப்பு ரம்யா.

இந்த பட்டிமன்றம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.

அனைவரும் வந்த பிறகு கலந்துக்கொள்கிறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா


நேக்கு எந்த பக்கம்?
நேக்கு தெரியல்லியே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மீடியா நல்ல பொழுதுபோக்கு, அதில் இருந்து தெரிந்து கொள்ள நிறைய உள்ளது. உலகம் எப்படி என்பது காண்போரின்ட் கண்களை பொறுத்துதானே. நிறைய நல்ல சேனல்கள் உள்ளது. நாம் அதை எவ்வாறு பார்க்கிறோம் என்பதை பொற்த்தே நன்மையும் தீமையும்.

அன்புடன்
பவித்ரா

வளர்ச்சியை சீராக்குதான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவேன் அறிவை வளர்க்கும் விஷயங்கள் இருக்கு சரியா பயன்படுத்தினால் அறிவை பெறலாம்

ஆமினா

ஆமினா.. வாங்க..இதுலேயும் முதல் பதிவு நீங்க தானா? சரி சரி.. பொறுமையா யோசிச்சு எந்த பக்கம்னு முடிவு பண்ணுங்க..ஆமினா முடிவு பண்ணிட்டா அவ்வளவு தான்.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மோகனா,,,

எந்த பக்கம்னு தெரிலியா? சரியா போச்சு போங்கோ.. இதுக்கே ஒரு பட்டிமன்றம் நடத்துவீங்க போலிருக்கே... ;-) சீக்கிரம் முடிவு பண்ணுங்கோ

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பவித்ரா..

இப்படி நல்ல பிள்ளையாட்டம் நல்லதும் இருக்கு, தீமையும் இருக்குனு சொன்னா எப்படி.. ?ஏதோ ஒரு பக்கம் சேர்ந்து வாதத்தை தொடருங்க . ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மீடியாக்களினால் நாம் பல நன்மைகளே அடைகிறோம். இன்று நாம் வீட்டில் இருந்த படி வுலகில் நடப்பதை தெரிந்து கொள்கிறோம் என்றால் அது மீடியாக்களினால் தான் எதயும் அளவோடு பயன் படுத்தினால் அமிதம்.அளவுக்கு மிஞ்சினால் அது விஷமே .

அதுதான் தெரியலயே, ரம்ஸ், தெரிஞ்சா நான் ஏன் அப்படி சொல்ல போறேன், கொஞ்சம் யோசிக்க நேரம் கொடுங்க.

அன்புடன்
பவித்ரா

உங்க பேர் என்ன ? நடுவர்கிட்ட நல்ல பேரு வாங்கனும்ல அதான் கேட்டேன்.. ;-)

சீராக்குதுனு சொல்லி அதென்ன முடிக்கும் போது ஒரு "க்கு".. சீராக்குதுனா எப்படினு சொன்னாதானே.. நம்ம சிங்கம் புலி எல்லாம் வந்தா சமாளிக்க முடியாது .. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்