அரட்டை அரங்கம்- 6 (2010)

அப்பப்ப சூடான தலைப்புகளில் வரும் பதிவுகளுக்கும்,சமீபத்திய படைப்புகளுக்கும் உங்க பதிவை,பதிலை,ஆதரவை தரவேண்டும் என இதன் மூலம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.....

(ஆமினா மேடம் மன்னிக்கவும்.நீங்கள் வேலை பளுவில் இருப்பீர்கள் என்று நினைத்தே இதை நானே ஆரம்பம் செய்து வைக்கிறேன்.
அன்பு தோழன்
ஷேக்)

எங்கள் மன்றத்தின் ஆனி வேரையே அசச்சு பாக்கரீங்களா நண்பர் ஷேக் அவர்களே, எங்கள் மன்ற தலைவி தன் மானச் சிங்கம்(இந்த வரியை மறக்காம எழுதனும்னு ஆமினா சொல்லியிருக்காங்க) தலைமையில் பெருவாரியான ரசிகர்கள் ஷேக் வீட்டின் முன் உன்னும் விரதப் போராட்டம்(செலவு? மாமிதான்)மூன்று நாட்கள் நடாத்துவோம் என்பதை பெரு மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன்

அன்புடன்
THAVAM

எங்கள் மன்றத்தின் ஆனி வேரையே அசச்சு பாக்கரீங்களா நண்பர் ஷேக் அவர்களே, எங்கள் மன்ற தலைவி தன் மானச் சிங்கம்(இந்த வரியை மறக்காம எழுதனும்னு ஆமினா சொல்லியிருக்காங்க) தலைமையில் பெருவாரியான ரசிகர்கள் ஷேக் வீட்டின் முன் உன்னும் விரதப் போராட்டம்(செலவு? மாமிதான்)மூன்று நாட்கள் நடாத்துவோம் என்பதை பெரு மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன்

அன்புடன்
THAVAM

தோழிகளே,
நான் போயிட்டு வரேன், எனக்கு தூக்கம் வருதுப்பா என்ன பண்றது உழைப்பாளியாச்சே, என்ன தவமணி அண்ணா சரி தானே, நாம்ல்லாம் உழைப்பாளியாச்சே.

குடு நைட், குடு நைட், குடு நைட், மாமியோ நான் போயிட்டு வாரேன் சாமியோ,

ஆமி, உங்களுக்கு ஒரு கட்டளை,
நான் நாளைக்கு வந்து பார்க்கும் போது, இந்த அரட்டை 10- தாண்டிடும்ன்னு நினைக்கிறேன், பாத்து பண்ணுங்க.

அன்புடன்
பவித்ரா

நஸ்ரின்

நான் தேடி பார்த்தேன்.வரவில்லையே....
நீங்க அட்மின்கிட்ட இதை பற்றி கேக்கலாமே?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரொம்ப நன்றி ஆமினா அட்மின்கிட்ட இந்த இழையில் கேற்கலாம

சிக்கன் கறி தோசை: http://www.arusuvai.com/tamil/node/15122
இறால் தொக்கு: http://www.arusuvai.com/tamil/node/6753
:))
ஆஷிக்

ரொம்ப நன்றி சகோதரரே

தென்றல் தாலாட்ட(தென்றலா...எங்கே...? சீலிங் பேன்தான்) இரவின் மடியில் உறங்கும் அறுசுவை அன்பு உள்ளங்களுக்கு இனிய இரவு வணக்கம் கூறி நாளை விடியும் என்ற நம்பிக்கையில் விடை பெறுவது விவசாயி
வணக்கம்

நன்றி

தாயிற் சிறந்த கோயிலுமில்லை

ஜெய் ஹிந்த்

அன்புடன்
THAVAM

இன்னிக்கு காலேல தான் அரட்டை 5-ல பதிவு போட்டுட்டு
போனேன். இரவு இப்போ வந்து பாத்தா அரட்டை6. அம்மாடி,
ஆத்தாடி தான். நான்பதிவு போட வந்தோடனே பாதிப்பேரு
குட்னைட் சொல்லிட்டு போயாச்சு. காலை எழுந்து வரப்போ
7 ஆ, 8ஆ. தெரியலயே?


அறுசுவையில வந்த
அன்பு கட்டளை(முக்கியமா ராதா ஹரி) க்கு
அபரிமிதமா கட்டு பட்டு
அத்தனை வேலைகளயும்
அம்மாவுடன்
அக்கறையா செய்ய
அதிகார கொழந்தேள்
அழைச்சுண்டு போய்ட்டா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்