அரட்டை அரங்கம்- 6 (2010)

அப்பப்ப சூடான தலைப்புகளில் வரும் பதிவுகளுக்கும்,சமீபத்திய படைப்புகளுக்கும் உங்க பதிவை,பதிலை,ஆதரவை தரவேண்டும் என இதன் மூலம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.....

(ஆமினா மேடம் மன்னிக்கவும்.நீங்கள் வேலை பளுவில் இருப்பீர்கள் என்று நினைத்தே இதை நானே ஆரம்பம் செய்து வைக்கிறேன்.
அன்பு தோழன்
ஷேக்)


கொஞ்சம் பொறுத்துக்கோங்கோ!
அம்மாவ ரெகுலர் செக்கப்புக்கு ஹாஸ்பிடல் கூட்டிண்டு போக வேண்டிருக்கு.
அதனால அரட்டைக்கு ஆமினாவ கூப்புட்டுக்கோங்கோ என்ன!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

குடு குடு மார்னிங்,
அண்ணா நான் வந்துட்டேன், ராதாக்கா நான் வந்துட்டேன்.

அன்புடன்
பவித்ரா

ஓகே மாமி போயிட்டு வாங்கோ. thanks for ur information. இல்லைன்னா உங்கள தேடிண்டே இருந்திருப்போம்.

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

குட் மார்னிங் பவி. ஒருவழியா வேலைக்கு வந்தாச்சா...

யாராவது இருந்தா கண்டினியு பண்ணிட்டு இரு. நான் கொஞ்சம் வேலையை முடிச்சுட்டு வரேன். அண்ணா வந்தா புடிச்சு வை. சண்டை போடனும்.

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

யாருமே இல்லை,
அண்ணா பாவம் நம்க்குள்ள சண்டை வேண்டாம், வெறம் கண்டிப்பு போதும், நானும் போயிட்டு அப்புறம் வரேன்.

அன்புடன்
பவித்ரா

ஹாய் friends எல்லாரும் காலையிலேயே வந்திட்டீங்க போலிருக்கே.எல்லாருக்கும் காலை வணக்கம்பா.சரியாய் அரட்டை இன்னும் ஆரம்பிக்க வில்லை என்று நினைக்கிறேன்.தவமணி அண்ணா நீங்க விவசாயி என்றதும் ரொம்ப ஆச்சரிய பட்டுவிட்டேன் அதே சமயம் பெருமையாகவும் இருக்கிறது. நம் அறுசுவையால் தான் வுகளை மாதிரி வுயர்ந்த நண்பர்கள் எல்லாம் எங்களுக்குகிடைகிரார்கள்.

காலையில வேலை, ஆனாலும் அருசுவை பக்கம் அப்பப்ப வந்துன்டு தான் இருக்கேன்,

அன்புடன்
பவித்ரா

//அன்பு தோழிகளே. எனக்கு தெரிந்த ஒரு பையன் கடன் தொல்லை காரணமாக திருநெல்வேலியிலிருந்து வந்து இங்கு தங்கி வேலை செய்தான்.இப்போது ஒரளவு பளு குறைந்து உள்ளதால் தன் கல்வியை வேலை செய்து கொண்டே டுடோரியல் மூலம் தொடர என்னிடம் ஆலோசனை கேட்கிறான். நானும் விரைவில் சொல்வதாக கூறியுள்ளேன். சென்னை தோழிகள் உங்களுக்கு தெரிந்த டுடோரியல் நிலையங்கள் பற்றியும் மற்ற தகவல்களையும் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். வேறு ஏதேனும் வழிகள் இருந்தாலும் கூறுங்கள். ப்ளீஸ் தோழிகளே//

தெரிந்தவர்கள், பாத்திமாக்கு //8த் மாணவனுக்கு உதவுங்கள்// என்ற இழையில் சென்று உதவுங்கள்.

அன்புடன்
பவித்ரா

ஹாய் பவி, சுந்தரி

என்னப்பா நடக்குது. பட்டிமன்றமும் பாதில நிக்குது. அரட்டையும் சோர்ந்து போச்சு. வந்து பாத்தா ஒரு பக்கம் கூட அரட்டைல நகரல. யார் கண் பட்டதோ?.....

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நல்ல வேளை யாருமே இல்ல நம்ம பாசமலர்கள் யாரையும் கானோம். என்னென்ன கேக்கப் போறாங்களோ... காப்பாத்துடா சாமி சொறி முத்து அய்யனாரே உனக்கு 10ரூவாய்க்கி சூடம் வாங்கி கொளுத்தரேன்டா காப்பாத்துப்பா...இப்ப பதிவ போட்டுட்டு ஒரே ஓட்டமா ஓடிர்லாம்... அப்பாடா தப்பிச்சன்டா சாமி... (அண்ணா...) ஐய்யய்யோ மாட்டிகிட்டேனே...

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்