அரட்டை அரங்கம்- 6 (2010)

அப்பப்ப சூடான தலைப்புகளில் வரும் பதிவுகளுக்கும்,சமீபத்திய படைப்புகளுக்கும் உங்க பதிவை,பதிலை,ஆதரவை தரவேண்டும் என இதன் மூலம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.....

(ஆமினா மேடம் மன்னிக்கவும்.நீங்கள் வேலை பளுவில் இருப்பீர்கள் என்று நினைத்தே இதை நானே ஆரம்பம் செய்து வைக்கிறேன்.
அன்பு தோழன்
ஷேக்)

10 ருபாய்க்கு இல்லை 100 ருபாய்க்கு வாங்கி சூடம் ஏத்தினாலும் அய்யனார் காப்பாத்த வரமாட்டாரு........

பதிவ போட்டுட்டு ஓடலாம்னு பாத்தா அண்ணிகிட்ட சொல்லி மத்யான சாப்பாட கட் பண்ண சொல்லிடுவோம் ஆமா.........

நான் தான் சண்டை போடனும்னு சொன்னேன். ஆனா உங்க அருமை தங்கச்சி பவி போனா போகுது அக்கா பாவம் அண்ணன்னு சொல்லிட்டா..........(ஒரே ஊர்ல ரெண்டு பேரும் அதான் பாசம் பொங்குது)

அதுனால போனா போகுதுனு மன்னிச்சுவிட்டுடலாம்னு முடிவுபண்ணிட்டேன்

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

//என்னோட இன்றைய ஸ்பெஷல்,நான் ஒரு எக்ஸாம் எழுதியிருந்தேன், அதுல பாஸ் அயிட்டேன்ப்பா, இன்னிக்கு தான் ரிஸல்ட் வந்தது, ஸோ எனக்கு ஒரு இன்கிரிமென்ட் உண்டு, ஆஹா, enjoy// பவித்ரா நேற்றை அரட்டை 5 இல் சொல்லி இருந்தீங்க, வாழ்த்த முடியல சாரி.(மதியானத்துக்கு மேல நெட் எடுக்கவே இல்ல.) அதனால இப்போ உங்களுக்கு என்னுடைய தாமதமான வாழ்த்த தெரிவிக்கிறேன். எக்ஸாமில் தேர்ச்சி பெற்றதற்கும், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ராதாக்கா,
என்னையும் மதிச்சு அண்ணனை மன்னித்ததற்கு நன்றி,

ஆனா ஊர் பாசம் இருந்தாலும், அண்ணனாச்சேன்னு தான் ஹெல்ப் பண்ணினேன், கல்யாண சீர் வேணுமே, அதான் இந்த ice, (ராதாக்கா அண்ணாக்கிட்ட சீர் பத்தி சொல்லாதீங்க)

அன்புடன்
பவித்ரா

வினோஜா,
ரொம்ப நன்றி,

அன்புடன்
பவித்ரா

நீ சொன்னேனு உங்க அண்ணன மன்னிச்சாலும் உங்க அண்ணன் இப்ப வரைக்கும் எஸ்கேப் தான். ஆளையே காணோம்..... கொஞ்சம் இந்த பக்கம் வந்து தலைய காட்டிட்டு போக சொல்லு............

பவி (பாவி) சீர் வேணும்ங்றதுக்காக உங்க அண்ணனுக்கு சப்போர்ட்டா?

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அது நம்ம அண்ணன்க்கா,
நானும் அவரைதான் தேடிட்டு இருக்கேன், இன்னிக்கு வரட்டும் அவருக்கு ஒரு பெரிய ஆப்பு காத்திட்டு இருக்கு, நான் போய் அவருக்கு சப்போர்ட் பண்ணினேன் பாருங்க, என் புத்தியே -----. சரி என்கிட்ட இருந்தும் அவர் great escape

அன்புடன்
பவித்ரா

பவி நானும் அண்ணனோட இந்த டயலாக்-க பாத்துட்டு சிறப்பிக்க அவரும் வருவாருனு பாத்தா எல்லாரையும் வர சொல்லிட்டு அவர காணோம்

அன்பு நண்பர் ஷேக் மொகைதீன் அவர்களே, எங்கள் மன்றத் தலைவி, தன் மானச் சிங்கம் அருமை சகோதரி ஆமினா அவர்களே, அறுசுவையில் அரட்டை அரங்க சூப்பர் ஸ்டார், அறுசுவை விடி வெள்ளி ¤மாமி¤ அவர்களே, பனங்காட்டு நரி(ஷேக் கவனிக்க) அன்பு ஆஷிக் அவர்களே, எனது அன்பு தங்கைகள் நெ1 ராதாஹரி அவர்களே நெ2 இல்லறத்தில் அடியெடுத்து வைக்க காத்திருக்கும் பவித்ரா அவர்களே, இன்னும் எனக்கு தெரியாத சகோதர சகோதரிகளே அரட்டை அரங்கம் 6 வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் ---- தவமணி

இது நம்ம அண்ணன் விட்ட டயலாக்.

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அப்பாடா...ஒரு வழியா இந்த அண்ணாவ மன்னிச்சுட்டேளா(மாமிகிட்ட பேசி பேசி பேச்சில் மாமியோட சாயலே வருது) பவித்ரா எக்ஸாம்ல பாசானது ரொம்ப சந்தோஷம் ஆனாகல்யாண சீர மறக்கவ இல்ல சரி நம்ம தங்கைக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறோம் தங்கை ராதா ஆத்துகாரரை கேட்டதாச் சொல்லுங்க

அன்புடன்
THAVAM

அண்ணா msg பாத்ததும் கோபம போயிடுது என்ன பண்றது....... ம்ம்ம்........

எங்க அண்ணா போனீங்க இவ்வளோ நேரம். ஆத்துக்காரர் பையன் அனைவரும் நலம். அண்ணிய சாப்பாடு போட விடமாட்டோம்னு சொன்னதும் வந்துட்டீங்க...........

அண்ணி என்ன சாப்பாடு இன்னைக்கு

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அண்ணா வந்துட்டார், நானும் அவரோட அந்த டயலாக் பார்த்தேன்.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்