அரட்டை அரங்கம்- 6 (2010)

அப்பப்ப சூடான தலைப்புகளில் வரும் பதிவுகளுக்கும்,சமீபத்திய படைப்புகளுக்கும் உங்க பதிவை,பதிலை,ஆதரவை தரவேண்டும் என இதன் மூலம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.....

(ஆமினா மேடம் மன்னிக்கவும்.நீங்கள் வேலை பளுவில் இருப்பீர்கள் என்று நினைத்தே இதை நானே ஆரம்பம் செய்து வைக்கிறேன்.
அன்பு தோழன்
ஷேக்)

ஏம்மா கோவிச்சுகிறீங்க நான் இங்கதான் இருக்கேன் நீங்கதான் கதை படிக்க போய்ட்டீங்க

அன்புடன்
THAVAM

இங்க யாரையும் காணோம் அதுனால தான்ணா போனோம். கோபம் எல்லாம இல்லை. சமாதானம் சமாதானம் சமாதானம் (அப்படினு நானும் பவியும் சொல்லிக்கிட்டோம்).

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

உங்க திரு விளக்கு பாடல் மிக அருமை. வரும் வெள்ளிக்கிழமை எங்க ஊர் கோயில்ல திருவிளக்கு பூஜை நடத்துறோம்

அன்புடன்
THAVAM

அப்படியா.... அண்ணிகிட்ட சொல்லி எங்களுக்கும் சேத்து வேண்டிக்க சொல்லுங்க. ஊர்ல இருந்தா இந்த மாதிரி விளக்கு பூஜை திருவிழா னு நல்லா இருக்கும். இங்க ஒன்னும் இல்லை. எல்லா நாளும் ஒரே மாதிரி தான் இருக்கு. உங்க கிட்ட garden இழை-ல ஒரு கேள்வி கேட்டுருந்தேன். முடிஞ்சா பதில் கொடுங்க..

பவி வளா்மதிக்கு கருத்து கொடுத்துகிட்டு இருக்காங்க.

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இப்படி மாத்தி மாத்தி பேசிகினே போயிகின்னே இருந்தா, அக்கா பையன் ஸ்ஸ்கூல்ல இருந்து வந்து சீவிடுவான் சீவி, என்னம்மே கரக்கீட்டா, அண்ணா உங்க ஊட்ல எத்தினி பேரு

அன்புடன்
பவித்ரா

இதோ இபாபோதே தோட்டம் செல்கிறேன்

அன்புடன்
THAVAM

ஏனுங்க அம்மணி.... எம்பையன் வந்துகிட்டு தான் இருக்கான்....... நீங்க கண்டினியு பண்ணுங்க நான் அப்பப்ப வந்துட்டு போறேன்...

(பவி, அண்ணா உங்க ஊர்ல செருப்ப தொட்டுட்டு போ னு சொல்றத நான் கொஞ்ச நாள் சொல்லிட்டு இருந்தேன். என்ன பண்றது 4 வருஷ பழக்க தோஷம் விடுமா...... எங்க வீட்ல இன்னமும் கேலி பண்ணிட்டு இருக்காங்க பா........)

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நான்.R,தவமணி உங்க அ( )ண்ணி சுமதி என் தெய்வங்கள் தந்தையார் தாயார்,
எங்கள் செல்வங்கள் மகன் கார்த்திக்கேயன்(வாலு)7th மகள் பாரதி(செல்லமே)6th அனைவரும் கூட்டு குடும்பம் என்gmail iyappa.thavam@gmail.com பவி ராதா உங்களோட விவரங்கள் இதில் சொல்லுங்க

அன்புடன்
THAVAM

அண்ணா,
உங்க வாலையும் செல்லத்தையும் கேட்டதா சொல்லுங்க.

அன்புடன்
பவித்ரா

உங்க ஊரை கண்டு பிடித்து விட்டேன், நான் அங்க தான் கல்லூரி முடித்தேன், ஊர் பேரை இதில் வெளியிடாதீர்கள்.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்