பட்டிமன்றம்-21 சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?

அனைவருக்கும் வணக்கம்.

ரம்யா வர இயலாத காரணத்தால் இந்த பட்டிமன்றத்தை நான் தொடங்குகிறேன்.

தலைப்பு:
இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?

சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை
வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?

எல்லோரும் வந்து உங்கள் வாதங்களை தொடங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்செல்ல உங்கள் ஒத்துழைப்பை தந்து வெற்றி பெற செய்ய அழைக்கிறேன்.

//"சரி கஸ்டம்தான்" அப்பாடா கடைசியா வேலைக்கு போவது கஷ்டம்னு ஒத்துக்குடீங்க.//
வசமா பாய்ண்ட் புடுச்சுட்டாங்க.

கண்ணதாசனே வேலைக்கு போனவராயினும் சுய தொழிலை தான் ஆதரித்தார் என்பது யோகாவின் வாதம். உண்மை தான் நாம் ஏன் அடுத்தவரிடம் கைகட்டி வேலை பாக்கணும்? ஏன் அடிமையா இருக்கணும்?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தமிழரசி நீங்க வாதத்தோட வந்தா தான் நான் தீர்ப்பு சொல்லுவேன்.
தீர்ப்பு செவ்வாய் அன்று சொல்லுவேன். அடுத்து வாதத்தோட வாங்க! (http://www.arusuvai.com/tamil/node/15745?page=3)
மேலே சொன்ன லிங்க் பார்க்க!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மாமி

அதானே! லஞ்சம் வாங்குபவர்கள், ஏமாற்றுபவர்கள் எல்லாம் சுய தொழில் செய்பவர்களா என்ன?

மாமி இன்னும் உங்ககிட்ட இருந்து அதிகமா எதிர்பாத்தேன். சீக்கிரம் வாங்க பெரிய வாதத்தோட. சேக் அண்ணாகிட்ட சவால் வேற விட்டுற்க்கேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//அந்தந்த ஊர் அரசியல் வாதி மனசுவைக்காம யாரும் சுய தொழில்-ல முன்னேற முடியாது.//

இந்த வார்த்தை உண்மையானது. அதிகமான ரிஸ்க், அரசியல்வாதிகளின் ஆதரவு இல்லாம இருந்தா சுயதொழில் முன்னேறவே முடியாது தான். இந்த கருத்தை எதிரணியினர் மறுக்குறீங்களா? ஒத்துக்குறீங்களா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அனைவருக்கும் மீண்டும் வணக்கம். நடுவரே கலக்குறீங்க!
என்ன எதிரணியினரே இப்படி அப்பாவியா இருக்கீங்க? சுயதொழில் செய்யும் போதுதான் தன்னம்பிக்கை கிடைக்குமா? அப்போ வேலைக்குப் போய் சம்பாதிப்பவர்கள் எல்லாம் தன்னம்பிக்கை இல்லாமத்தான் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்கன்னு சொல்றீங்களா? இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல?

இந்திரா நூயி இவங்களை நிறைய பேருக்கு தெரியும்னு நினைக்கிறேன்.பெப்சி இந்தியாவின் CEO. அவங்க எந்த சுய தொழிலிலும் செய்யலை ஆன ஒரு கம்பெனியில் தலைமை நிர்வாக அதிகாரி. ஃபார்ச்சுன் பத்திரிக்கையின் உலகின் வலிமையான பெண்கள் பட்டியலில் முதலிடத்தை நான்கு வருடமாக தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவங்களுக்கு கூட தன்னம்பிக்கை இல்லேன்னு சொல்றீங்களா?

சுயதொழில் செய்தா நமக்கு நாமே முதலாளியாம். இந்த எண்ணமே சுயதொழில் செய்பவருக்கு ஆப்பு வைத்து விடும். சுயதொழில் செய்பவன் அந்நிறுவனத்தின் முதல் தொழிலாளியாக இருந்தால் மட்டுமே அந்நிறுவனம் முன்னேறும். இல்லேன்னா இழுத்து பூட்டிட வேண்டியதுதான். இப்ப புரியுதா முதலாளியானாலும் தொழிலாளியா இருந்தாத்தான் முன்னேற முடியும்னு. அதான் நாங்க வேலைக்குப்போய் சம்பாதிப்பதே சிறந்தது என்கிறோம்.

எதிரணியினர் ஐடி துறையில் வேலையிழந்தவர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். ஆனால் வசதியாக @@@@ நிறுவன முதலாளியை மறந்து விட்டனர். செய்த தவறினால் ஒரே நாளில் கீழே விழுந்து விட்டார். இதுதான் சுயதொழில் செய்பவர்கள் நிலை. எத்தனை உயரத்திற்கு செல்கிறார்களோ சடாரென்று வீழ்ந்து விடவும் வாய்ப்பு உண்டு. அப்படி வீழ்ந்து விட்டால் மீண்டும் எழுவது என்பது மிகச்சிலரால் மட்டுமே முடியும் .

ஆனால் அதே @@@@ நிறுவனத்தில் பணியாற்றி வேலையிழந்த ஐடி ஊழியர்கள் சில மாதங்களிலேயே வேறு வேலைகளில் சேர்ந்து தங்கள் வருமானத்தை நிலை நிறுத்திக் கொண்டனர்.

எதிரணியினர் எல்லோரும் வேலைபார்த்து சம்பாதிப்பதுதான் சிறந்தது என்று போய்விட்டதால்தான் விவசாயம் நசித்து விட்டதாக சொல்கின்றனர். உண்மை நிலையை கிராமங்களில் போய் விசாரித்தால் தெரியும் அங்கே வேலை செய்ய ஆள் கிடைக்காமல் சிறு விவசாயம் செய்து வரும் ஆட்கள் படும் பாடு. விவசாயம் செய்பவருக்குத்தான் அந்த கஷ்டம் தெரியும்.

சுயதொழில் நான் முன்பே சொன்னது போல் எல்லோருக்கும் ஏற்றது அல்ல. சிலருக்கு மட்டுமே அதை திறமையாக செய்ய முடியும். அப்படி இல்லாமல் எல்லாரும் நானும் சுயதொழில் செய்யப்போறேனு இறங்கினால் உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா ன்னு தலையில் துண்டு போட்டுக் கொள்ளும் நிலைதான் வரும்.

அப்புறம் எதிரணியினர் சுயதொழில் செய்து புகழ்பெற்றவர் வரிசையில் அன்னை தெரசாவின் பெயரையும் குறிப்பிட்டிருந்தனர். மன்னிக்கவும் அவர் சுயதொழில் செய்தவர் இல்லை. ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் பாசத்தோடும் அன்போடும் சேவை செய்தவர். அந்த வகையில் தான் அவர் மங்கா புகழ் பெற்றார்.

வேலைக்குச் செல்லும் போது நேரம் காலம் பார்த்து பாசுக்கு பயப்படணுமாம். நேரம் தவறாமை எல்லோருக்கும் இருக்க வேண்டிய பண்பு. நம் நேரத்துக்கு என் தொழில் செய்து கொள்ளலாம் என்றால் வாடிக்கையாளர் நம்மை புறக்கணித்து அடுத்தவரிடம் போய் விடுவார்.

சுயதொழில் செய்பவர்களால் பல நேரங்களில் தன் குடும்பத்தோடு போதிய நேரம் செலவிட முடியாது. ஆனால் வேலை செய்பவர்களுக்கு அப்படியில்லை.

எப்படிப் பார்த்தாலும் வேலைபார்த்து சம்பாதிப்பதே சிறந்தது. நிம்மதியானதுன்னு சொல்லி இந்த வாதத்தை நிரைவு செய்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வருவேன். நன்றி வணக்கம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

///"சரி கஸ்டம்தான்" அப்பாடா கடைசியா வேலைக்கு போவது கஷ்டம்னு ஒத்துக்குடீங்க.
G. V. அவர்கள் புகழடைந்ததால் மட்டுமே இந்த விஷயம் பெரிதாக தெரிந்தது என்பதையே அந்த தோழி குறிப்பிட்டுள்ளார்.
கண்ணதாசன் அவர்கள், இந்த சுயதொழில் குறித்து மட்டும் "அர்த்தமுள்ள இந்துமதம்" புத்தகத்தில் நான்காம் பாகத்தில் (விடுதலை) 6 ஆம் கட்டுரையில் எழுதியுள்ளார். அவரையே "கவிதை ஆத்மாவுக்கு திருப்தி, சோறு போடாது" என்று குமாஸ்தா வேலை செய்யும் காலங்களில் தட்டியவர்கள் உண்டு. அவரும் பல கடன் தொல்லைகளில் அவதிப்பட்டவர் தான். ஆனால் அதன் பின்னும், அவர் சுயதொழிலையே ஆமோதிக்கிறார். "கைகட்டி நிற்காத அற்புதமான வாழ்க்கை" என்கிறார்.///
நான் கஸ்டம்தான் என்ற சொன்ன வார்த்தையை மட்டும் கட் பன்னி காப்பி பன்னிட்டு புத்திசாலித்தனமாக வாதம் செய்ததாக அர்த்தம் இல்லை எதிரணி சகோத்ர சகோதிரிகளே!
கஸ்டம் எதில்தான் இல்லை என்ற பின் சொன்ன கருத்துக்களையும் கவனிக்க!!
ஜீ.வீ.புகழ் அடைந்தால் என்ன அடையாவிட்டால் என்ன?புகழ் அடைந்தவரின் உயிர் என்ன சாதரணமாக போயிற்றா?உயிர் போனது எதனால்?வேலை செய்ததாலா?இல்லை தொழிலின் காரணமாகவா?
ஓஹோ கவிஞர்கள் எல்லாம் தொழிலதிபர்களா?கண்ணதாசன் சொன்னதாகவே இருக்கட்டும்!அவர் பெயர் வாங்கியது தொழில் செய்தா?இல்லை கவிதை எழுதியா?எதிரணியினர் கவிதைகளையும் கவிஞர்களையும் வியாபாரிகளாக்கி விட வேண்டாம்!ஆனால் ஒன்றை புரிந்து கொள்க!கவிதை என்பது சுய தொழில் அல்ல.அது அது சமூக சேவை!அதன் பிரதான வேலை சம்பாதிப்பது அல்ல.மக்களின் மூளைகள சலவை செய்வது.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

/////போட்டி ஏற்படரதாள பணம் ஒரே இடத்தில சேர்வது தடுக்கபடுது//.
//நம்ப சந்திதியர் எல்லோருக்கும் அடிமை வாழ்க்கை தான் மிஞ்சும்.//
எல்லாரும் வேலைக்கே போகணும்னு நெனச்சா காலமெல்லாம் கொத்தடிமைகளா இருக்க வேண்டியது தான்.
சுய தொழிலில் இல்லாத மனநிறைவு வேலைக்கு போறவங்க கிட்ட கிடைக்குமா?
டிட்டைர் ஆன பிறகு பாவம் கஷ்ட்டபடுவாங்க. ஆனா சுயதொழில்ல அப்படி இல்ல. நம்மால நாம் முன்னேறினோம் என்ற மனதிருப்தி கிடைக்கும். ///

அட யாரங்கே அடிமை வாழ்க்கை பற்றி பேசியது?பாரதி பிறந்த இந்த மண்ணில் அடிமை வாழ்வை பற்றி யாரும் பேச வேண்டாம்!நல்ல வேலை பாரதி இல்லை.இல்லையென்றால் இதெற்கெதிராக தீ கவிதை புனைந்திருப்பான்.ஆங்கிலேயன் இந்த நாட்டைவிட்டு போன போதே அடிமை வாழ்வெல்லாம் அகன்றுவிட்டது.
ஓஹோ ஒருவரின் கட்டளைக்கு கீழ் படிந்தாளோ அல்லது ஒருவரை சார்ந்திருந்தால் அதை அடிமை வாழ்க்கை என்பதா?அட பாவமே!
வியாபாரிகள் மட்டும் என்னவாம்?அவர்கள் மக்களை சார்ந்துதானே தொழில் செய்கிறார்கள்!
மக்களுக்கு அவர்கள் அடிமையா என்ன?
பெண்கள் எல்லாம் கணவனுக்கு கட்டுப்பட்டு வழ்கிறார்களே அவர்கள் எல்லோரும் அடிமைகள்தானா?
கண்ணதசன் சுயதொழில் சிறந்தது என்று சொன்னது அவரின் போது கருத்து.அவர்கூட வேலையாள் வைத்திருந்ததை மறந்துவிட வேண்டாம்!(அப்போது மட்டும் வேலைபணி சிறந்ததோ)
சில பணக்காரர்களும்..அரசியல்வாதிகளும் வேலையாட்கள் இன்றி வெளி செல்லவே முடியாதே!அப்போது சுயதொழில் செய்பவர்கள் உதவிக்கு போவார்களா?
சரி எலாரும் சுயதொழில் செய்தால் என்னவாகும்?முடிவெட்டும் தொழிலாளி,கார்ப்பரேஸனில் வேலை செய்யும் தொழிலாளி இவர்கள் எல்லோரும் சுயதொழில் செய்ய தொடங்கினால்..??நாடே நாறிவிடாதா நடுவர் அவர்களே???
அப்போது யார் வருவார்களாம்??சுய தொழில் செய்பவர்களா???

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நன்றி கவிசிவா

அருமையான வாதங்களோடு வந்துற்கீங்க.

நேரம் தவறாமை பற்றி சொல்லியது அருமை. சுயதொழில் செய்பவர்களிடம் ‘நம்ம தொழில் தானே! எப்ப வேண்டாலும்போகணும்னு எண்ணம் இருக்கும். ஆனா வேலைக்கு சென்று சம்பாதிப்பவர்களுக்கு இந்த நிலை இல்லாவிட்டாலும் அவர்களால் தங்கள் குடும்பங்களுடன் விஷேஷ நாட்களிலும்,விடுமுறை நாட்களிலும் சந்தோஷமாக கழிக்க முடியும். சுயதொழில் செய்பவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்ற நினைப்பிலேயே குடும்ப சந்தோஷத்தை தொலைக்கிறார்கள்.

எதிரணியினர் கொஞ்சம் பயந்து போட்டாங்க உங்க வாதத்தில்.ஆனாலும் அவர்கள் சளைத்தவர்கள் அல்ல. உங்களுக்கு உடனே பதிலடி கொடுப்பாங்க பாருங்க!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சேக் அண்ணா!

என்ன லாவகமா பாய்ண்ட் புடிச்சுற்காங்க அதிரணியினர்?
விடுவாரா அண்ணா!

யோகலெட்சுமி இதுக்கு பதில் சொல்லுங்க!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//அதானே! லஞ்சம் வாங்குபவர்கள், ஏமாற்றுபவர்கள் எல்லாம் சுய தொழில் செய்பவர்களா என்ன?
மாமி இன்னும் உங்ககிட்ட இருந்து அதிகமா எதிர்பாத்தேன். சீக்கிரம் வாங்க பெரிய வாதத்தோட. சேக் அண்ணாகிட்ட சவால் வேற விட்டுற்க்கேன்.///

ஆமாம் அதுதான் உண்மை.வேலை செய்பவர்கள் யாரையும் ஏமாற்ற வேண்டிய அவசியம் என்ன?தொழில் செய்பவர்கள்தான் மக்களை ஏமாற்ற வேண்டும்.ஒரு கிலோ கத்திரிக்காய் 25 ருபாய் என்றால் அதை 50 ருபாய்க்கு விற்க்கவேண்டியது..இது ஏமற்று இல்லையா?
பால் வியாபாரம் செய்கிறவர்கள் சொல்லும் பொய் த்ண்ணீர்!மளிகை கடை வியாபாரிகளின் பொய் கலப்படம்!மீன் வியாபாரிகளின் பொய் விலை.பொய்!பொய்!எங்கும் பொய்!எதிலும் பொய்!
சென்னை போன்ற நகரங்களில் நடைபாதைகளில் மற்றும் ப்ளாட் பாரங்களின்ல் சில வியாபாரிகளை பார்த்திருப்பீர்கள்!அவர்கள் போலிஸுக்கு கமிஷன் கொடுக்காமல் போனால் அவர்கள் பாடு திண்டாட்டந்தான்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்