பட்டிமன்றம்-21 சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?

அனைவருக்கும் வணக்கம்.

ரம்யா வர இயலாத காரணத்தால் இந்த பட்டிமன்றத்தை நான் தொடங்குகிறேன்.

தலைப்பு:
இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?

சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை
வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?

எல்லோரும் வந்து உங்கள் வாதங்களை தொடங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்செல்ல உங்கள் ஒத்துழைப்பை தந்து வெற்றி பெற செய்ய அழைக்கிறேன்.


இன்னைக்கு சூழலுக்கு ஏத்தது சுய தொழில்தான்.
நாம சுய தொழில் பண்ணறத்துக்கு அரசாங்கத்ல லோன் எல்லாம் கோடுக்கறா.
என் பொண் பெரியவ பிஸ்னஸ் செய்ய ரொம்ப ஆசை பட்டா.
அவளுக்கு PMEGP லோன் கெடச்சு இப்போ பிஸ்னஸ் நன்னா பண்ணிண்டுருக்கா.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

னன்ட்ரி..ஹமினா .என் பெயர் ஜமுன என் கனவர் பெயர் ராகெஷ் ..என்னொட அம்மா ஊரு சென்னை தா ..ஆனால் நாங்கெ இப்பொ டுபாய் லெ இருகொம் எஙலுக்கு கல்யானம் ஆகி 4வருடங்க்ல் ஆகபொகுது இன்னும் கொழந்தை இல்ல்லை எதுதா என்னொட கதை .....

அப்படி இல்லை பொன்னி மேடம்.அதுல ஒரு ஸ்வாரஸ்யம் இருக்கு அதான்.தப்பா ஏதும் சொல்லலையே?சில சமையங்களில் எந்த அணி வீக்கா இருக்குதுன்னு(ஐ மீன் ஸ்ட்ரெந் கம்மியா இருக்கு)பார்த்துட்டு அந்த அணி சார்ப்பா பேசுவேன்.வேற ஒன்னும் இல்ல மேடம்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நான் சார்ன்னு போட்டதால மேடம்ன்னு போட்டுட்டீங்களா வேண்டாம் பொன்னி போதும் அட ஒரு பெருந்தலை எட்டி பாக்குறாங்க போலிருக்கு ரெடியாகுங்க ஷெக்

ponni

சொந்த தொழில் தான் என்சாய்ஸும். மூலதனம் வேணும்ங்கரது
உண்மைதான். வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும் அதே சமயம்
டென்ஷனும் அதிகம்தான். இத்தனையும் இருந்தாக்கூட நம்ம சொந்த
முயற்சியால் பிசினசில் முன்னேற்றம் காணும்போது ஒரு மனத்திருப்தி கிடைக்குமே. அதற்கு ஈடே கிடையாது.

சுய தொழில் தான் மிகவும் சிறந்தது. நம்முடைய புதிய முயற்ச்சிகள் சோதனை செய்து பார்க்க முடியும்.
அன்புடன்
ஜெயா

நடுவரே

நன்றி.. ;-)

தலைப்பை நான் பிறகு சொல்கிறேன். இந்த பட்டி மன்றம் நன்றாக செல்ல என் வாழ்த்துக்கள். ;(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நல்ல ஆரோக்கியமான தலைப்பு. வெற்றியடைய வாழ்த்துக்கள். பட்டிமன்றத்தில் பங்கேற்றுள்ள அனைத்து தோழ - தோழிகளுக்கும் என் வணக்கங்கள் :)

நான் எடுத்துக்கொண்ட தலைப்பு இன்றைய சூழலுக்கு ஏற்றது சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பது ;-

என் கருத்தை இங்கே வைக்கின்றேன். இப்ப ஒரு பியூனா வேலை செய்ரவர் கடைசிவரைக்கும் பியூனா இருந்து வாழ்க்கைய முடிச்சுக்க வேண்டியது தான். அதே போல தான் ஒரு தட்டச்சு வேலை செய்பவரும் அப்படித்தான். செக்கு மாடு ஒரே இடத்தில் உழன்று கொண்டு அதன் வாழ்க்கையை முடித்துக் கொள்வது போல வேலைக்கு சென்று சம்பாதிப்பவர் நிலையும். காலை 9 மணிக்கு அலுவலகத்திற்க்கு போய் மாலை 5 .30க்கு வீடு திரும்புவது. இந்த 8 மணி நேர பணியில் அவர்கள் எந்த புது விஷயங்களையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தினமும் செய்யும் ஒரே வேலையை தான் திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்பார்கள். இதில் அவர்கள் செய்யும் வேலைக்கு தகுந்தாற்போல தினமும் சம்பளத்தை உயர்த்தியா தரப்போகிறார்கள்?

ஆனால், சுயதொழிலில் மேற்கூறிய அனைத்தும் சாத்தியம். ஏனென்றால் இங்கு நமக்கு நாமே தொழிலாளி. முதல் போடுவது அவரவர் வசதியை பொறுத்தது. விருப்பத்தை பொறுத்தது. இங்கு நீங்கள் யாருடைய கட்டளைக்கும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு உங்களுக்கு செயல் சுதந்திரம் உள்ளது. அதனால் உடனுக்குடனே முடிவுகளை எடுத்து தொழில் வளர்ச்சி அடைய செய்து நிறைந்த பணம் சம்பாதிக்கலாம். ஒரு அலுவலகத்திலோ, அல்லது தொழில் நிறுவனங்களிலோ பணி செய்பவர்கள் இது போல முக்கியமான முடிவுகளை மேலதிகாரியின் ஒப்புதலின்றி சுயமாக எடுக்க முடியுமா? அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் தாங்கள் வாங்கும் ஊதியத்திற்கேற்ற வேலைதான் செய்வார்கள். அவர்களுக்கு நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து பெரிய அளவில் ஒன்றும் பொறுப்பு இருக்க வாய்ப்பில்லை.

அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் அவரவர் படிப்புக்கேற்ற ஊதியம், பதவிக்கேற்ற ஊதியம் வாங்குவார்கள். சரி, இன்று அதிகமான வேலை செய்தார்கள் அவர்களுக்கு ஒரு 500 ரூபாயை கூட்டி தரலாம் என்றா அவருடைய மேலதிகாரி நினைப்பார்? இன்னைக்கு நீ நல்லா வேலை செஞ்சே பா, இதே போல தினமும் செய் என்று முதுகில் தட்டி கொடுத்துவிட்டு செல்வார். அவருடைய அந்த ஒரு புகழ்ச்சியால் பொருளாதார நிலை ஒன்றும் உயர்ந்த்து விடாது. அதே மேலதிகாரி நீங்கள் நாளை கவனக்குறைவாக ஏதாவது தவறிழைத்து விட்டால் நேற்று நீங்கள் கடினமாக உழைத்ததையும் மறந்து அவமதிக்கவும் தயங்க மாட்டார்.

இதே கடின உழைப்பை நீங்கள் உங்களுடைய சுயதொழிலில் போட்டு பாருங்கள். அது உங்களை எங்கேயோ கொண்டு போகும். சுய தொழில் செய்து எவ்வளவோ பேர் இன்று வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கவில்லையா?

மாத சம்பளம் வாங்குவோருக்கு ஊதிய உயர்வு வருடத்திற்கொருமுறையோ, இரு வருடங்களுக்கு ஒருமுறையோ. ஆனால் சுய தொழிலில் உங்களுடைய கடின உழைப்பை மூலதனமாக போட்டால், ஊதியத்திற்குக்கு வேலை செய்பவர்கள் ஓய்வூதியமாக பெறும் தொகையை ஓரிரு நாட்களிலேயே ஈட்டி விடலாம். நீங்கள் காலம் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

சுய தொழில் செய்து சம்பாதிக்கும் போது நீங்கள் இந்த நேரத்திற்க்கு தான் போக வேண்டும். இந்த நேரத்திற்க்கு தான் திரும்ப வேண்டும் என்ற கால வரையறை எதுவும் இல்லை. நீங்கள் நேரம் காலம் பார்க்காமல் பணி செய்து உங்கள் வருவாயை உயர்த்தலாம். சுய தொழில் செய்வதால் நமக்கு பரந்த அறிவு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் விஷயமாக பல புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதன் வாயிலாக அவர்களிடம் இருக்கும் புதிய தொழில் நுணுக்கங்களை கற்றுணர்ந்து அவற்றை நம் தொழிலில் புகுத்தி வருவாயை பெருக்கலாம்.

சுயதொழில் செய்வதால் நம் குடும்பத்திற்க்கு மட்டுமின்றி நான்கு பேர் குடும்பங்களிலும் விளக்கேற்றலாம். சொந்தக்காலில் நிற்கிறோம் என்ற தன்னிறைவுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழலாம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வணக்கம் நடுவர் அவர்களே இன்றைய சூழல்ல வேலைக்கு செல்வது சிறந்தது என் வாதம் கடைசியாக வரும்

அன்புடன்
THAVAM

சொந்த தொழிலுக்கு மூலதனம் வேணும்.வேலைப்பளு,டென்ஷன் அதிகம். மன உளைச்சல் தான் மிச்சம் அதற்கு வேலைக்கு செல்லும் போது வருமானம் குறைவாயினும் நிறைவான வாழ்க்கை.

நிஷா

மேலும் சில பதிவுகள்