பட்டிமன்றம்-21 சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?

அனைவருக்கும் வணக்கம்.

ரம்யா வர இயலாத காரணத்தால் இந்த பட்டிமன்றத்தை நான் தொடங்குகிறேன்.

தலைப்பு:
இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?

சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை
வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?

எல்லோரும் வந்து உங்கள் வாதங்களை தொடங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்செல்ல உங்கள் ஒத்துழைப்பை தந்து வெற்றி பெற செய்ய அழைக்கிறேன்.

என்ன ஆமினா எங்க ஆளு பவி எவ்வளவு கரெக்ட்டா சொல்லிருக்காங்க. பயம் தாங்க காரணம். சுயதொழில் அப்படின்னா ரிஸ்க் தான்.

உடனே வாழ்க்கை ல ரிஸ்க் எடுக்காம இருக்க முடியுமா அப்படின்னு எதிரணி சொல்லுவாங்க. அப்படி சொல்றவுங்கள முதல்ல ரிஸ்க் எடுக்க சொல்லுங்க. கொஞ்சம் நடைமுறைக்கு ஒத்துவர மாதிரி பேசுங்கப்பா. எப்ப பாரு ஆத்ம திருப்தி, சந்தோஷம், நிம்மதி அப்படின்னு

சுய தொழில் தப்புன்னு நாங்க சொல்லல. ஆனா எல்லாருக்கும் இது நடைமுறைல ஒத்துவராது அப்படின்னு தான் சொல்றோம். வேலைக்கு போவது எல்லாராலையும் முடியும்.

அதுக்கப்பறம் இந்த பூந்தோட்டம், காய்கறித்தோட்டம் இதெல்லாம் சொல்ல நல்லாருக்கும். அதை ஆரம்பிக்கிற கூலித்தொழிலாளி கிட்ட தான் கேக்கனும் அது என்ன தோட்டம்னு.

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அட சுயதொழில் செய்ய நம் நாட்டுல நல்ல சூழல் நிலவுதா?! எனக்குத் தெரியாதே!

கேட்பவர்களெல்லாம் சொல்வார்கள் சுயஹொழில்தான் சிறந்ததுன்னு. ஒருகாலத்துல நானும் அப்படித்தான் சொல்லிக்கிட்டு இருந்தேன். ஆனால் அதற்கான முயற்சிகளில் இறங்கும் போதுதான் வில்லங்கமே ஆரம்பிக்கும். அப்புறம் நம்ம்ம கட்சிக்கு வந்துடுவாங்க.

5வருடங்களுக்கு முன் சுயதொழில் செய்யலாமேன்னு யோழிச்சிக்கிட்டு இருந்த நேரம். பெட்ரோல் நிலையங்களுக்கான ஏஜன்சிக்காக அப்ளை செய்தோம். நேர்முகத்துக்கு வரச்ச் சொன்னாங்அ. நாங்களும் எல்லா பேப்பர்களும் தயார் செய்துக்கிட்டு போனோம். அவர்கள் லைசன்ஸ் தருவதற்காக எங்களிடம் கேட்ட லஞ்ச தொகை எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை 20லட்சம்தான். அதன்பின் பெட்ரோல் நிலையத்திற்கான இடம் கட்டுமான செலவு எல்லாம் சேர்த்தால் கிட்டத்தட்ட 80லட்சம் தேவைப்பட்டது.

அப்போதுதான் என்னவர்கிட்ட நான் கேட்டேன். இவ்வளவு செலவளித்து பிசினஸ் ஆரம்பித்து போட்ட தொகையை எடுக்க எப்படியும் 10வருடங்கள் ஆகிவிடும். அதுக்கு இந்த பணத்தை பேங்கில் டெப்பாசிட் பண்ணினா 5வருடங்களில் இரட்டிப்பாகி விடுமே. எதுக்கு தேவையே இல்லாம அவனுக்கு 20லட்சம் கொடுக்கணும்னு. அப்புறம் என்ன அந்த பிசினஸ் ஐடியாவை அப்படியே விட்டுட்டோம்.

அடுத்தும் கொஞ்ச நாள்ல மீண்டும் சுயதொழில் ஆர்வம் வந்துது. நாங்கள் இருக்கும் இடத்தில் ஃபர்னிச்சர்கள் மிக மலிவு. சரி இங்கிருந்து எக்ஸ்போர்ட் பண்ணி அங்கே ஷோரூம் வைத்து வியாபாரம் செய்யலாம்மேன்னு நினைத்தோம். அதற்கான முதல் கட்ட வேலைகளில் இறங்கினோம். நம் நாட்டில் எக்ஸ்போர்ட் இம்போர்ட் லைசன்ஸ் வாங்குவதற்காக அதற்கான அலுவலகத்தை அணுகினோம். நல்ல அதிகாரி. எல்லாவற்றையும் பொறுமையா கேட்டுட்டு அவர் சொன்னது. "அம்மா நீ என் மகள் போல இருப்பதால் சொல்கிறேன். துறைமுகத்தில் நீங்கள் உங்கள் சரக்கை இறக்கி வெளியில் கொண்டுவர பலருக்கு பல கட்டங்களில் காசு கொடுக்க வேண்டி வரும். உங்களிடம் எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தாலும் நிலைமை இதுதான். இல்லேன்னா உங்களுக்கு நல்ல அரசியல் பின்பலம் அல்லது அதிகாரிகள் பின்பலம் இருக்க வேண்டும்" என்றார். அந்த முயற்சியையும் அப்படியே விட்டோம். நேர்மையாக தொழில் செய்வதென்பது நம் நாட்டில் சற்று சிரமமானதுதான் என்பதை வெட்கத்தோடும் வேதனையோடும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இதையெல்லாம் அனுபவப்பட்ட பிறகும் என்னால் எப்படி சுயதொழில் சிறந்தது என்று சொல்ல முடியும். இட்லிகடை துணிகடைன்னு மீண்டும் எதிரணியினர் அதையே சொல்லக் கூடாது. ஒருவர் சுயதொழில் ஆரம்பிக்கணும்னா இப்போது செய்யும் வேலையில் கிடைக்கும் வருமானத்திற்கு அதிகமாக அல்லது அதேஅளவாவது கிடைக்கும் அளவிலுள்ள சுயதொழில்தான் செய்ய விரும்புவார்கள். அப்படி இல்லேன்னா வேலை செய்வதே மேல்னுதான் இருப்பாங்க. அதுதான் ப்ராக்டிகலாக நடக்கும் விஷயமும் கூட.

நம் நாட்டைப் பொறுத்தவரை சுயதொழில் என்பது எல்லோருக்கும் உகந்தது அல்ல. அதனால் வேலைக்குப் போவதே சிறந்தது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//இதுல பாதி பேர் ஹோம் மேக்கர்ஸ் தானே, சுய தொழில் பத்தி இவ்வளவு நல்ல விஷயம் தெரியும் போது ஏன் அவங்களே ஒரு தொழில் ஆரம்பிக்கலாமே நடுவர் அவர்களே, நமக்கு தான் கணவர் இருக்காரேங்கற தைரியமா, இல்லை நாம் வீட்டை மட்டும் பாத்துன்டா போதும்ங்கற நினைப்பா அதெல்லாம் ஒன்னும் இல்ல.//

வேலைக்கு போகிறவர்கள் மனைவி வேணும்னா, கணவர் வேலை பார்கிறார் அப்படீன்னு வீட்டை மட்டும் பார்த்துகிட்டு இருக்கலாம். மாறா,
சுயதொழில் பார்க்கிறவங்க மனைவி அவங்க கணவன் தொழிலில் பங்கு எடுத்துக்குவாங்க. எங்க வீட்ல குடியிருப்பவர் மருந்து கடைகளுக்கு கவர் சப்ளை பண்றாரு. அவங்க மனைவி வீட்டு வேலைகள் முடிச்சிட்டு, ஒய்வு நேரங்கள்ல கவர் ஓட்ட அவர் கூட உதவியா இருக்காங்க. எதிர் வீட்ல Press நடத்துறவங்க இருக்காங்க, அவங்க பெண்டாட்டி தான் அவர் வலது கை, அவர் பிரிண்டிங் பண்ண customer கூட உட்காந்து அவங்க விருப்ப படி design செய்து தராங்க. பல கடைகளில், கணவர் கடைக்கு வேண்டிய சாமான் வாங்கபோற சமயங்களில், மனைவி கடையை பாத்துக்கிறாங்க. மனைவின்னு குறிப்பிட்டு இல்ல, குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பெரும் ஒய்வு நேரங்களில் உதவியா இருக்காங்க. இது போன்ற பல பேர் உங்க வேட்டையும் சுற்றி இருப்பாங்க, நல்லா கவனீங்க தோழி. நானும் சுய தொழில் தான் செய்கிறேன். என் அப்பா அம்மாவையும் உடன் இருந்து பார்த்துகிட்டு, என் பொருளாதாரத்தையும் நிலை நிறுத்திக்க முடியுது, நிம்மதியான வாழ்க்கை வாழ முடியுது. பல பேர், வேலை செய்ய போறேன்னு வெளிநாடுகள்ள, தன வயசான அம்மா அப்பாவை தனிய விட்டுட்டு, ஏன் சிலர் தன மனைவி, குழந்தைகளை விட்டுட்டு, தனிய சென்று வேலை பார்கிறாங்க. இது சரியா? நல்லா யோசிச்சு பாருங்க. எனவே, சுயதொழிலே சிறந்த தொழில்னு சொல்றோம்.

இதுவும் கடந்து போகும்.

"உடனே வாழ்க்கை ல ரிஸ்க் எடுக்காம இருக்க முடியுமா அப்படின்னு எதிரணி சொல்லுவாங்க. அப்படி சொல்றவுங்கள முதல்ல ரிஸ்க் எடுக்க சொல்லுங்க. கொஞ்சம் நடைமுறைக்கு ஒத்துவர மாதிரி பேசுங்கப்பா. எப்ப பாரு ஆத்ம திருப்தி, சந்தோஷம், நிம்மதி அப்படின்னு"

நடப்பவை எல்லாம் நன்மைக்கே (ALL HAPPENDS ARE GOOD)

சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி், போராடும் வரை மனிதன். நீ மனிதன்:)-

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இவையெல்லாம் எதிரணி தோழிகளின் விருப்பமான வாசகங்கள். நீங்க ரிஸ்க் எடுக்க பயப்படலாமா. ஆத்ம திருப்தி, சந்தோஷம், நிம்மதி இதெல்லாம் வாழ்க்கைல எவ்ளோ முக்கியம் இல்லையா. அவங்க, அவங்க இதுக்கு தான் அலையறாங்க. அது சுயதொழிலில் கிடைக்குதுன்னு நீங்களே ஒத்துக்குடுறீங்க இல்லையா. உங்க பக்கத்துல படிப்பு இருந்தா போதும் அப்படீங்கறது ஒரே பலம்னா. சுயதொழில் செய்தா ஆத்மா திருப்தி கிடைக்கும் என்கிரதுதாங்க, எங்க ஒரே பலம், எப்ப பாரு அதை திருப்பி திருப்பி சொல்லுவோம் தான்.

"நல்லதையே நினைத்தால் நல்லதே நடக்கும்" இல்லையா நடுவர் அவர்களே. அதனால் நல்லதா நினைச்சி தொழில் துவங்கி பார்க்கலாமே. வெற்றி கிடைக்கும்.

எந்த சந்தோஷமும் நிரந்தரம் இல்ல, எந்த வருத்தமும் நிரந்தரம் இல்ல.
"இதுவும் கடந்து போகும்" அப்போ நமக்கு பிடிச்ச விசயத்த முயற்சிக்கரதுதானே நல்லது.

இதுவும் கடந்து போகும்.

உங்க அனுவங்கள அழகா Share பண்ணதுக்கு எங்கள் நன்றிகள்.

"இதையெல்லாம் அனுபவப்பட்ட பிறகும் என்னால் எப்படி சுயதொழில் சிறந்தது என்று சொல்ல முடியும். இட்லிகடை துணிகடைன்னு மீண்டும் எதிரணியினர் அதையே சொல்லக் கூடாது. ஒருவர் சுயதொழில் ஆரம்பிக்கணும்னா இப்போது செய்யும் வேலையில் கிடைக்கும் வருமானத்திற்கு அதிகமாக அல்லது அதேஅளவாவது கிடைக்கும் அளவிலுள்ள சுயதொழில்தான் செய்ய விரும்புவார்கள். அப்படி இல்லேன்னா வேலை செய்வதே மேல்னுதான் இருப்பாங்க. அதுதான் ப்ராக்டிகலாக நடக்கும் விஷயமும் கூட."

ரிஸ்க் எடுக்கும் பொழுது ரொம்ப கவனமா தான் எடுக்க வேண்டி இருக்கு. ஒரேடியா சுயதொழில் வர யோசனையா இருந்தா, செய்கிற வேலையில் இருந்துகிட்டே சிறிய தொழில் ஆரம்பிச்சு, பின்பு அதை மேலே கொண்டுவரலாம். அப்போ ரிஸ்க் எவ்ளவோ குறையுது.

//சுய தொழில் தப்புன்னு நாங்க சொல்லல. ஆனா எல்லாருக்கும் இது நடைமுறைல ஒத்துவராது அப்படின்னு தான் சொல்றோம். வேலைக்கு போவது எல்லாராலையும் முடியும். //

வேலைக்கு போறதே தப்புன்னு நாங்கலும் சொல்லல. ஆனால் கண்டிப்பா சுயதொழில் செய்யணும், வேலை செய்துகிட்டே செய்யறதும், முழு முயற்சியா இறங்கி செய்றதும் உங்க விருப்பம். இது நடைமுறைல ஒத்துவரும் அப்படின்னு தான் சொல்றோம். சுயதொழில் தான் சிறந்தது. "பராதீனம் ப்ரானசங்கடம்." வேலைக்கு போறவங்களே உலகத்துல இல்லை அப்படீன்னு ஒரு நிலை வந்தாலும் சுயதொழில் வாழும், வாழமுடியும். ஆனால் சுயதொழிலே இல்லை அப்படீன்னு ஒரு நிலை ஏற்பட்டா, வேலைக்கு போறவங்க நிலை என்ன. சுயதொழில் தான் அடிப்படை, ஆரம்பம், மூலம், மறக்கவேண்டாம். சுயதொழிலே சிறந்தது.

மீண்டும் நாளை வருவேன்.

இதுவும் கடந்து போகும்.

ராதாவும், கவிசிவாவும் வேலைக்கு போறது தான் நல்லது அப்படின்னு சொன்னாங்க. கவிசிவா சொன்ன உரிமம் சம்பந்தமான விஷயமும் யோசிக்க கூடியதே!

இல்லை,இல்லை......
சுய தொழில் தான் சிறந்தது. அப்படின்னு யோகா 3 பதிவு போட்டு போய்ட்டாங்க. சொல்ல போனா சுய தொழில் தான் சிறந்ததுன்னு அடிச்சு சொல்லிட்டு போய்ட்டாங்க.

யாராவது எதாவது சொல்ல விரும்புறீங்களா?
வாங்க சீக்கிரம் வாதத்தோட!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//சுயதொழில் பார்க்கிறவங்க மனைவி அவங்க கணவன் தொழிலில் பங்கு எடுத்துக்குவாங்க. எங்க வீட்ல குடியிருப்பவர் மருந்து கடைகளுக்கு கவர் சப்ளை பண்றாரு. அவங்க மனைவி வீட்டு வேலைகள் முடிச்சிட்டு, ஒய்வு நேரங்கள்ல கவர் ஓட்ட அவர் கூட உதவியா இருக்காங்க. எதிர் வீட்ல Pரெச்ச் நடத்துறவங்க இருக்காங்க, அவங்க பெண்டாட்டி தான் அவர் வலது கை, அவர் பிரிண்டிங் பண்ண cஉச்டொமெர் கூட உட்காந்து அவங்க விருப்ப படி டெசிக்ன் செய்து தராங்க. பல கடைகளில், கணவர் கடைக்கு வேண்டிய சாமான் வாங்கபோற சமயங்களில், மனைவி கடையை பாத்துக்கிறாங்க.//

சுயதொழில்ல இன்வெஸ்ட் பண்றவங்களுக்கு பேரு முதலாளி, அதுல பங்கு எடுத்து உதவறவங்களுக்கு பேருதான் தொழிலாளி, மனைவியாவே இருந்தாலும் வேலையில் உதவினால் நீங்களும் உங்க கணவர் கிட்ட வேலை பார்ப்பதாகவே தான் அர்த்தம்.

என்ன உறவு என்பதால் நீங்க சம்பளம் இல்லாத வேலைக்காரர்கள், அதுவே வித்தியாசம்.

அன்புடன்
பவித்ரா

//சுயதொழில்ல இன்வெஸ்ட் பண்றவங்களுக்கு பேரு முதலாளி, அதுல பங்கு எடுத்து உதவறவங்களுக்கு பேருதான் தொழிலாளி, மனைவியாவே இருந்தாலும் வேலையில் உதவினால் நீங்களும் உங்க கணவர் கிட்ட வேலை பார்ப்பதாகவே தான் அர்த்தம்.

என்ன உறவு என்பதால் நீங்க சம்பளம் இல்லாத வேலைக்காரர்கள், அதுவே வித்தியாசம் //

ஆனால் வரும் லாபம் இருவருக்கு மட்டுமே.. உங்கள் பக்கத்தில் அப்படி கிடையாது அதையும் நினைவில் கொள்ளுங்கள்.

பவித்ராவின் கருத்துக்கு சாந்தினி உடனே பதில் ஏவுகணை அனுப்பிட்டாங்க? பவித்ரா என்ன சொல்ல போறீங்க?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//ஆனால் வரும் லாபம் இருவருக்கு மட்டுமே.. உங்கள் பக்கத்தில் அப்படி கிடையாது அதையும் நினைவில் கொள்ளுங்கள்.//

நஷ்டம் வந்தாலும் அவர்களுக்கே, நாங்கள் எப்போதும் stability யோட இருப்போம், எங்க கம்பெனி நஷ்டத்தில் ஓடினாளும் சம்பளம் கண்டிப்பா கொடுக்கணும், இல்லைன்னா எங்களை காப்பாற்ற உழைப்பாளர் குழு உள்ளது. நாங்க எல்லாரும் "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற கொள்கையுடன் இருக்கிறோம். பேராசை என்பது கிடையாது. வாழ்க்கையில் படி படியாக முன்னேறுகிறோம்.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா நடுவர் அவர்களே,
வங்கிகளில் வாரா கடன் என்று ஒன்று உள்ளது, அதாவது வங்கிகளில் கடனை வாங்கி திரும்ப செலுத்தாமல் விட்டு விடுவார்கள், அந்த மாதிரி வாராக்கடன்கள் பட்டியலில் சென்று பார்த்தால் அதிக பட்சமான பெயர்கள் சுயதொழில் செய்பவர்களுடயதுதான், இது அப்பட்டமான் உண்மை.

அதற்காக வேலைக்கு செல்பவர்கள் பெயரே இல்லை என்று சொல்லவில்லை, அது குறைவே.

//ஷேக் அண்ணா, ராதாக்கா, கவிசிவா, சீக்கிரம் வாங்க ப்ளீஸ், என்னால முடியல, கை வலிக்குதுப்பா//

ஆமி நான் அவர்களை கூப்பிட்டது தவறு என்றால் மன்னிக்கவும்

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்