பட்டிமன்றம்-21 சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?

அனைவருக்கும் வணக்கம்.

ரம்யா வர இயலாத காரணத்தால் இந்த பட்டிமன்றத்தை நான் தொடங்குகிறேன்.

தலைப்பு:
இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?

சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை
வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?

எல்லோரும் வந்து உங்கள் வாதங்களை தொடங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்செல்ல உங்கள் ஒத்துழைப்பை தந்து வெற்றி பெற செய்ய அழைக்கிறேன்.

/பாதி பேர் ஹோம் மேக்கர்ஸ் தானே, சுய தொழில் பத்தி இவ்வளவு நல்ல விஷயம் தெரியும் போது ஏன் அவங்களே ஒரு தொழில் ஆரம்பிக்கலாமே நடுவர் அவர்களே, நமக்கு தான் கணவர் இருக்காரேங்கற தைரியமா, இல்லை நாம் வீட்டை மட்டும் பாத்துன்டா போதும்ங்கற நினைப்பா அதெல்லாம் ஒன்னும் இல்ல.

எங்க கம்முனு இல்லாம நாம் எதையாவது ஆரம்பிச்சு அது எதுலியாவது போய் முடிஞ்சு சொதப்பிட்ட என்ன பண்றதுங்கற பயம் மட்டும் தான்.//

கண்டிப்பாக நான் கணவர் இருக்கும் தைரியத்தில் தான் ஹோம் மேக்கர் ஆனேன்.

மேலும் எதிரணியினரின் பேச்சில் எதிர்மறையான எண்ணங்கள்,நம்பிக்கையின்மை,விரக்தி இவை தான் மேலிடுகின்றன...எதிரணியினருக்கு இப்பொது தேவை நம்பிக்கையான வார்த்தைகள் தான்.
மேலும் நாங்கள் அனைவரும் செய்யும் வேலையை விட்டுவிட்டு சுயதொழில் தொடங்க சொல்லவில்லை. பரம்பரைத் தொழில் எனில் அப்பாவிம் அனுபவம் பிள்ளைக்கு இருக்கும்.
புதிதாக துவங்குபவர்கள் சிறிய அளவில் தொடங்கினால் தான் தொழில் சூட்சமங்களும் புரியும். அப்படி ஆரம்பித்து வெற்றி பெற்ற்வர்கள் தான் எத்தனையோ பேர்.
எவ்வளவு தான் லஞ்ச லாவண்யங்கள் இருந்தாலும் அதிக முதலீடு இல்லாமல் வெற்றி பெற்றவர்கள் இருக்கிறார்கள் ! இருக்கிறார்கள்!..
எனவே சுயதொழிலே சிறந்த்தது இன்றைக்கும் என்றைக்கும்.

//நஷ்டம் வந்தாலும் அவர்களுக்கே, நாங்கள் எப்போதும் stability யோட இருப்போம், எங்க கம்பெனி நஷ்டத்தில் ஓடினாளும் சம்பளம் கண்டிப்பா கொடுக்கணும், இல்லைன்னா எங்களை காப்பாற்ற உழைப்பாளர் குழு உள்ளது.//

சமீபத்தில் வந்து சென்ற ”ரெசசென்” அப்போ வேலை போனவங்களுக்கு லாம் யாருஙக நஷ்ட ஈடு கொடுத்தா??
//போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து"//
இப்படி டாடா ,அம்பானி,பில்கேட்ஸ்னு எல்லொரும் நினைசிருந்தா உலகத்தில வேற வேற கோடியில இருக்கிற நீங்களும் நானும் பேசிட்டு இருக்க முடியுமா?

//உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா நடுவர் அவர்களே,
வங்கிகளில் வாரா கடன் என்று ஒன்று உள்ளது, அதாவது வங்கிகளில் கடனை வாங்கி திரும்ப செலுத்தாமல் விட்டு விடுவார்கள், அந்த மாதிரி வாராக்கடன்கள் பட்டியலில் சென்று பார்த்தால் அதிக பட்சமான பெயர்கள் சுயதொழில் செய்பவர்களுடயதுதான், இது அப்பட்டமான் உண்மை//

அப்படி இருந்தும் அரசங்கம் பல சமயங்களில் கடனை தள்ளுபடி செய்து..
திரும்ப கடன் கொடுத்துட்டு தானே இருக்கு...

ஒரு முறை பேருந்து தொழிலாளர்கள் எல்லாம் ஸ்டிரைக் செய்தார்களே (அரசாங்க உத்யோகஸ்தர்கள் தான் ) அப்போது அவர்களின் கோரிக்கைதான் நிறைவேற்றப்பட்டதா??

”கைத்தொழில் ஒன்றைக் கற்றுதுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”னு வாழ்கிற்வர்கள் நாம்.காலசூழ்னிலையால் வேலைக்குப் போனாலும் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் தான் அதிகம்.

//சமீபத்தில் வந்து சென்ற ”ரெசசென்” அப்போ வேலை போனவங்களுக்கு லாம் யாருஙக நஷ்ட ஈடு கொடுத்தா??//

Recession வந்தப்போ வேலையிழந்தவர்கள் அனைவரும் வேறு வேலை தேடிக் கொண்டு சென்றுவிட்டார்கள், அதில் பெரிதும் பாதிப்படைந்தது சுய தொழில் செய்பவர்கள் தான், நான் ஏற்கனவே சொல்லிட்டேன், நாங்க சுய தொழில் செய்ய முன் வரவில்லை என்பதற்கு காரணம் நம்பிக்கை இல்லா தன்மை இல்லை, நீங்க சொன்ன டாட்டா எல்லாரும் ஆரம்பிச்சது வேணா அவங்களா இருக்கலாம் ஆனா, அவங்களையும் உயர்த்தியது அங்கு வேலை செய்பவர்கள்தான்.

அய்யோ நடுவர் அவர்களே, நான் மேலே சொன்ன கருத்துக்கள் எல்லாத்தியுமே ஏற்கனவே எங்கள் அணியினர் சொல்லி விட்டனரே, மறுபடியும் எதிரணியினர், ஆரம்பித்த இடத்திலேயே வந்து முடிக்கின்றனரே, ஆமினா அவசரம் சீக்கிரம் வாங்கோகோஒகோகோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

அன்புடன்
பவித்ரா

வேறு வேலை கிடைக்க காரணமே மற்றொரு முதலாளி தானே... நான் இப்போதைக்கு ஜூட் விடுகிறேன். மீண்டும் நாளை வருகிறேன்.

//வேறு வேலை கிடைக்க காரணமே ஒரு சுய தொழிலை தொடங்கிய ஒரு முதலாளி தானே... நான் இப்போதைக்கு ஜூட் விடுகிறேன். மீண்டும் நாளை வருகிறேன்.//

அட ஆமாங்க நான் இல்லைன்னு சொல்லலை ஆனாலும் வேலைக்கு செல்வது தான் நமக்கு செகுரிட்டி, நாம் வாழ்வை நினைத்த படி வாழ்னும்னா அது சுய தொழில் செய்தால் முடியாது, அதுல ரிஸ்க் அதிகமப்பா,

ஆமி என்னால் முடியல

அன்புடன்
பவித்ரா

இன்றைய சுற்று ஆரம்பிக்க போவது யார்?

வாங்க.........வாங்க,.......

உங்க பொன்னான வாதத்தை அள்ளி கொட்டுங்க.........

வேலைக்கு செல்வதா? சுயதொழிலா?

இப்போதைய சூழ்நிலையில் இரு அணிகளும் சம அளவிலேயே வாதாடியுள்ளனர். ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை அவர்களின் வாதங்களிலேயே தெரிகிறது.

தீர்ப்பு திங்கள் காலையில் வெளிவரும் என்பதால் குறுகிய கால இடைவெளியில் உங்கள் அணிக்கு பலம் சேர்க்க வாருங்கள்!!!!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//இதுல பாதி பேர் ஹோம் மேக்கர்ஸ் தானே, சுய தொழில் பத்தி இவ்வளவு நல்ல விஷயம் தெரியும் போது ஏன் அவங்களே ஒரு தொழில் ஆரம்பிக்கலாமே நடுவர் அவர்களே, நமக்கு தான் கணவர் இருக்காரேங்கற தைரியமா, இல்லை நாம் வீட்டை மட்டும் பாத்துன்டா போதும்ங்கற நினைப்பா அதெல்லாம் ஒன்னும் இல\\
நீங்கள் சொன்ன மாதிரி ஹோம் மேக்கர்ஸ் அனைவரும் வீட்டு வேலை பார்த்துட்டு சும்மா இருப்பதில்லை.வுதாரனமாக என்னை எடுத்துக்கொண்டால் வீட்டையும் பார்த்துக்கொண்டு என் கணவருக்கு வுதவியாக வும் இருக்கிறேன்.எங்கள் தொழிலை நான் செய்வதற்கு நான் சம்பளம் கேட்டால் வீட்டில் நான் செய்யும் வேலைகளுக்குமல்லவா சம்பளம் தரவேண்டும்.அப்படிஎன்றால் நாங்கள் குடும்ப தலைவிய இல்லை தொழிலாளியா?
எதிரணி தோழி சுய தொழில் செய்வதற்கு பல வழியில் முயன்றதை பற்றி எழுதியிருந்தார்.அவர் முயற்சிக்கு hats up . அவர் எழுதியிருந்த தொழில் அவர்களுக்கு பொருத்தமானது இல்லை என்று நினைகிறேன் அதனால் தான் அவர்கள் அதை கைவிட்டு விட்டீர்கள். மீண்டும் தொழில் செய்யவேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு கட்டாயம் வரும் இதுவே மனித இயல்பு

நமக்கு தகுந்த தொழில் இருக்கும் போது அதையே செய்யலாம். அதற்கு சுய தொழில் மேல் குறை சொல்ல வேண்டாம் என சுந்தரி சொல்கிறார். இதற்கு எதிரணியினரின் பதில் என்னவோ?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//அட சுயதொழில் செய்ய நம் நாட்டுல நல்ல சூழல் நிலவுதா?! எனக்குத் தெரியாதே!// னு

எதிர்ணியினர் லஞ்சத்தைக் காரணமா சொல்றாங்களே!! நடுவர் அவர்களே லஞ்சம் என்பது புற்று நோய் போன்றது. அதை வளரவிட்டால் நம்மையே அழித்து விடும்.நோய் வந்தால் நோயை சரி செய்யப் பார்க்கவேண்டுமே ஓழிய சும்மா புலம்பக்கூடாது. நன்கு படித்த எதிரணியினருக்கு இதெல்லாம் நன்றாகவே தெரியும் என நம்புகிறேன்.

அலுவலகங்களில் நமக்கு நடக்க வேண்டிய விஷயங்கள் நியாயமானதாக இருந்தால் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
லஞ்சம் கொடுத்தால்தான் சாதிக்க முடியுமா? கொடுக்க முடியாது என்று நாகரிகமகக் கூறவேண்டியதுதானே... nano techology வந்து விட்ட இந்தக் காலத்தில் அவர்கள் குற்றத்தை நிரூபிக்க வசதி வாய்ப்புகளா இல்லை..

மக்களிடம் கொண்டு சேர்க்க கட்சி சாராத ஊடகங்களும் இருக்கின்றன்..
பேச்சைப் பதிவு செய்ய கைத்தொலைபேசியே போதுமே??
கேமரா பேனா, கேமரா கண்ணாடி என எத்தனையோ வந்து விட்டன...

இப்படிப் பட்ட சூழலில் லஞ்சத்தையா காரணமாகக் கூறுவது??? வேடிக்கையாக இருக்கிறது நடுவை அவர்களே!!
தடைகள் என்பது எல்லா இடம்களிலும் உள்ளது தான். சுய தொழிலில் மட்டும் அல்ல... தடைகளைக் களைந்து விட்டு முன்னேறுவது தான் மனித இயல்பு நடுவர் அவர்களே!!

//nano techology வந்து விட்ட இந்தக் காலத்தில் அவர்கள் குற்றத்தை நிரூபிக்க வசதி வாய்ப்புகளா இல்லை.

மக்களிடம் கொண்டு சேர்க்க கட்சி சாராத ஊடகங்களும் இருக்கின்றன்..
பேச்சைப் பதிவு செய்ய கைத்தொலைபேசியே போதுமே??
கேமரா பேனா, கேமரா கண்ணாடி என எத்தனையோ வந்து விட்டன... //

I Like this quote, I Like Very Much, Really should be appreciated, Well done Chnagdini.
-AshiQ

மேலும் சில பதிவுகள்